தங்கைக்கு திருமண பரிசாக ரோல்ஸ்ராய்ஸ் கார் வழங்கிய சல்மான்கான்!

By Saravana

இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை ஆர்பிதாவின் திருமணம். டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆயுஷ் சர்மாவுக்கும், ஆர்பிதாவுக்கு ஹைதராபாத்தில் மிக ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஷாரூக்கான் உள்பட பாலிவுட் பட்டாளமே திரண்டு வந்து பங்கேற்றது.

இந்தநிலையில், தனது தங்கைக்கு திருமண பரிசாக மும்பை, கார்டர் சாலையில் ரூ.16 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக வழங்கியுள்ளார் சல்மான்கான். அத்துடன் விலையுயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரையும் கொடுத்து அசத்தியிருக்கிறார். மிகவும் மதிப்புமிக்க ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


வெள்ளை நிற கார்

வெள்ளை நிற கார்

தங்கை ஆர்பிதாவுக்கு வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை சல்மான்கான் பரிசாக வழங்கியுள்ளார். இந்த கார் ரூ.4.5 கோடி விலை மதிப்பு கொண்டது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காரின் சிறப்பம்சங்களை காணலாம்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

5,842 மிமீ நீளமும், 1,990மிமீ அகலமும், 1,638மிமீ உயரமும் கொண்ட இந்த கார் 3,570மிமீ வீல்பேஸ் கொண்டது. இதனால், உட்புறத்தில் மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் 453 பிஎச்பி பவரையும், 720என்எம் டார்க்கையும் வழங்கும் 6,749சிசி வி12 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

ஹெவி வெயிட்

ஹெவி வெயிட்

இரண்டரை டன் எடை கொண்ட இந்த காரில் 100லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 460 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இருக்கிறது. இதன் டர்னிங் ரேடியஸ் 6.9 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

டயர், பிரேக்குகள்

டயர், பிரேக்குகள்

முன்புறம், பின்புறத்தில் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 255/50 R21 டயர்களும், பின்புறத்தில் 285/45 R21 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, முன்புறத்தில் இன்டிபென்டென்டட் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் இன்டிபென்டென்டட் மல்டி- லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

முன்புறம், பக்கவாட்டு மற்றும் தலைக்கு மேற்புறத்திலும் மற்றும் முழங்காலுக்கான ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக் டிஸ்க் லாக் ஆவதை தவிர்க்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் பவரை வீல்களுக்கு சரியாக பிரித்தனுப்பும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், வாகனம் கட்டுப்பாட்டை இழக்காமல் இருப்பதற்காக எஞ்சின் இயக்கத்தை குறைத்து, பிரேக் பிடிக்கும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், எச்யூடி எனப்படும் வைன்ட்ஸ்கிரீனில் டிஸ்ப்ளே போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள்.

எண்ணம்போல் வண்ணம்

எண்ணம்போல் வண்ணம்

இந்த கார் 16 விதமான கலர்களில் கிடைக்கிறது. உங்களுக்கு விருப்பமான கலரை மிக்ஸிங் செய்தும் பெயின்ட்டிங் செய்து தருவார்கள். சுருக்கமாக சொன்னால், நீங்கள் நினைக்கும் கலரில் இந்த காரை பெற்றுக்கொள்ளலாம். இதில், வெள்ளைநிறத்தை தேர்வு செய்து வாங்கியிருக்கிறார் சல்மான்கான்.

இடவசதி

இடவசதி

ஒரு விசாலாமான அறையில் உட்கார்ந்திருப்பது போன்ற அனுபவத்தை தரும். லெதர் இருக்கைகள் கண்ணை கவர்கிறது. இந்த இருக்கைகள் அனைத்தும் கையால் தைக்கப்படுகின்றன. லெதர் இருக்கைகளை தைப்பதற்கு பணியாளர்கள் இரண்டு வாரங்கள் எடுத்துகொள்கின்றனர்.

 உள்ளலங்காரம்

உள்ளலங்காரம்

ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டு ஆகியவை தேக்கு மர வேலைப்பாடுகளால் நிறைந்திருக்கிறது. இந்த தேக்கு மரங்கள் கேரளாவிலிருந்து செல்கின்றன என்பது கொசுறு செய்தி. ஒட்டுமாத்தத்தில் ஒரு நகரும் மாளிகை போன்று கலை நயம் மிக்கதாக இருக்கிறது இதன் உட்புறம். மேற்கூரையில் சன்ஃரூப் எனப்படும் திறந்து மூடும் கண்ணாடி கூரை பொருத்தப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Bollywood actor Salman Khan has gifted newly wed couple Arpita and Aayush brand new Rolls Royce Phantom. The car costs a whopping Rs.4 crore in India. 
Story first published: Thursday, November 20, 2014, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X