ஏவுகணைகளை தயாரிக்கும் ரோபோட்டுகள்... ரேதியோன் ஆயுத ஆலை!

Written By:

உலகிலேயே ஏவுகணை தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் அமரிக்காவை சேர்ந்த ரேதியோன் நிறுவனம் தனது ஆலையை எந்திரமயமாக்கியிருக்கிறது.

இதன்மூலமாக, குறைந்த செலவீனத்தில் அதி விரைவாக ஏவுகணைகளை தயாரிக்கும் வல்லமையை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், பலத்தை பெருக்கவும் அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

ரேதியோன்

ரேதியோன்

உலகிலேயே ஏவுகணை மற்றும் ராக்கெட் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த ரேதியோன் நிறுவனம்தான் முதன்மையாக விளங்குகிறது. உலக அளவில் இந்த நிறுவனத்தில் 63,000 பேர் பணிபுரிகின்றனர்.

ஏவுகணை தயாரிப்பு

ஏவுகணை தயாரிப்பு

ஆயுத தொழிலில் கொடி கட்டி பறக்கும் ரேதியோன் நிறுவனம்தான் உலகின் 5வது பெரிய ராணுவ தளவாட சப்ளையர் என்ற பெருமைக்குரியது. குறிப்பாக, ஏவுகணை தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது.

ரேதியோன் ஆலை

ரேதியோன் ஆலை

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் உள்ள டக்ஸன் என்ற இடத்தில்தான் ரேதியோன் நிறுவனத்தின் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

எந்திர மயம்

எந்திர மயம்

இந்த ஏவுகணை ஆலை ரோபோக்களின் உதவியுடன் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதுடன், முதல்கட்ட சோதனைகளும் செய்யப்படுகின்றன.

ரோபோட்டுகள் பணி

ரோபோட்டுகள் பணி

ஆப்டிமஸ், பம்லிபீ மற்றும் டெவிட்டோ என்று பெயரிடப்பட்ட 3 ரோபோக்கள் படுவேகமாக தங்களது பணிகளை அந்த ஆலையில் தினசரி செய்து வருகின்றன.

துல்லியமான பணி

துல்லியமான பணி

ஏவுகணைகளை அசெம்பிள் செய்வதுடன், அதனை வெப்பத்தை தாங்கும் சோதனைக்கான ஓவனிலும் அழகாக இட்டு விடுகின்றன ரோபோட்டுகள். இவை அனைத்தும் மிக துல்லியமாக நடக்கின்றன.

தற்கொலை எந்திரன்

தற்கொலை எந்திரன்

இங்கு தயாரிக்கப்படும் எக்ஸோ அட்மாஸ்பியர் கில் வெஹிக்கிள்ஸ் எனப்படும் நவீன வகை ஏவுகணைகள் எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன.

அச்சம் ஏன்?

அச்சம் ஏன்?

இந்த ஏவுகணைகள் ராக்கெட் மூலமாக செலுத்தும்போது தனியாக பிரிந்து எதிரி நாட்டிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் அல்லது ஏவுகணைகளை துவம்சம் செய்துவிடும்.

பிரத்யேக தொழில்நுட்பம்

பிரத்யேக தொழில்நுட்பம்

ராக்கெட்டிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் வகையிலான மிக சிறிய உருவம் கொண்ட ஏவுகணைகளாக இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

அதிவேகத்தில் பயணிக்கும் இந்த இகேவி ஏவுகணையில் பிரத்யேக நேவிகேஷன் சிஸ்டம், எதிரி ஏவுகணைகள் குறித்து கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கிடைக்கும் உத்தரவுகளை வாங்கிக் கொள்ளும் ரிசீவர் போன்றவையும் உள்ளன.

கிரையோஜெனிக் சிஸ்டம்

கிரையோஜெனிக் சிஸ்டம்

எதிரி ஏவுகணையை துல்லியமாக கண்டறிவதற்கான அகச்சிவப்பு கதிர் சென்சார்கள், அதிவேகத்தில் பயணிக்கும்போது இந்த சென்சார்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக கிரையோஜெனிக குளிர்ப்பு சாதனம் என இந்த குட்டி ஏவுகணை பல்வேறு வசதிகளை பெற்றிருக்கிறது.

தானாக பறக்கும்

தானாக பறக்கும்

ராக்கெட்டிலிருந்து பிரிந்த பின்னர், இது சொந்தமாக பயணிக்கும் வகையில் எரிபொருள் அமைப்பு மற்றும் எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிதறடிக்கும்

சிதறடிக்கும்

இந்த ஏவுகணையில் வார்ஹெட் எனப்படும் வெடிமருந்து அல்லது ரசாயன பொருட்கள் அடங்கிய முன் முனைப்பகுதி இருக்காது. ஆனால், அதிவேகத்தில் எதிரி நாட்டு ஏவுகணையுடன் மோதி தகர்க்கும். அதாவது, தற்கொலை படை தீவிரவாதி போன்று செயல்படும்.

பயன்பாடு

பயன்பாடு

அலாஸ்கா மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள ராக்கெட்டுகளில் இந்த இகேவி ஏவுகணை பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

அணு ஏவுகணைக்கும் அஞ்சாது

அணு ஏவுகணைக்கும் அஞ்சாது

அணுகுண்டு, வெடிகுண்டு, உயிரி ஆயுதங்களை சுமந்து வரும் ஏவுகணைகளை கூட இந்த இகேவி ஏவுகணை இடைமறித்து தாக்கி அழித்து விடும். இதன்மூலமாக, அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களையும் எதிரி நாட்டு ஏவுகணைகளிலிருந்து எளிதாக பாதுகாக்கும் வாய்ப்பு உள்ளது.

உலக நாடுகளின் கண்...

உலக நாடுகளின் கண்...

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கண்கள் ரேதியோன் ஏவுகணை ஆலையின் மீதுதான் உள்ளது. அதாவது, எந்தவொரு ஏவுகணையையும் இடைமறித்து மிக துல்லியமாக அடிக்கும் ஆற்றல் பெற்றது இகேவி ஏவுகணை.

 

Source: Popular Mechanics 

மேலும்... #ராணுவம் #military
English summary
Raytheon's Robots Make Kamikaze Spacecraft.
Story first published: Friday, April 22, 2016, 18:45 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos