விண்வெளியில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் விமானத்தை தயாரிக்கும் ரஷ்யா!

Written By:

குதிரையும், குதிரையும் சண்டைக்கு நிற்க, நடுவில் இருந்த புல் தேய்ந்தது போலத்தான் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான ஆயுதப் போட்டி இப்போது உலகிற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஆம், பூமியில் ஆயுதப்போட்டி நடத்தி வரும் இரு நாடுகளும் இப்போது விண்வெளியை பயன்படுத்தி, தங்களது ஆயுத பராக்கிரமத்தை நிலைநாட்டிக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றன.

ஏற்கனவே, அமெரிக்கா விண்வெளியில் அணு ஆயுதங்களை ரகசியமாக குவித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரஷ்யாவும் அதுபோன்று விண்வெளியில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் விமானம் ஒன்றை தயாரித்து வருவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. விண்வெளியில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் சிறப்பம்பசங்கள் பொருந்திய ஹைப்பர்சானிக் விமானம் ஒன்றை ரஷ்யா தயாரித்து வருகிறது.

 குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

PAK-DA என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய சூப்பர்சானிக் விமானத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. இது ராக்கெட் போன்ற அம்சங்களை கொண்ட விமானமாக இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

எஞ்சின் சோதனை

எஞ்சின் சோதனை

இரட்டை எரிபொருளில் இயங்கும் நுட்பம் கொண்ட இந்த விமானத்திற்கான ஹைபிரிட் எஞ்சின் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுவிட்டதாம். வளிமண்டலத்தில் பயணிக்கும்போது மண்ணெண்ணெயிலும், விண்வெளியில் பயணிக்கும்போது ஆக்சிஜன்- மீத்தன் கலவை எரிபொருளிலும் இந்த எஞ்சின் பயணிக்கும்.

வேகம்

வேகம்

மேக் 5 என்ற வேகத்தில் இந்த விமானம் பயணிக்குமாம். அதாவது, மணிக்கு 6,174 கிமீ வேகத்தில் பயணிக்கும். மேலும், ஸ்டீல்த் எனப்படும் எதிரி நாட்டு ரேடார் கண்களில் சிக்காதவாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

வெறும் 2 மணி நேரத்தில் பூமியின் எந்த மூலைக்கும் சென்றுவிடும் என்பதுடன், தாக்குதல் முடிந்த கையோடு ரஷ்யாவிலுள்ள தனது விமானப் படை தளத்திற்கு திரும்பிவிடும்.

 குண்டு வீச்சு திறன்

குண்டு வீச்சு திறன்

விண்வெளியிலிருந்து இந்த விமானம் அணு ஆயுதங்களை வீசும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வருவதை எதிரி ரேடார்கள் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால், துல்லியமான தாக்குதல்களை நடத்த முடியும் என்று ரஷ்யா கருதுகிறது.

 புரோட்டோடைப்

புரோட்டோடைப்

வரும் 2020ம் ஆண்டு இந்த விமானத்தின் புரோட்டோடைப் மாடல் தயாராகிவிடும். அதன்பிறகு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, ரஷ்யாவின் விமானப்படையில் சேர்க்கப்படும்.

 காற்றில் பறக்கும் விதிகள்

காற்றில் பறக்கும் விதிகள்

விண்வெளியில் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கும், அங்கு பயன்படுத்துவதற்கும், ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் சர்வதேச விண்வெளி சட்டத்தில் தடை இருக்கிறது. ஆனாலும், அந்த விதிகளை இப்போது காற்றில் பறக்கவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான்...

கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான்...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புறப்பட்ட பிரான்ஸ் போர்க்கப்பல்- சிறப்புத் தகவல்கள்

  

Picture credit: MilitaryRussia.RU

மேலும்... #ராணுவம் #military
English summary
Russia reveals hypersonic stealth bomber that can launch nuclear attacks from SPACE.
Story first published: Monday, July 18, 2016, 12:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark