அதிநவீன மிக்-35 போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க துடிதுடிக்கும் ரஷ்யா... காரணம் என்ன?

Written By:

இந்திய ராணுவ பலத்தை சீனா மிக லேசாக எடை போட்டு, அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் வாலாட்டி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டுவதற்கு, நமது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மலைப் பகுதிகள் நிறைந்த இந்திய- சீன எல்லையோரத்தில் விமானப்படையின் பலம் மிக முக்கியமானதாக பார்க்கப்படும்.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

அந்த வகையில், இந்திய விமானப் படையின் பலத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

அவசர விலை கருதி, வெளிநாட்டு போர் விமானங்களை வாங்கி சேர்க்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. பொதுவாக, ஐரோப்பிய நிறுவனங்கள் அல்லது ரஷ்ய தயாரிப்புகள்தான் முதன்மை தேர்வாக இருக்கும். ஆனால், முதல்முறையாக அமெரிக்கா பக்கம் தனது கவனத்தை இந்தியா திருப்பி இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடம் எஃப்-16 போர் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்க்கும் விதமாக, டாடா மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் இடையே கூட்டணி ஏற்பட்டிருக்கிறது. இதன்படி, லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் நெருங்கி வருகின்றன.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இதனிடையே, ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்கள் வர்த்தகத்தில் ரஷ்யாவை சேர்ந்த மிக் நிறுவனத்துடன் இந்தியா நீண்ட காலமாக மிக நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. ஏற்கனவே, மிக் 29 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இந்த நிலையில், அமெரிக்காவுடன் ராணுவ வர்த்தகத்தை இந்தியா மேற்கொள்ள இருப்பது ரஷ்யாவுக்கு சற்று உறுத்தலாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானத்தை இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கான திட்டம் உறுதியாகி இருக்கும் நிலையில், தனது அதிநவீன மிக்-35 போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

மிக் வரிசையில் அதிநவீனமான இந்த புதிய போர் விமானத்தை இந்திய விமானப்படைக்கு விற்பது தொடர்பாகவும், இந்திய விமானப்படையின் தேவைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்யாவை சேர்ந்த மிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலியா தரசென்கோ கூறி இருக்கிறார்.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவில் நடந்து முடிந்த ஏர் ஷோவில், " மிக்-35 போர் விமானத்தை வாங்குவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு," ஆம். இந்தியாவிடமிருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

ரஷ்யாவின் புதிய மிக்-35 போர் விமானம் 4++ என்ற தலைமுறையை சேர்ந்தது. மிக்-29 ரக போர் விமானத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த போர் விமானமானது ரஷ்ய விமானப்படையில் பயன்பாட்டில் வர இருக்கிறது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இது கிட்டத்தட்ட 5ம் தலைமுறை போர் விமான ரகத்திற்கு நெருக்கமான சிறப்பம்சங்களை பெற்றிருப்பதாக, தரசென்கோ கூறி இருக்கிறார். மிக்-35 ஒரு பைலட் இயக்கும் விதத்திலும், மிக்-35டி மாடல் இரண்டு பைலட்டுகள் அமர்ந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

தற்போது உலகின் மிக நவீன வகை போர் விமானங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. எதிரிகளின் எல்லையில் தாக்குதல் நடத்துவதற்கும், எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து மிக எளிதாக தப்பித்து செல்லும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இலகுவான எடை, கூடுதலான ஆயுதங்கள் பொருத்தும் வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் மிகச் சிறப்பானதாக இந்த போர் விமானம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் மிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இந்த புதிய போர் விமானமானது 17.32 மீட்டர் நீளமும், 12 மீட்டர் இறக்கை நீளமும், 4.73 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கின்றன. இந்த புதிய விமானத்தில் AESA என்ற நவீன வகை ரேடார் பொருத்தப்பட்டு இருப்பதால், வானில் பறக்கும் எதிரிநாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக கண்டறியும்.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

அதேபோன்று, வான் இலக்குகளையும் துல்லியமாக தாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த AESA ரேடாரானது, வானில் 130 கிமீ முதல் 160 கிமீ வரையிலும், நீர்நிலைகளில் 300 கிமீ வரையிலான பரப்பில் இருக்கும் பொருட்களையும் துல்லியமாக கண்டுபிடித்துவிடும்.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் இந்த விமானம் சிறப்பாக பறந்து செல்லும் திறன் வாய்ந்தது. ஒரே நேரத்தில் 6 இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் படைத்திருக்கிறது. இந்த விமானம் அதிகபட்சமாக 29,700 கிலோ எடையுடன் டேக் ஆஃப் செய்யும் திறன் படைத்தது. அதிகபட்சமாக 7,000 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து செல்லும்.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இந்த போர் விமானத்தில் இரண்டு Klimov RD-33MK என்ற டர்போஃபேன்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மிக்-29 ரக போர் விமானத்தைவிட இந்த விமானத்தின் எஞ்சின் பன்மடங்கு கூடுதல் திறன் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

மிக்-35 போர் விமானமானது அதிகபட்சமாக 2,400 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது. அதிகபட்சமாக 2,000 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். 1,000 கிமீ பரப்பு வரையில் தாக்குதலில் ஈடுபடும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இந்த விமானத்தில் எந்திர துப்பாக்கி, ராக்கெட்டுகள்,ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. வான் இலக்கு மற்றும் தரை இலக்குகளை தாக்குவதற்கான ஆயுதங்களை பெற்றிருக்கிறது.

இந்த ரஷ்ய போர் விமானத்தை வாங்கினால் சீனாவுக்கு செக் வைக்கலாம்?

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில், போட்டியாளர்களைவிட இந்த நவீன ரக விமானத்தை 20 முதல் 25 சதவீதம் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்குவதாகவும் மிக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தர்சென்கோ கூறி இருக்கிறார். மேலும், விற்பனைக்கு பிந்தைய சேவையையும் வழங்குவதாக உறுதி கூறியிருப்பதும் குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம்.

மேலும்... #ராணுவம் #military
English summary
The Mikoyan Gurevich MIG-35 is Russia's latest fighter jet, and going by reports, it is also their most advanced 4++ generation fighter jet yet. The aircraft, on which development has almost been completed, demonstrated its capabilities at the recently concluded Mezhdunarodnyj aviatsionno-kosmicheskij salon (MAKS) 2017 air show in Russia.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more