ட்யூப்லெஸ் டயர்தான் சிறந்ததா? உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

By Saravana

கார், பைக்கின் கையாளுமையில் டயர்களின் பங்கு மிக முக்கியமானது. கையாளுமை மட்டுமின்றி, அதிர்வுகளை குறைத்து பயணிப்போருக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதிலும், எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு என அனைத்து முக்கிய அம்சங்களிலும் வாகனங்களில் டயர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

டயர்களின் தொழில்நுட்பம் பல்வேறு கட்டங்களை தாண்டி கொண்டிருக்கும் இவ்வேளையில், ட்யூப்லெஸ் டயர்கள் தற்போது வாகனங்களில் பொருத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு ட்யூப்லெஸ் டயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதற்கான காரணங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களின் சில பாதகங்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


ட்யூப்லெஸ் டயர்

ட்யூப்லெஸ் டயர்

டயர் மற்றும் ட்யூப் என இருவேறு பாகங்களாக இல்லாமல், கூடுதல் வலுகொண்ட டயரிலேயே காற்று நிரப்பும் தொழில்நுட்பம்தான் ட்யூப்லெஸ் டயர். இதற்கான ரிம்மில் டயூப்லெஸ் டயரை பொருத்தி மவுத்நெட் மூலமாக காற்றை நிரப்பிடுவதன் மூலம், இந்த டயூப்லெஸ் டயர்கள் பல்வேறு அனுகூலங்களை வழங்குகின்றன. அவற்றை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

உறுதி

உறுதி

ட்யூப்லெஸ் டயர்களின் உட்புறம் ஹாலோ பியூட்டைல், குளோரோ பியூட்டைல் உள்ளிட்ட பிரத்யேக வேதிப்பொருட்களின் பூச்சுடன் உறுதியாக வடிவக்கப்பட்டுள்ளன. இதனால், வெப்பமாகாது என்பதுடன் உட்புறத்திலிருந்து காற்று வெளியேற வாய்ப்பு மிக மிக குறைவு.

பேலன்ஸ்

பேலன்ஸ்

வாகனத்தின் எடைக்கு தக்கவாறு டயருக்குள் காற்று சமநிலையுடன் இருப்பதால் டயரின் சுழலும் வேகம் மற்றும் சுழலும் தன்மை சீராக இருக்கும். இதனால், அதிக பாதுகாப்பையும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் பெறலாம்.

எடை குறைவு

எடை குறைவு

ட்யூப் டயர்களைவிட ட்யூப்லெஸ் டயர்கள் எடை குறைவானவை. இதனால், டயரினால் சஸ்பென்ஷனுக்கு ஏற்படும் பளு குறைக்கப்படும். இதன் முக்கிய அனுகூலம் என்ன தெரியுமா?...

 கையாளுமை

கையாளுமை

எடை குறைவான ட்யூப்லெஸ் டயரின் டிசைன் கார், பைக்கிற்கு சிறப்பான கையாளுமையை வழங்கும். இதனை ஓட்டுனர் முழுமையாக உணர முடியும்.

பஞ்சர் பிரச்னை

பஞ்சர் பிரச்னை

ட்யூப்லெஸ் டயர்களை பொருத்தும்போது ஊற்றப்படும் சீலண்ட், டயரில் சிறிய பஞ்சர்களை தானே சரிசெய்து காற்று வெளியேறுவதை தவிர்த்துவிடும். மேலும், டயூப்லெஸ் டயர் பஞ்சரானால்கூட ட்யூப் டயர் போன்று காற்று உடனே இறங்கிவிடாது. சீராக இறங்கும் என்பதால், அதனை உணர்ந்து கொண்டு அருகிலுள்ள பஞ்சர் கடையில் பஞ்சர் போட்டுவிடலாம். அல்லது பஞ்சர் கிட் இருந்தால், நீங்களே எளிதாக பஞ்சர் போட முடியும். மேலும், ட்யூப் டயர்களில் லிவர் பயன்படுத்தி கழற்றும்போது, ட்யூப் சேதமடையும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை ட்யூப்லெஸ் டயரில் கிடையாது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

விபத்துக்களுக்கு டயர் பஞ்சராவதும், ட்யூப் வெடிப்பதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சாதாரண டயர்கள் எளிதில் பஞ்சராவதற்கும், ட்யூபில் உராய்வு அதிகமாகி வெடிப்பதற்கான ஆபத்துக்களும் அதிகம். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களின் வெளிப்புறம் அதிக தடிமனுடன் கூடிய உறுதியான ரப்பரை கொண்டிருப்பதால் காற்று திடீரென வெடித்து வெளியேறாது.

வெடிக்காது

வெடிக்காது

வாகனங்களில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும்போது டயர், ட்யூப் இடையில் ஏற்படும் அதிக உராய்வு காரணமாக ட்யூபில் உள்ள காற்று சூடாகி வெடிக்கும் ஆபத்து உள்ளது. ஆனால், ட்யூப்லெஸ் டயர் அதிவேகத்தில் செல்லும்போதும் அதிக சூடாகாது என்பதால் டயர் வெடிக்கும் வாய்ப்பு குறைவு.

ரோடு கிரிப்

ரோடு கிரிப்

சில சமயங்களில் வாகனத்தின் எடை அதிகமாகும்போது ட்யூபில் காற்று சமநிலை இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் பேலன்ஸ் இல்லாமல்(வாப்லிங்) செல்லும். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களில் இந்த பிரச்னை இருக்காது. தரை பிடிப்பும் அதிகமாக இருக்கும். ட்யூப்லெஸ் டயரின் சில பாதகங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பொருத்துவது கடினம்

பொருத்துவது கடினம்

ரிம்மில் ட்யூப்லெஸ் டயரை பொருத்தும்போது மிக கவனமாக பொருத்த வேண்டும். ரிம்மிற்கும், டயருக்கும் இடையில் காற்று வெளியேறாதவாறு மிக லாவகமாக பொருத்த வேண்டுயம்.

கவனம்

கவனம்

ரிம்முடன் சேர்த்து பொருத்தப்படுவதால், ரிம் பெட்டில் பாதிப்பு ஏற்பட்டால் ட்யூப்லெஸ் டயரில் காற்று இறங்கிவிடும். எனவே, கவனமாக ஓட்டுவது கூடுதல் பாதுகாப்பை தரும். மொத்தத்தில், ட்யூப் டயரைவிட ட்யூப்லெஸ் டயர் பல்வேறு வகைகளில் பயன் தருகிறது. எனவே, டயர் மாற்றும்போது சிறிது கூடுதல் விலையானாலும் ட்யூப்லெஸ் டயருக்கு மாறுவது நல்லது.

விலை அதிகம்

விலை அதிகம்

ட்யூப் டயர்களைவிட ட்யூப்லெஸ் டயர்கள் விலை சற்று அதிகம். ஆனால், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டிருப்பதுடன், பல்வேறு சிறப்பம்சங்களை வழங்குவதால், விலை அதிகம் என்பதை தவிர்க்க முடியாது.

Most Read Articles
English summary
Tubeless tyres are being used in some motorcycles. These tyres are considered to be better and safer than conventional tyres as they offer better grip. They also tend to have lesser number of punctures even at high speeds.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X