தங்க முலாம், வைர கற்களால் இழைக்கபட்ட பைக்: மும்பையில் தரிசனம்

மும்பையில் தங்க முலாம் பூச்சுடன், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மாதிரி பைக் ஒன்றை பிரபல ஆபரண வர்த்தக நிறுவனம் வடிவமைத்து காட்சிக்கு வைத்துள்ளது.

ரித்திசித்தி புல்லியன்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் இந்த புதிய பைக் வாடிக்கையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பைக் குறித்து டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு ரித்திசித்தி புல்லியன்ஸ் நிறுவனம் அளித்த பிரத்யேக தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

30 இஞ்ச் உயரம், 35 கிலோ எடை கொண்டதாகவும், 18 இஞ்ச் தடிமன் கொண்டதாகவும் இந்த தங்க பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

தங்க முலாம் பூச்சு

தங்க முலாம் பூச்சு

இந்த பைக் 35 கிலோ முதல் 40 கிலோ வரை வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. தங்க மேற்பூச்சு பூசப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க், இருக்கை, ஹெட்லைட், வீல்கள் உள்ளிட்ட இடங்களில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

உழைப்பு

உழைப்பு

ஒரு டிசைனர் மற்றும் 4 பொற்கொல்லர்களின் 6 மாத கால உழைப்பில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு?

விற்பனைக்கு?

இந்த பைக் தயாரிப்பு செலவு மற்றும் விற்பனை செய்யும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, இது நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. எனவே, விலை நிர்ணயிக்கப்படவில்லை. விற்பனை செய்யும் திட்டமும் இல்லை என்று ரித்திசித்தி புல்லியன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் முகேஷ் கோத்தாரி தெரிவித்தார்.

எங்கு பார்க்கலாம்?

எங்கு பார்க்கலாம்?

இந்த பைக் தற்போது மும்பை, பைதோனி, 115 தம்பகட்டா லேன், 2 வது தளத்தில் உள்ள ரித்திசித்தி புல்லியன்ஸ் ஆபரணகூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

டாடா கோல்ட் ப்ளஸ்

டாடா கோல்ட் ப்ளஸ்

இந்தியாவில் ஆபரணத் தொழில் துவங்கி 5,000 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், தங்க நானோ காரை டாடா குழுமத்தின் ஆபரண பிரிவான கோல்டு ப்ளஸ் வடிவமைத்தது. பாரம்பரிய ஆபரண வடிவமைப்பு நுணுக்கங்களை அடிப்படையாக கொண்டு 80 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி மற்றும் 10,000 விலை மதிப்பற்ற கற்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டது. ரூ.2 லட்சத்தில் நானோ கார் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த தங்க நானோ கார் ரூ.22 கோடி மதிப்புக்கு தயாரிக்கப்பட்டது.

Most Read Articles

English summary
RiddiSiddhi Bullion limited's subsidiary Dia Jewels showcases their first ever gold plated bike in India. The craze of gold is always speeding up and so is the trend of innovation in the market. This Gold and Diamond studded bike adds a touch of elegance that enhances its beauty. With this efforts, RSBL's Dia Jewels - Sparsh Touch of elegance creates a benchmark of creativity.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X