உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

சைக்கிளில் சென்றவர் மீது தானியங்கி கார் மோதியதில் பெண் பலியானார். உலகின் தனியாங்கி கார் வாங்கிய முதல் உயிர்பலிக்கு காரணம் தெரிந்தது.

By Balasubramanian

சைக்கிளில் சென்றவர் மீது தனியங்கி கார் மோதியதில் பெண் பலியானார். உலகின் தனியாங்கி கார் வாங்கிய முதல் உயிர்பலிக்கு காரணம் தெரிந்தது.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

கடந்த மார்ச் மாதம் அரிசோனா மாகாணத்தில் உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் ஒன்று அவ்வழியாக சைக்கிளிலில் சென்ற பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சைக்களில் சென்ற பலியானார்.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

தானியங்கி கார்கள் டிரைவர் கட்டுப்படுத்தாமல் தானாக இயங்ககூடியது. அந்த காரின் இன்ஸ்டால் செய்துள்ள சாப்ட்வேரே காரை சரியாக வழி நடத்தி கொண்டு செல்லும், மேலும் காருக்கு குறுக்கே யார்வந்தாலும் காரை சரியாக நிறுத்தி விபத்தை தவிர்க்கும்.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

இப்படியாக அமெரிக்காவின் சில மாகாணங்களில் மட்டும் செயல்பட்டு வரும் இந்த தானியங்கி கார்கள் பெரும்பாலும் வெற்றிகரமாக இயங்கி மக்களுக்கு நல்ல வகையில் பலனளித்து வருகிறது. எனினும் ஆங்காங்கே சிறு சிறு விபத்துக்களும் நடந்து வந்தது. அதை உடனடியாக சாப்ட்வேர் மேலாண்மை குழு ஆய்வு செய்து சாப்வேரில் உள்ள அந்த குறைகளை நீக்கி வந்தது.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உபேர் நிறுவனம் சார்பில் இயங்கி வந்த தானியங்கி கார் ஒன்று ரோட்டில் சைக்கிளில் சென்ற எலென் ஹெர்ஸ்பெர்க் என்ற பெண் மீது மோதியதில் இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக பலியானார். இது தான் தானியங்கி கார் மோதி பலியான முதல் உயிர் பலி சம்பவம். இந்த சம்பவத்தின் வீடியோ நீங்கள் கீழே காணலாம்.

இச்சம்பவம் குறித்து கடந்த 50 நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வில் தானியங்கி கார் எவ்வாறு சைக்கிளில் சென்றவர் மீது மோதியது என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் சாப்ட்வேர் குறைபாடு தான் என தெரியவந்துள்ளது.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

பொதுவாக தானியங்கி கார்களில் உள்ள சாப்ட்வேர் காரை சுற்றி 360 டிகிரியும் கண்காணித்து கொண்டே இருக்கும். இந்த கார் செல்லும் வழியில் வேறு கார்கள், பைக்குகள், அல்லது நடந்து செல்பவர்கள் என யார் வந்தாலும் காரை நிறுத்தி விடும். அதே போல் சாலையில் குறுக்கே பெரும் பாறைகள் அல்லது பெரிய பொருட்கள் இருந்தாலும் காரை நிறுத்தி விடும்.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

ஆனால் ரோட்டில் பிளாஸ்டிக் பைக்கள், ரோட்டோரம் உள்ள குப்பை தொட்டிகள் தெருவோரம் உள்ள கம்பங்கள் ஆகியவற்றை பொருட்படுத்தாது. அவற்றில் மோதமல் மட்டும் செல்லும் இவ்வாறாவே இந்த கார்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

இதில் காரை நிறுத்துவற்கான பொருட்கள் காரில் பொருத்தப்பட்ட சென்சார் மூலம் அடையாளம் காணப்பாட்டால் அந்த பொருளை பால்ஸ் நெகட்டிவ் சென்ற சிக்னலை தானியங்கி காருக்கு தரும். பால்ஸ் நெகட்டிங் சிக்னல் கிடைத்து விட்டால் கார் நின்று விடும் இதனால் விபத்து தவிர்க்கப்படும்.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

அதே போல் ரோட்டில் பிளாடிஸ் பேப்பர், ரோட்டோரம் குப்பை, தொட்டி, ரேட்டின் நடுவே போடப்பட்ட மீடியன் ஆகியவற்றை பால்ஸ் பாசிடிவ் என எடுத்து கொள்ளும். இவ்வாறான பொருட்கள் குறுக்கே வந்தால் அதை பற்றி எந்த கவலையும் படாமல் கார் தொடர்ந்து இயங்கும்.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

இந்த வகையில் சைக்களில் வந்த பெண்மணியை இந்த கார் பால்ஸ் பாசிட்டிவ் பொருளாக எடுத்துக்கொண்டது. இதனால் தான் கார் நிற்காமல் தொடர்ந்து சென்று அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்கள் குறுக்கே வந்தாலே பால்ஸ் நெகட்டிவ் என எடுத்து கொள்ள வேண்டி சாப்ட்வேர் என பால்ஸ் பாசிடிவ் என எடுத்து கொண்டது என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

உபேர் நிறுவனம் பாதுகாப்பை விட பயணிகளின் சொகுசான பயணத்திற்கே அதிகமுக்கியத்துவம் கொடுப்பதாகவும், பாதுகாப்பில் அதிக கவனம் செலு்த்தினால் மட்டுமே வரும் காலங்களில் இது போன்ற விபத்தை தவிர்க்க முடியும் என பலர் தெரிவித்து வருகின்றனர்.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

க்ரூஸ் கண்ட்ரோல் உள்ள காரிலும் இந்த பிரச்னை இருக்கிறது. சில நேரங்களில் ரோட்டாரம் இருக்கும் குப்பை தொட்டியை கூட குறுக்கீடாக நினைத்து காரை நிறுத்தி சம்பவங்களும் நடந்துள்ளது.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

தொடர்ந்து இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரைணை நடந்து வருகிறது. உலகமெங்கும் தானியங்கி கார்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற சாப்ட்வேர் குறைபாடுகளை நீக்கினால் மட்டுமே அட்டோமொபைலில் அடுத்த தலைமுறை தானியங்கி காரமாக அமையும்.

உயிர் பலி வாங்கிய தானியங்கி கார்; விபத்தின் காரணம் தெரிந்தது

உபேர் நிறுவனம் தற்போது தனது சாப்ட்வேரில் சில அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் தானியங்கி கார்கள் அதிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவமன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #விபத்து #accident
English summary
Software bug led to death in Uber’s self-driving crash. Read in Tamil
Story first published: Wednesday, May 9, 2018, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X