அரிதான நிசான் ஜிடி-ஆர் சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்... அவசியம் என்ன?

Written By:

கிரிக்கெட் உலக ஜாம்பவனாக திகழும் சச்சின் டெண்டுல்கர் கார்களின் மீது அதீத நேசம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. இவர் வீட்டில் உள்ள கார் கேரஜில் எண்ணற்ற சொகுசுக் கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

இதில் சில கார்கள் சச்சினுக்கு பரிசாக கிடைத்தவை. இதிலும் சில கார்கள் இந்தியாவில் காணப்படும் மிகவும் அரிதிலும் அரிதான கார்கள் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்திய பிராண்ட் தூதராக இருக்கும் சச்சின், கடந்த ஆண்டில் உலகின் சிறந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்களுள் ஒன்றான பிஎம்டபிள்யூ ஐ-8 காரை வாங்கினார்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் பிஎம்டபிள்யூவின் புதிய தலைமுறை 7 சீரீஸ் சொகுசுக் காரை வாங்கினார். வாங்கிய கையோடு தனது விருப்பத்திற்கு ஏற்ப பல விஷேச ஆல்சஸெரீகளுடன் கஸ்டமைஸும் செய்துள்ளார்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

இந்தியாவின் மிகவும் அரிதாக காணப்படும் கார்களில் ஒன்றாக கருதப்படும் நிசான் ஜிடி-ஆர் ஈகோயிஸ்ட் மாடல் கார் ஒன்று சச்சினிடம் உள்ளது. இது ஒரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் வகை காராகும். இதனை செல்லமாக காட்ஸில்லா என்று அழைக்கின்றனர்

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்திருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் 29 சதம் சாதனையை, கடந்த 2011ஆம் ஆண்டு சமன் செய்தபிறகு சச்சின் இந்த நிசான் ஜிடி-ஆர் சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

தற்போது இந்த நிசான் ஜிடி-ஆர் காரை மும்பையைச் சேர்ந்த கார் சேகரிப்பாளர் ஒருவரிடம் திடீரென விற்பனை செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

சச்சினின் நிசான் ஜிடி-ஆர் ஈகோயிஸ்ட் கார் இந்தியாவில் 2 கோடி ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட ஒரு மாடலாகும். எனினும் அந்தக் கார் சச்சினுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதால் விலை சற்று கூடுதலாக இருக்கலாம்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

சச்சின் பயன்படுத்திய நிசான் ஜிடி-ஆர் ஈகோயிஸ்ட் கார் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்ட சொகுசான இண்டீரியர் கொண்டதாகும். இதில் ஜப்பானில் இருந்து தருவிக்கப்பட்ட பாடி கிட் பொருத்தப்பட்டிருந்தது.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

நிசான் ஜிடி-ஆர் ஈகோயிஸ்ட் சீரிஸ் காரில் 3.8 லிட்டர் டிவின் டர்போ வி6 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 562 பிஹச்பி ஆற்றலையும் 637 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும். இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

0-100 கிமீ வேகத்தை வெறும் 3 நொடிகளில் இந்தக் கார் எட்டிப்பிடித்துவிடும், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 320 கிமீ ஆகும்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

நிசான் ஜிடி-ஆர் கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் இந்தியாவில் ரூ.1.99 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இதனை 2011ஆம் ஆண்டிலேயே சச்சின் வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

நிசான் ஜிடி-ஆர் காரை சச்சின் டெண்டுல்கர் தவிர பாலிவுட் நட்சத்திரம் ஜான் ஆப்பிரஹாம் மற்றும் கோவையைச் சேர்ந்த முன்னாள் ஃபார்முலா-1 கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் ஆகியோரும் வைத்துள்ளனர்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

சச்சின் டெண்டுல்கரிடம் நிசான் ஜிடி-ஆர்,ஐ தவிர்த்து ‘ஃபெராரி 360 மோடெனா'என்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் இருந்தது.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

இந்தக் காரை 2011ல் டான் பிரேட்மேனின் அதிக சாதனையை சமன் செய்ததற்காக ஃபார்முலா-1 கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் சூமேக்கர் சச்சினுக்கு பரிசாக அளித்தார்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

எனினும் இந்தக் காரை அதே ஆண்டில் சூரத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபருக்கு மறு விற்பனை செய்தார் சச்சின்.

அரிதான ‘காட்ஸில்லா’வை விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர்.!

தற்போது ஃபெராரி 360 மோடெனா காரைத் தொடர்ந்து அரிதான நிசான் ஜிடி-ஆர் காரையும் விற்பனை செய்துள்ளார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

via car and bike

English summary
Read in Tmail about Sachin sold his Nissan GT-R super sports car.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark