ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள் குறித்தும், உண்மை என்ன? என்பது குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

வாழ்க்கையில் ஒரே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற லட்சியம் நம்மில் பலருக்கும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பெரும் கோடீஸ்வரர்கள் ஒரு சிலரால் மட்டுமே இந்த லட்சியத்தை நிறைவேற்ற முடிகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களின் விலை பல கோடி ரூபாய் என்பதுதான் இதற்கு காரணம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

அப்படிப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் உலா வந்து கொண்டுள்ளன. அவை உண்மையா? பொய்யா? என்பது தெரியாமல் பலரும் நம்பி கொண்டுள்ளனர். அத்துடன் மற்றவர்களுக்கும் தவறான தகவல்களை பரப்புகின்றனர். எனவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள் என்னென்ன? அவை உண்மையா? என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

கட்டுக்கதை 1:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களில் சத்தமே வராது. நீங்கள் காரில் செல்லும்போது கேட்கும் ஒரே ஒரு சத்தம் கடிகாரத்துடையது மட்டுமே என்ற ஒரு கட்டுக்கதை உலா வருகிறது. ஆனால் இது உண்மையில்லை. கார் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது வேண்டுமானால் இது கொஞ்சம் உண்மையாக இருக்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

ஆனால் வேகம் அதிகரிக்கும்போது, வெளியில் இருந்து சத்தம் கேட்கும். சந்தையில் விற்பனை செய்யப்படும் வேறு எந்த சொகுசு கார்களை காட்டிலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களில் கேட்கும் சத்தம் குறைவாக இருக்கலாம். அதற்காக கடிகார சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்காது என்பதெல்லாம் உண்மையில்லை.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

கட்டுக்கதை 2:

பொதுவாக உற்பத்தி நிறுவனங்கள், சில சமயங்களில் கார்களை திரும்ப அழைப்பது வழக்கம். குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கும்பட்சத்தில், உரிமையாளர்களிடம் இருந்து அவற்றை திரும்ப பெற்று, பழுதை சரி செய்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பார்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

ஆனால் ஒவ்வொரு ரோல்ஸ் ராய்ஸ் காரும் கச்சிதமாக உருவாக்கப்படுகிறது. அவற்றில் எந்த பிரச்னையும் வராது. எனவே கார்களை திரும்ப அழைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என பலரால் நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் கட்டுக்கதைதான். இதில் உண்மையில்லை. ஏனெனில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது கார்களை திரும்ப அழைத்ததற்கான வரலாறுகள் கடந்த காலங்களில் உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு தனது கோஸ்ட் கார்களை திரும்ப அழைத்தது. இங்கே எதுவும் சரியானது இல்லை என்பதையே இது காட்டுகிறது. மற்ற கார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கார்களை திரும்ப அழைத்தது குறைவாக வேண்டுமானால் இருந்திருக்கலாம். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கார்களை திரும்பவே அழைக்காது என்பதில் உண்மையில்லை.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

கட்டுக்கதை 3:

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் டாக்ஸிகளாக பயன்படுத்தப்படுவதில்லை என்ற தகவல் பரவலாக அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஒருபோதும் டாக்ஸிகளாக பயன்படுத்தப்படுவதில்லை என்பது கட்டுக்கதைதான். இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் டாக்ஸிகளை போல் பயன்படுத்தப்படுகின்றன.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

நட்சத்திர தங்கும் விடுதிகள் பலவும் தங்கள் மதிப்பிற்குரிய விருந்தினர்களை அழைத்து வரவும், அவர்கள் கூறுகின்ற இடத்தில் இறக்கி விடுவதற்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வருகின்றன. எனவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்கள் ஒருபோதும் டாக்ஸிகளாக பயன்படுத்தப்படுவதில்லை என்ற கட்டுக்கதையை நம்ப வேண்டாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

கட்டுக்கதை 4:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் ஒருபோதும் நடுவழியில் பழுதாகி நிற்காது என்ற தகவல் பலராலும் உண்மை என நம்பப்படுகிறது. ஆனால் இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம். அதற்காக அவை ஒருபோதும் பழுதாகி நிற்காது என கூறுவது கொஞ்சம் அதிகம்தான்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்கள் பழுதாகி நின்ற சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. சில சமயங்களில் பிரபலமான மனிதர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கூட பழுதாகி சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிகழ்வுகள் செய்தித்தாள்களில் தலைப்பு செய்திகளாக மாறிய நிகழ்வுகளும் அரங்கேறியதுண்டு.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

கட்டுக்கதை 5:

எவ்வளவுதான் பணம் இருந்தாலும் அனைவராலும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க முடியாது என்ற தகவல் நீண்ட காலமாக உலா வந்து கொண்டுள்ளது. அதாவது உங்கள் பின்புலம், வரலாறு அனைத்தையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விசாரிக்கும். அதன்பின்னர்தான் உங்களுக்கு காரை கொடுக்கலாமா? அல்லது வேண்டாமா? என முடிவு எடுக்கும் என சிலர் கூறுகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

ஆனால் இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. இதுவும் கட்டுக்கதைதான். உங்களிடம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன காரை வாங்குவதற்கான பணம் இருந்தால், அந்த நிறுவனம் உங்களுக்கு சந்தோஷமாக காரை டெலிவரி செய்யும். மேற்கண்ட கட்டுக்கதைகளை இனி உங்களிடம் யாராவது கூறினால், தயவு செய்து நம்பாதீர்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rolls Royce Cars: Myth vs Fact. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X