விபத்து வாய்ப்பு மிக மிக குறைவான உலகின் மிகவும் பாதுகாப்பான டாப்- 5 விமானங்கள்!

Written By:

விமானப் பயணம் என்பது இனிமையானதாக கருதப்பட்டாலும், விபத்து என்றால் மிக கோரமான வகையிலான உயிரிழப்புகளையும், பொருள் இழப்புகளையும் தருகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் பல பயணிகள் விமானங்கள் மிக மிக பாதுகாப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் மீறி வானிலை, மனித தவறுகள் காரணமாக விமான விபத்துக்கள் நடக்கின்றன.

அதேசமயத்தில் அனைத்து வித சூழல்களிலும் சில விமான மாடல்கள் விபத்தில்லா அல்லது மிக மிக குறைவான விபத்துக்களில் சிக்கிய புள்ளிவிபரங்களுடன் உலகின் பாதுகாப்பான விமான மாடல்களாக அறியப்படுகின்றன. இந்த பட்டியலில் இருக்கும் விமானங்கள் நீங்கள் அடிக்கடி பயணிக்கும் விமான மாடலாக கூட இருக்கலாம். எனவே, அந்த பாதுகாப்பான விமான மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

01. ஏர்பஸ் ஏ340

01. ஏர்பஸ் ஏ340

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான மாடலாக ஏர்பஸ் ஏ340 விமானம் கருதப்படுகிறது. இந்த விமானம் ஒரு விபத்தில் கூட சிக்கியதில்லை என்பதுதான் இந்த பெருமைக்கு காரணம். இது ஏ340-200, 300, 500 மற்றும் 600 ஆகிய மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. 261 பயணிகள் முதல் 326 பேர் வரை பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக இருந்தது. கடந்த 1991ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்ட இந்த விமானம் 1993ல் பயணிகள் சேவைக்கு வந்தது. லூஃப்தான்ஸா, ஐபீரியா, சவுத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருக்கிறது.

 உலகின் மிகவும் பாதுகாப்பான பயணிகள் விமானங்கள்...!!

இது 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானம். ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 500 மற்றும் சிஎஃப்எம் இன்டர்நேஷனல் சிஎஃப்எம்56-5சி என்ற இரு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சிஎஃப்எம் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த விமானம் மணிக்கு 871 கிமீ வேகம் வரை பறக்க வல்லது. முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,400 கிமீ தூரம் வரை பறக்கும். 1993ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 377 ஏர்பஸ் ஏ340 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

02. போயிங் 777

02. போயிங் 777

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான மாடல்களில் இரண்டாவது சிறந்த மாடல் என்ற பெருமையை போயிங் 777 விமானம் பெறுகிறது. 18 மில்லியன் மணிநேர பயணத்தில் ஒரு விபத்தில் மட்டும் சிக்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

 உலகின் மிகவும் பாதுகாப்பான பயணிகள் விமானங்கள்...!!

கடந்த 1994ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. 1995ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. எமிரேட்ஸ், யுனைடேட் ஏர்லைன்ஸ், கத்தே பசிஃபிக் மற்றும் ஏர் பிரான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,460 போயிங் 777 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 396 பயணிகள் வரை செல்லும் இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 892 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக 13,650 கிமீ தூரம் வரை பறக்கும்.

03. போயிங் 747

03. போயிங் 747

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான மாடல் என்பதை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த வகை விமானங்களையே பயன்படுத்துகின்றனர் என்பதே சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விமானத்தின் விபத்து புள்ளி விபரங்களை பார்க்கும்போது 17 மில்லியன் மணிநேர பயணத்திற்கு ஒரு விபத்தில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 உலகின் மிகவும் பாதுகாப்பான பயணிகள் விமானங்கள்...!!

கடந்த 1969ம் ஆண்டு இந்த விமானம் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது 1970ம் ஆண்டில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ், கொரியன் ஏர், லூஃப்தான்ஸா, சைனா ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,568 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானமானது அதிகபட்சமாக 939 கிமீ வேகத்தில் பறக்கும். முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,320 கிமீ தூரம் வரை பறந்து செல்லும்.

04. போயிங் 737 என்ஜி

04. போயிங் 737 என்ஜி

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த விமானமும் விபத்தில்லா சேவையில் மிகச் சிறந்தவையாக இருக்கின்றது. 16 மில்லியன் மணிநேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 உலகின் மிகவும் பாதுகாப்பான பயணிகள் விமானங்கள்...!!

1997ல் முதல்முறையாக பறக்கவிடப்பட்ட இந்தவிமானம் 1998ம் ஆண்டு சேவைக்கு வந்தது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ரையன்ஏர், யுனைடேட் ஏர்லைன்ஸ், லயன் ஏர் ஆகிய நிறுவனங்களிடம் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. 1996ம் ஆண்டு முதல் இதுவரை 6,203 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இருக்கை வசதியை பொறுத்து 149 முதல் 220 பேர் வரை செல்லும் மாடல்களில் கிடைக்கிறது. இந்த விமானத்தில் 2 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 844 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 5,460 கிமீ தூரம் வரை செல்லும்.

05. போயிங் 767

05. போயிங் 767

இந்த விமானமும் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த விமானம் 15 மில்லியன் நேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து வாய்ப்பு இருப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றன.

 உலகின் மிகவும் பாதுகாப்பான பயணிகள் விமானங்கள்...!!

கடந்த 1981ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிடப்பட்டது. 1982ம் ஆண்டில் சேவைக்கு வந்தது. இதுவரை 1,096 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 900 கிமீ வேகத்தில் பறக்கும். முழுவதுகமாக எரிபொருள் நிரப்புகையில், 12,200 கிமீ தூரம் வரை செல்லும்.

அச்சம் தேவையில்லை...!!

அச்சம் தேவையில்லை...!!

தற்போது அனைத்து விமானங்களுமே உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. மோசமான வானிலை, தீவிரவாத தாக்குதல், மனித தவறுகள், பராமரிப்பில் குறை போன்ற விஷயங்கள்தான் விமான விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றன. எனவே, எந்த விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் அந்த விமானத்தை பாதுகாப்பு குறைவாக மதிப்பிட்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.

புதிய டாடா ஹெக்ஸா காரின் பிரத்யேக படங்கள்!

இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய டாடா ஹெக்ஸா காரின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Some Safest Airplanes In The World

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark