சாலையில் உள்ள குறியீட்டு கோடுகள், அவை உணர்த்தும் விஷயங்கள் - முழு விவரம்

By Meena Krishna

சாலை விதிகளைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், அதைக் கடைப்பிடிக்கிறோமா? இல்லையா? என்பது வேறு விஷயம்... லைசென்ஸ் டெஸ்ட்டில் அதுதொடர்பான கேள்விகள் கேட்பார்கள் என்பதால் சாலை விதிகளைப் பற்றி ஏதோ ஓரளவுக்கு விதிகளை தெரிந்து வைத்திருக்கிறோம்.

சாலைகளில் செல்லும் போது நடுவே வெள்ளையாகவும், மஞ்சளாகவும் கோடுகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அவை எதைக் குறிக்கின்றன என்பது தெரியுமா? ஒவ்வொரு கோட்டின் வடிவத்துக்கும் தனித் தனிப் பொருள் உள்ளது. பெரும்பாலானோர் அவற்றைப் பொருட்படுத்தாததாலும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதததாலுமே அதிக அளவில் சாலை விபத்துகள் நேர்கின்றன.

சாலையில் நடுவே உள்ள குறியீட்டுக் கோடுகள் உணர்த்தும் விஷயங்களை நாங்கள் உரக்கச் சொல்கிறோம். இனி மேலாவது பாதுகாப்பான பயணத்தை அனைவரும் மேற்கொள்ளலாம் வாருங்கள்....

1) மத்தியில் உள்ள உடைந்த கோடுகள்;

1) மத்தியில் உள்ள உடைந்த கோடுகள்;

சாலைக்கு நடுவே வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகள் வாகனங்கள் செல்லும் பாதையைப் பிரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு திசையில் நாம் செல்லும்போது, நமக்கு எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கான பாதையை அறிந்து கொள்வதற்கும், சாலையில் எந்தப் புறம் நாம் செல்ல வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தவும் மத்தியில் உள்ள உடைந்த கோடுகள் வரையப்படுகின்றன.

2) சாலையின் மத்தியில் ஒன்று அல்லது இரண்டு வெள்ளை / மஞ்சள் கோடுகள்;

2) சாலையின் மத்தியில் ஒன்று அல்லது இரண்டு வெள்ளை / மஞ்சள் கோடுகள்;

சாலைக்கு நடுவே தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் ஒன்று அல்லது இரண்டு கோடுகள் வரையப்பட்டிருக்கும். இது எதற்குத் தெரியுமா?

இந்தச் சாலைகளில் இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். அவசர கால வாகனங்களைத் தவிர பிற வண்டிகள், முந்திச் செல்லக் கூடாது என்பதை உணர்த்தும் குறியீடுகள் அவை.

3. சாலைகளின் இரு ஓரங்களிலும் வெள்ளைக் கோடுகள்;

3. சாலைகளின் இரு ஓரங்களிலும் வெள்ளைக் கோடுகள்;

சாலைகளின் இரு ஓரத்திலும் நீளமாக வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகள் எதற்கு? இது பெரும்பாலனோருக்குத் தெரிவதில்லை.

சாலையின் விளிம்பு மிக அருகில் இருக்கிறது, கவனமாகச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே அந்தக் கோடுகள் போடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத்தில் கூட ஒளரும் வகையில் அவை அமைக்கப்பட்டிருக்கும். சாலையை விட்டு வாகனங்கள் கீழே இறங்கி விபத்துக்குள்ளாமல் இருப்பதற்கான ஏற்பாடு அது.

4) சாலையின் மத்தியில் உள்ள கோடும், உடைந்த கோடும்;

4) சாலையின் மத்தியில் உள்ள கோடும், உடைந்த கோடும்;

தொடர்ச்சியான கோடும், அதன் அருகே விட்டு விட்டு வரையப்பட்ட கோடுகளும் சில சாலைகளில் இருக்கும்.

அது உணர்த்துவது என்னவென்றால், வாகனத்தை இயக்குபவர்கள், குறிப்பிட்ட பாதைக்குள் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தான். மத்தியில் உள்ள கோட்டிற்கு இடது புறத்தில் டிரைவர்கள் வாகனங்களை இயக்க வேண்டும். உடைந்த கோட்டின் பகுதியில் இருந்தால், நீங்கள் கிராஸ் செய்து செல்லலாம்.

பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே இந்த சாலைகளில் ஓவர்டேக் செய்ய வேண்டும் என்பது விதி. விபத்துகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடு இது.

5. ஜீப்ரா கிராஸிங் மற்றும் ஸ்டாப் குறியீடு;

5. ஜீப்ரா கிராஸிங் மற்றும் ஸ்டாப் குறியீடு;

ஜீப்ரா கிராஸிங் எனப்படும் குறியீடு அனைவரும் அறிந்த ஒன்றுதான். பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பகுதியாக அது வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தெரியாத விஷயம் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் ஜீ்ப்ரா கிராஸிங் மேல் நடந்து செல்பவர்கள், பாதி வழியில் நிற்கக் கூடாது. தொடர்ந்து சென்று சாலையின் மறுமுனையில் தான் நிற்க வேண்டும்.

ஜீப்ரா கிராஸிங் பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

6) சாலைக்கு நடுவே அம்புக் குறி;

6) சாலைக்கு நடுவே அம்புக் குறி;

சாலைக்கு நடுவே நேரான அம்புக் குறி அல்லது வளைவான அம்புக் குறி வரையப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். நேர் அம்புக் குறியானது சாலை வளையாமல் நேராகச் செல்கிறது என்பதை உணர்த்தும்.

இடது அல்லது வலது பக்கம் வளைந்த அம்புக் குறியானது, நீங்கள் எடுக்கும் சாலையின் வளைவுக்குத் தக்கவாறு பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

7) இறுதி கருத்து;

7) இறுதி கருத்து;

இந்த சாலை குறியீடுகள், உங்களின் பாதுகாப்பிற்காகவும், பிற பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்டினால், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம். அதோடு மட்டுமின்றி உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நீடிக்கும்... வாகன ஓட்டிகள் அனைவருக்கும் டிரைவ்ஸ்பார்க்கின் வாழ்த்துக்கள்...

Most Read Articles

English summary
Ever wondered what road markings are meant for? Well, are you aware of white lines dividing the road or even the yellow markings seen while you drive or ride? There are different markings with different designs as well, what do they mean? Let us try to find out what these are meant for and how helpful they are. Road Markings and their meanings continues. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X