பங்காளி யுத்தம்: துபாய்க்கு போட்டியாக ரோல்ஸ்ராய்ஸ் வாங்கிய அபுதாபி போலீஸ்!

Posted By:

உலகின் விலையுயர்ந்த கார்களின் பட்டியலை தயார் செய்து கொண்டு துபாய் போலீசார் ஒரு பக்கம் வாங்கி குவிக்க, மறுபக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியும் தற்போது புதிய ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சமீபத்தில் புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை அபுதாபி போலீசார் டெலிவிரி எடுத்துள்ளனர். இந்த காரை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிறுத்தி கவனத்தை ஈர்க்க அபுதாபி போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

போலீஸ் உடுப்பு

போலீஸ் உடுப்பு

துபாய் போலீஸ் கார்கள் பச்சை மற்றும் வெள்ளை வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அபுதாபி போலீஸின் ரோல்ஸ்ராய்ஸ் கார் பர்கண்டி சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.

மாடல்

மாடல்

அபுதாபி போலீசார் வாங்கியிருக்கும் கார் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ் I மாடல். எனவே, தற்போது வெளியிடப்பட்டிருக்கும் சீரிஸ் II இல்லை.

தங்க வண்ண ஆபரண சின்னம்

தங்க வண்ண ஆபரண சின்னம்

ஹூட் ஆர்னமென்ட் எனப்படும் பானட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஆபரணச் சின்னம் தங்க வண்ண பூச்சு பூசப்பட்டிருக்கிறது.

சுழல் விளக்கு

சுழல் விளக்கு

கூரையில், போலீஸ் கார்களுக்கான சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் 563 எச்பி பவரை அளிக்கும். செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் வசதி கொண்ட எஸ்ஏடி கியர்பாக்ஸ் கொண்டது.

இதர கார்கள்

இதர கார்கள்

அபுதாபி போலீசாரிடம் ஏற்கனவே செவர்லே கமாரோ, நிசான் ஜிடி ஆர் உள்ளிட்ட உயர்வகை கார்கள் இருக்கின்றன.

 
English summary
Rolls Royce Phantom joins Abu Dhabi Police.
Please Wait while comments are loading...

Latest Photos