ஸ்க்ரூடிரைவரில் ஓடும் எலக்ட்ரிக் சைக்கிள்!

வித்தியாசமான மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை நில்ஸ் ஃபெர்பர் என்பவர் வடிவமைத்துள்ளார். தனது நண்பர்கள் செபாஸ்டியன் ஆரே, ரூபன் பாபெர் மற்றும் லுடால்ஃப் வான் ஓல்டன்சாசேனுடன் ஆகியோர் ஒத்துழைப்புடன் இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார். படுத்துக் கொண்டு செல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த சைக்கிள் இரண்டு எலக்ட்ரிக் ஸ்க்ரூடிரைவர் உதவியுடன் ஓடுகிறது.

எக்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் வழக்கத்திற்கு மாறான இந்த மூன்றுசக்கர சைக்கிளில் குப்புற படுத்துக் கொண்டு ஓட்டிச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை சாலைகளில் ஓட்டுவது என்பதற்கான சாத்திக் கூறுகள் மிக குறைவாகவே இருக்கின்றன. எக்ஸ் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 கஸ்டம் பில்ட்

கஸ்டம் பில்ட்

வழக்கமான டிசைன்களிலிருந்து வேறுபட்டு இருப்பதால், இதற்கான உதிரிபாகங்களை கஷ்டப்பட்டு சேகரித்து உருவாக்கினாராம் ஃபெர்பர். மேலும், சாதாரண சைக்கிள் பாகங்களையும் அதிகமாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிரைவிங்

டிரைவிங்

இந்த மூன்று சக்கர சைக்கிளை குப்புற படுத்துக் கொண்டு ஓட்டுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் கட்டுப்பாடு ஹேண்டில்பாரில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாஷ் ஸ்க்ரூடிரைவர்

பாஷ் ஸ்க்ரூடிரைவர்

இந்த சைக்கிளை செலுத்துவதற்கு பாஷ் நிறுவனத்தின் இரண்டு 18V எலக்ட்ரிக் ஸ்க்ரூடிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், அதிகபட்சமாக 30 கிமீ வேகம் வரை செல்ல முடியும்.

ஆற்றல் கடத்தல்

ஆற்றல் கடத்தல்

இரண்டு ஸ்க்ரூடிரைவர்களும் ஒரே சங்கிலியில் இணைக்கப்பட்டு ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. ஒரு ஸ்க்ரூடிரைவரில் பேட்டரி ஆற்றல் தீர்ந்து போனாலும், மற்றொரு ஸ்க்ரூடிரைவரை பயன்படுத்தி சைக்கிள் செல்லும்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

எந்த பக்கம் திரும்ப வேண்டுமோ அந்த பக்கம் உடலை வளைத்து பின் சக்கரத்தை திருப்பினால் வளைவுகளில் திரும்பும்.

கேட் தொழில்நுட்பம்

கேட் தொழில்நுட்பம்

CAD கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதன் ஃபிரேமை வடிவமைத்தனராம். ஏற்கனவே, வடிவமைக்கப்பட்ட பல வித்தியாசமான மூன்று சக்கர வாகன மாடல்களின் டிசைன் தத்துவங்களை மனதில் கொண்டு இதன் ஃபிரேம் உருவாக்கப்பட்டதாகவும் ஃபெர்பர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி

உற்பத்தி

இதனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் திட்டம் இல்லை என நில்ஸ் ஃபெர்பர் தெரிவித்துள்ளார். இது ஒரு புதிய டிசைனை உருவாக்கும் அடிப்படை முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு குறைபாடு

பாதுகாப்பு குறைபாடு

ஜாலியாக ஆள் அரவமற்ற இடத்தில் வேண்டுமானால் ஓட்டலாம். ஆனால், இதனை சாலையில் ஓட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
English summary
This unique three wheeled vehicle is the creation of Nils Ferber, who built it with help from his friends Sebastian Auray, Ruben Faber and Ludolf von Oldershausen. Besides sporting a unique design, the three wheeler dubbed "EX" - short for eccentricity - is perhaps the only vehicle we have come across until now that is powered by two electric screwdrivers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X