பாகுபலி பல்லாள தேவன் ரதத்திற்கு உயிர் கொடுத்த மோட்டார்சைக்கிள் எஞ்சின்? ரகசியத்தை உடைத்த சாபுசிரில்

Written By:

பாகுபலி படத்தின் இடம்பெற்றிருந்த கத்தி சுழலும் ரதம் எப்படி உருவானது என்பது குறித்து அப்படம் கலை இயக்குநர் சாபு சிரில் மனம் திறந்துள்ளார்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

மனோரமா ஆன்லைன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியின் மூலம் வெளியான இந்த தகவல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

இந்தியாவில் போர் கதைகள் நிறைய படமாக்கப்பட்டுள்ளன. சரித்திர கால போர், நிகழ்கால போர், உண்மை சம்பவத்தால் உருவான போர் என பலதரப்பட்ட சூழ்நிலைகள் இந்தியாவில் திரைவடிவம் பெற்றுள்ளன.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் விதத்தில் அமைந்தது பாகுபலி திரைப்படம். 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த போர் காட்சிகள் பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றன.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

பெரிய திரையில் மிகவும் ஆக்ரோஷமாக உருவாக்கப்பட்டு இருந்த அந்த போர் காட்சி, இதுவரை தமிழ் திரையுலகம் காணாதது. அதில் பயன்படுத்தப்பட்ட ஆயூதங்களும் படத்தின் உருவாக்கத்திற்கு அழகு சேர்த்தன.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

இந்தியாவில் பல போர் சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருந்தாலும், பாகுபலி தனித்துவம் பெற காரணமாக அமைந்தது அக்காட்சிகளில் இடம்பெற்றிருந்த கருவிகள் தான்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

குறிப்பாக காலக்கேயர்களுடனான சண்டைக்காட்சியில் வில்லன் பல்வாள்தேவன் (ராணா டகுபாதி) பயன்படுத்தும் கத்தி சுழற்றும் ரதம், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு பெற்றது.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

2015ம் ஆண்டை தொடர்ந்து பாகுபலி படத்தின் 2ம் பாகம் வெளியாகி விட்ட காரணத்தினால், படத்தின் உருவாக்க பணிகளை குறித்த ரகசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர தொடங்கியுள்ளன.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

அதில் பல்வாள் தேவனின் கத்தி சுழற்றும் ரதம் உருவானது எப்படி என்பதற்கும் விடை கிடைத்துள்ளது.

பழங்கால திரைக்கதை அமைப்பில் பாகுபலி உருவாக்கப்பட்டு இருந்தாலும், புதிய தொழில்நுட்பத்தின் தான் பல்வாள்தேவனின் ரதம் படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

இந்தியா சினிமாவின் முன்னணி கலை இயக்குநர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் உருவான இந்த ரதம் தயாரிக்கப்பட்டதை குறித்து, மலையாள இதழான மனோரம்மாவிடம் பல்வேறு தகவல்களை சாபு சிரில் தெரிவித்துள்ளார்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

பல்வாள் தேவனின் கத்தி சுழற்றும் ரதத்திற்கு பிரபல மோட்டார் சைக்கிளின் எஞ்சின் பொருத்தப்பட்டதாகவும். அதன்மூலமே ரதம் ஆற்றல் பெற்று, ஆக்ரோஷ தோரணை உடன் வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

ரத ஓட்டிக்கு முன்னர், நான்கு கத்திகள் சூழல போர்களத்தில் ஆக்ரோஷமாக பாயும் ரதத்திற்கு, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

இந்த ரகசியத்தை போட்டுடைத்த சாபு சிரில், ராயல் என்ஃபீல்டு எஞ்சினுக்கு அதிக ஆற்றல் சக்தி இருப்பதாகவும், அதனை தக்க முறையில் பயன்படுத்த நினைத்து, கத்தி சுழற்றும் ரதத்திற்கு பொருத்தப்பட்டதாகவும் சாபு சிரில் தெரிவித்துள்ளார்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

ராயல் என்ஃபீல்டு எஞ்சின் ரதத்தில் பொருத்தப்பட்ட பின்னர், அதன் ஆற்றல் பலமடங்கு இருந்ததாகவும். கத்தி சுழல்வதின் வேகமும் கச்சிதமாக இருந்ததாகவும் சாபு சிரில் மேலும் கூறியுள்ளார்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

மேலும் அந்த ரதத்தை எப்போதும் போல இயக்காமல், காருக்கான ஸ்டீயரிங் கட்டமைப்பு என அனைத்தும் உருவாக்கப்பட்டு பல்வாள் தேவனின் கத்தி சுழற்றும் ரதம் உருவாக்கப்பட்டதாக சாபு சிரில் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

மேலும் அந்த கத்தி சுழற்றும் ரத்தத்தை உருவாக்கும் போது பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்ததாகவும், ஒரு ரதத்தை அதுபோன்று இயக்காமல், காரை நகர்த்துவது போன்று ஒருவர் ஓட்டும் போது கலை குழுவினர் அனைவருக்கும் சிரிப்பு வந்ததாகவும் சாபுசிரில் தெரிவித்துள்ளார்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

பல்வாள் தேவனின் கத்தி சுழற்றும் ரதத்திற்கு ராயல் என்ஃபீல்டின் 350சிசி அல்லது 500சிசி எஞ்சினில் அதை சாபு சிரில் பயன்படுத்தினார் என்பது குறித்து அவர் கூறவில்லை.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

ஆனால் இந்த செய்தி வெளியானவுடன் ஒரு ராயலான படத்திற்கு ராயலான எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருப்பது ஏற்புடையது தான் நெட்டிசன்கள் பரபரப்பாக கமெண்டுகள் போட ஆரம்பித்துவிட்டனர்.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தும் 346சிசி திறன் கொண்ட எஞ்சின் மூலம் 19.8 பி.எச்.பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறன் கிடைக்கிறது.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

அதேபோல ராயல் என்ஃபீல்டில் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் 499சிசி திறன் கொண்ட எஞ்சின் மூலம் 27.2 பி.எச்.பி பவர் மற்றும் 41.3 என்.எம் டார்க் திறன் கிடைக்கப்பெறுகிறது.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

அதிக ஆற்றலுடனும், குறைந்த எடைக்கொண்டு அந்நிறுவனம் தயாரித்து வரும் காண்டினெல்ட்டல் ஜி.டி மோட்டார் சைக்கிளில் 535சிசி எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 29.1 பி.எச்.பி பவர் மற்றும் 44என்.எம் டார்க் திறன் கிடைக்கும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

பாகுபலி கத்தி சுழலும் ரதத்திற்கு உயிர் கொடுத்த எஞ்சின்

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு வெளியிட்ட ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் 411சிசி எஞ்சின் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் 24.5 பி.எச்.பி பவர் மற்றும் 32 என்.எம் டார்க் கிடைக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Baahubali's Bhalla Deva's chariot was powered by none other than a Royal Enfield engine so that it would get the speed and power the chariot required.
Story first published: Friday, May 5, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark