கார்/ பைக் லோன்ல வாங்கிருக்கீங்களா? உங்க இஎம்ஐ அதிகமாகபோகுது! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் தற்போது நடைமுறையில் உள்ள கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இதனால் வாகன கடனும் அதிகரிக்கும். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எல்லாம், ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குபவை, இந்நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி பணம் கொடுக்கும். அந்த பணத்தை இவர்கள் மக்களுக்கு அவரவரின் தேவைக்கு ஏற்ப வழங்குவார்கள். ரிசர்வ் வங்கி வழங்கும் பணத்திற்கு இந்நிறுவனங்கள் வட்டி கட்ட வேண்டும். இந்த வட்டி விகிதத்தைத் தான் ரெப்போ வட்டி எனக் கூறப்படுகிறது.

கார்/ பைக் லோன்ல வாங்கிருக்கீங்களா? உங்க இஎம்ஐ அதிகமாகபோகுது! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கூட்டினால் அது, மற்ற பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியவர்களுக்கான வட்டியில் வகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்படியாக இந்தாண்டு மட்டும் ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் தனது ரெப்போ வட்டிவகித்தில் 40 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. பின்னர் மீண்டும் ஜூன் மாதம் 50 புள்ளிகளை அதிகரித்து 4.90 சதவீதமாக உயர்த்தியது.

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து 5.4 சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் அடுத்த 50 புள்ளிகளை அதிகரித்து 5.9 சதவீதமாகவும், உயர்த்தியது. இந்நிலையில் தற்போது அக்டோபர்,நவம்பர் மாதங்களில் உயராத ரெப்போ வட்டி விகிதம் இந்த டிசம்பர் மாதம் உயர்த்துள்ளது. தற்போது 35 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து 5.9 சதவீதமாக இருந்த வட்டி தற்போது 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் சுமார் 2.25 சதவீதம் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

இது நேரடியாகக் கடன் வாங்கியவர்களைப் பாதிக்கும். பலர் இப்படியாக வட்டி விகிதம் அதிகரிப்பு புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்குத் தான் என்றும், பழைய கடன் விகிதத்தில் இருப்பவர்களுக்கு இது செல்லாது என நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் கார்/ பைக்கை எப்பொழுது வாங்கியிருந்தாலும் சரி அதற்கான இஎம்ஐ தற்போது நிலுவையிலிருந்தால் உங்களுக்கும் அதற்கான வட்டி வகிதம் அதிகம் ஆகும்.

உதாரணமாக நீங்கள் 2ஆண்டிற்கு முன் ஒரு கார் வாங்கியிருந்தால் அந்த காருக்கான நிலுவைத் தொகையை நீங்கள் தற்போது இஎம்ஐ மூலம் கட்டிக்கொண்டிருந்தால் தற்போது இருக்கும் நிலுவைத் தொகைக்கு உயர்த்தப்பட்ட வட்டியைத் தான் நீங்கள் கட்ட வேண்டும். பலருக்கு இதில் குழப்பம் இருக்கலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரே தொகையைத் தான் இஎம்ஐ எனக் கட்டி வருகிறீர்கள் இதில் கடந்த மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது ஆனால் இஎம்ஐ உயர்த்தப்படவில்லையே என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இதை ஃபைனான்ஸ் நிறுவனங்கள் கடைசி மாத இஎம்ஐயுடன் சேர்த்து வசூலிக்கலாம். அல்லது உங்களது இஎம்ஜ காலத்தைக் கூட்டலாம். ஆனால் இதைக் கடன் வாங்கியவர்கள் தான் கட்ட வேண்டும். இதனால் வாகன கடன் வைத்திருப்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் வாகன கடனின் கடைசி இஎம்ஐ உயர்த்தப்படலாம், அல்லது கடைசி இஎம்ஐ காலத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு அதிகமாகலாம்.

இதுவே புதிதாக வாகன கடன் வாங்குபவர்கள் இந்த உயர்த்தப்பட்ட ரெப்போ வட்டி விகிதத்தைக் கணக்கிட்டே உங்கள் கடனுக்கான வட்டி கணக்கிடப்படும். இதனால் உங்களுக்கு இதற்குப் பின்னர் வட்டியில் உயர்வு ஏற்பட்டால் மட்டுமே அது கணக்கிடப்படும். இதுவரை உயர்த்தப்பட்டவை கடன் வழங்கும்போது கணக்கிடப்படு இஎம்ஐயில் சேர்ந்துவிடும். எது எப்படியோ வாகன கடனுக்கான வட்டி அதிகமாகிவிட்டது என்பது மட்டும் உண்மை.

Most Read Articles

English summary
RBI hikes repo rate affects vehicle loans emis
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X