ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள் மீது ரோல்டு ரோலரை ஏற்றி நசுக்கிய போக்குவரத்து காவல்துறை..!!

ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள் மீது ரோல்டு ரோலரை ஏற்றி நசுக்கிய போக்குவரத்து காவல்துறை..!!

By Azhagar

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வைத்திருப்பது ஒரு பெருமை தான். கம்பீரத்தின் அடையாளமாக இந்திய சாலைகளில் வலம் வரும் இந்த பைக், உற்சாகமான ரைடிங் தருவதில் கில்லி.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

உலகளவில் ராயல் என்ஃபீல்டு விற்பனை ஆகும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் இதற்கான வரவேற்பு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் உயர்ந்துக்கொண்டே தான் வருகிறது.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெருக பெருக, இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்ட போகின்றன.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

பலரும் பயன்படுத்தும் பிராண்டு என்பதால், அதில் ஒரு சிலர் தனித்துத்தெரிய தங்களது ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்கள் மீது சில மாடிஃபிகேஷன் பணிகளை செய்கின்றனர்.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கான விற்பனை ஒரு பக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில், அதற்கான மாடிஃபிகேஷன் செய்யும் சந்தை நிலவரமும் பெருகிக்கொண்டே வருகிறது.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

ராயல் என்ஃபீல்டு பைக்கிற்காக செய்யப்படும் மாடிஃபிகேஷனில், இந்தியாவில் அதிக ஒலி எழுப்பும் சைலனசர்களை பயன்படுத்தும் முறை பல பகுதிகளில் அதிகமாக உள்ளது.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

சாலைகளில் இவை செல்லும் போது சக வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலாக அமைவதுடன், அதிக ஒலி தரும் சைலன்சர்கள் சுகாதார கேடு மற்றும் ஒலி மாசுவை அதிகரிக்கிறது.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

சாலை பயனாளர்கள் மத்தியில் இதுப்பற்றிய புகார்கள் அதிகரிக்க தொடங்க, இந்தியாவில் பூனே, மைசூரு, பெங்களூரு, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்த போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினர்.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

முறைகேடான அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் தேடிப்பிடிக்கப்பட்டன. மேலும் சாலைகளில் காவல்துறையினரின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

விதிகளை மீறி பெரிய சைலன்சர்கள் பொருத்தப்பட்ட பைக்குகளை கைப்பற்றும் போலீசார்கள், சைலன்சர்களை கழட்டி உரிமையாளரின் கண்முன்னே கழட்டி, சுத்தியல் கொண்டு உடைத்தனர்.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு, பிரிவு 192 (2) மோட்டார் வாகன சட்டப்படி, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.

முறைகேடான எக்ஸாஸ்ட் பைப்புகளை பொருத்தியிருக்கும் வாகனங்களை பிடிப்பதில் கர்நாடக காவல்துறை அதிரடியாக செயல்பட்டு வருகிறது.

இதில் போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து, அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

சமீபத்தில் கைப்பற்றப்பட்ட 11 பைக்குகளின் எக்ஸாஸ்ட் பைப்புகளை கழட்டி, சாலையில் போட்டு அதன் மீதி ரோடு ரோலரை ஏற்றி நசுக்கப்பட்டுள்ளது.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

அதற்கான வீடியோவையும் கர்நாடக காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்துவது என்பது, தங்களுக்கான உயரிய அந்தஸ்த்தாக உரிமையாளர்கள் நினைத்தாலும், அதனால் ஏற்படும் ஒலி மாசுவால், மனிதர்கள் உட்பட விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் தொல்லையே.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

ஒலி மாசு மனிதர்கள் மற்றும் விலங்குகளில் உடல்நலத்திற்கு கேடு தருவதாகும். அதிக டெசிம்பல் கொண்ட ஒரு ஒலியால் நமக்கு செவித்திறன் குறைபாடு, இதயக்கோளாறு ஏற்படலாம்.

ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!

ஒலி மாசுவால் உயர் இரத்த அழுத்தம், உயர் அழுத்த நிலைகள், செவித்திறன் குறைபாடு, தூக்கமின்மை போன்ற உடல்கோளாறு ஏற்படலாம்.

மனிதன் மற்றும் விலங்களுக்கான அன்றாட செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தை தரும் ஒலி மாசு, சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து தான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Traffic Cops Crush Royal Enfield Exhausts Under Road Roller — Effects Of Noise Pollution. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X