பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் சாலையில் ரத்தன் டாடா கார் ஓட்டி வந்த அரிய காணொளி கிடைத்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

தொழிலதிபர் ரத்தன் டாடா (Ratan Tata) இந்தியா முழுக்க மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர். ஒரு சில தொழிலதிபர்கள் மீது இந்திய மக்களுக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், மக்களால் மிகவும் நேசிக்கப்படக்கூடிய ஒரு தொழிலதிபர் என்றால் அது நிச்சயம் ரத்தன் டாடாதான். இந்தியாவில் கொரோனா வேகமெடுத்த சமயத்தில், நாட்டிற்கு இவர் செய்த உதவிகள் ஏராளம்.

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை ரத்தன் டாடா உருவாக்கியிருந்தாலும், அவரது நற்பண்புகள் அவரை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போகின்றன. அப்படிப்பட்ட ரத்தன் டாடா, கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ரத்தன் டாடா கார்களை எவ்வளவு நேசிக்க கூடியவர் என்பதும், அவர் எவ்வளவு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்? என்பதும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

கார்கள் மீது பேரார்வம் கொண்டவரான ரத்தன் டாடா, இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான வாகனங்களை சொந்தமாக வைத்துள்ளார். இந்த சூழலில், பொது சாலையில் ரத்தன் டாடா கார் ஓட்டி செல்லும் காணொளி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்500 (Mercedes-Benz SL500) காரை அவர் ஓட்டி செல்வதை இந்த அரிய காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

ரத்தன் டாடாவிற்காக இறக்குமதி செய்யப்பட்ட காரான இது, இடது கை ஓட்டுதல் முறையை (Left Hand Drive) கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடா காரை ஓட்டும் நிலையில், கோ-டிரைவர் இருக்கையில் ஒரு இளைஞர் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த நபருடன் ரத்தன் டாடா தொடர்ச்சியாக பேசி கொண்டே வருகிறார்.

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

ரத்தன் காரை ஓட்டி செல்லும்போது, பாதுகாப்பிற்கு வேறு எந்த வாகனமும் அவரை பின் தொடர்ந்து வந்தது போல் தெரியவில்லை. பொதுவாக இவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் ஒரு இடத்திற்கு செல்லும்போது பாதுகாப்பிற்கு முன்பும், பின்பும் ஒரு சில கார்கள் அணிவகுத்து வருவது வழக்கம். அந்த கான்வாயில் அதிகப்படியான விலை கொண்ட கார்களும் இடம்பெற்றிருக்கும்.

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

ஆனால் இந்த காணொளியில், ரத்தன் டாடாவின் பாதுகாப்பிற்கு யாரும் வந்தது போல் தெரியவில்லை. இந்த காணொளி, மற்றொரு காரில் இருந்து எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் இந்த காணொளி ஒரு சில ஆண்டுகள் பழையதாக இருக்கலாம். அனேகமாக இந்த காணொளி சுமார் 4 ஆண்டுகள் பழையதாக இருக்கலாம். என்றாலும் இந்த அரிய காணொளியை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ...

ரத்தன் டாடா ஓட்டியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்500 சாதாரண கார் கிடையாது. இந்த காரில், 5.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 306 பிஎச்பி பவரை உருவாக்க கூடியது. மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்500 தவிர, இன்னும் பல்வேறு இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் ரத்தன் டாடாவின் கராஜில் உள்ளன.

ரத்தன் டாடா பொது சாலையில் இப்படிப்பட்ட கார்களை ஓட்டி வருவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு முறை ஃபெராரி கலிஃபோர்னியா கன்வெர்டபிள் (Ferrari California Convertible) காரை, தொழில் அதிபர் ரத்தன் டாடா பொது சாலையில் ஓட்டி வந்ததை பார்க்க முடிந்துள்ளது. அப்போதும் அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் வரவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ratan Tata Spotted Driving His Mercedes-Benz SL500 - Rare Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X