‘மேட் இன் பாகிஸ்தான்’ சர்ச்சையில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு!

Posted By: Staff

சென்னையைச் சேர்ந்த பிரபல ராயல் என்ஃபீல்டு நிறுவனம், பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பழமையான இந்திய நிறுவனம் என்ற பெருமை பெற்றதாகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனம், உலக அளவில் அதன் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு எதிராக அதன் வாடிக்கையாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

‘மேட் இன் பாகிஸ்தான்’ சர்ச்சையில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு!

பைக் விற்பனையை சிறந்து விளங்கும் ராயல் என்பீல்டு, தனது பிராண்டை பிரபலப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளான ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கான பிரத்யேக ரைடர்கள் குழுவும் செயல்பட்டுவருகிறது.

ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வரும் இந்த உபகரணங்கள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்யும் பைக் உபகரணங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பதே சர்ச்சைக்கு காரணம் ஆகும்.

‘மேட் இன் பாகிஸ்தான்’ சர்ச்சையில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு!

பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து தான் லெதர் ஜாக்கெட்டுகள், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

‘மேட் இன் பாகிஸ்தான்’ சர்ச்சையில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு!

உலகில் பல நாடுகள் இருக்கும் போது இந்தியாவின் பரம எதிரியாக விளங்கும் பாகிஸ்தான் நாட்டை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது உபகரணங்களை தயாரித்து அளிக்க எதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்கள் டிவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்தியாவுடன் வீண் சண்டையிட்டு எல்லையில் நமது ராணுவ வீரர்களை கொன்று குவித்து வரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு நமது நாட்டின் பணம் செல்ல வேண்டுமா? என்று டிவிட்டரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு எதிராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறனர் அதன் வாடிக்கையாளர்கள்.

‘மேட் இன் பாகிஸ்தான்’ சர்ச்சையில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு தவிர்த்து மேலும் பல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அந்த பாகிஸ்தான் நிறுவனம் தான் ரைடர்களுக்கான உபகரணங்களை தயாரித்து அளித்து வருகிறது.

‘மேட் இன் பாகிஸ்தான்’ சர்ச்சையில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு!

கடந்த 2013ஆம் ஆண்டு காண்டினெண்டல் ஜிடி பைக்கை அறிமுகப்படுத்தியதில் இருந்து பைக் ரைடர்களுக்கான உபகரணங்கள் விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு வரும் ராயல் என்ஃபீல்டு, கடந்த 4 ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து தான் இவற்றை இறக்குமதி செய்து வருகிறது என்றாலும் தற்போது தான் அது சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Royal Enfield leather jacket is Made in Pakistan?

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark