மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

ஐதராபாத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என விரிவாகக் காணலாம் வாருங்கள்

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

இன்று மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான மோகம் அதிகமாகியுள்ளது. பெட்ரோலை விலை ஏறி வரும் சூழ்நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம் என மக்கள் சிந்தித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்கள் திடீர் திடீரென தீ பிடித்து எரிவதாகச் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்ததில் தந்தை மகள் பலியானார்கள். அடுத்தடுத்து பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 80 வயது முதியவர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேருடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்ததில் படுகாயமடைந்தார். இதற்கிடையில் பலர் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை. பல கோளாறுகள் உள்ளது. எனப் புகார் அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் ஒருவர் ஓலா ஸ்கூட்டரை தீவைத்துக் கொளுத்தினார்.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

இதற்கு முக்கியமான காரணமாக அவர் சொன்னது, ஓலா ஸ்கூட்டர் பல தொழிற்நுட்ப கோளாறுகளைச் சந்தித்ததாகவும், தன்னை நடுவழியில் நிறுத்தியதாக ஸ்கூட்டர் ஓடிக்கொண்டிருக்கும் போதே பேட்டரில் சார்ஜ் மிக வேகமாகக் குறைந்ததாகவும் புகார் அளித்திருந்தார். பலரும் இவ்வாறான புகார்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

கடந்த இரு தினங்களுக்கு முன்பு 65 வயது முதியவர் ஒருவர் ஒருவர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்கும் போது ஸ்கூட்டர் ரிவர்ஸ் கியரில் வேகமாகச் சென்றதால் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி அதிலிருந்து 65 வயது முதியவருக்குக் காயம் ஏற்பட்டது. இப்படியாக அடிக்கடி எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏதாவது ஒரு குறைபாடு குறித்த செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

இப்படியாகச் சமீபத்தில் ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உணவு டெலிவரி ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவர் உணவுகளை டெலிவரி செய்ய இவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்க முடிவு செய்தனர். அதன்படி அவர் ப்யூர் எனர்ஜி நிறுவனத்தின் ப்யூர் இவி இப்ளூட்டோ 7G என்ற வாகனத்தை வாங்கினார்.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

இந்த வாகனத்திற்காக அவர் ரூ90 ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகனத்தை தன் பணிக்காக எடுத்துச் செல்லும் போது வாகனம் திடீரென நடு ரோட்டில் ஆஃப் ஆகியுள்ளது. இவர் உடனடியாக வாகனத்தை உருட்டி சாலையோரம் நிறுத்தி வாகனத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்துள்ளார். ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

என்ன பிரச்சனை எனத் தெரியாமல் முழித்த இவர் இந்த வாகனத்தின் சீட்டை திறந்து பார்த்துள்ளார். அப்பொழுது வாகனத்தின் பேட்டரியிலருந்து லேசாகப் புகை வந்துள்ளது. இதை எப்படி நிறுத்துவது என தெரியாமல் அவர் தத்தளித்த நிலையில் சில நொடிகளில் இந்த புகை அதிகமாகி பேட்டி தீ பிடிக்கத் துவங்கியது. பின்னர் இந்த தீ ஸ்கூட்டர் முழுவதும் பரவி ஒட்டு மொத்த ஸ்கூட்டருமே தீக்கிரையானது.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

இந்த காட்சியைச் சாலையில் சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. ஏற்கனவே இந்தியாவில்பல இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எரிவதாகச் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்த சம்பவம் குறித்து மக்கள் அதிகமாகப் பேசி வருகின்றனர்.

மீண்டும் ஒரு எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்தது... இந்த முறை என்ன ஆச்சு தெரியுமா?

தொடர்ந்து எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து வரும் சம்பவம் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீதான நம்பகத் தன்மையை மக்கள் மத்தியில் போக்கும் எனச் சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஓலா, ஒகினாவா ஆகிய நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் எரிந்த செய்தி வெளியானதுடன் குறிப்பிட்ட ஸ்கூட்டர் விற்பனையான அதே பேட்ஜில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களை அந்நிறுவனங்கள் திரும்ப அழைத்து சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மற்றுமொரு ஸ்கூட்டர் எரிந்த சம்பவம் பலரைத் திடுக்கிட வைத்துள்ளது.

Most Read Articles
English summary
Pure ev epluto 7g got fired in Hyderabad know full details
Story first published: Friday, May 13, 2022, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X