ஃபார்முலா - 1 நாயகன் செபாஸ்டியன் வெட்டலின் கஸ்டம் பைக்!

By Saravana

ஃபார்முலா - 1 போட்டிகளின் நாயகனாக வலம் வரும் செபாஸ்டியன் வெட்டல் தொடர்ந்து 4வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மேனுயல் ஃபேன்ஜியோ மற்றும் மைக்கேல் சூமேக்கர் ஆகிய வீரர்கள் போன்றே செபாஸ்டியன் வெட்டல் ரேஸ் உலகின் தற்போதைய கனவு நாயகனாக உருவெடுத்துள்ளார்.

ஃபார்முலா - 1 காரை பிளிர விடும் செபாஸ்டியன் வெட்டலுக்கு கஸ்டம் பைக் மீது தீராத ஆசை. இந்த ஆசையை ஜெர்மனியை சேர்ந்த வால்ஸ் ஹார்ட்கோர் சைக்கிள்ஸ் என்ற பைக் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனம் நிறைவேற்றி தந்துள்ளது. ஆம், செபாஸ்டியன் வெட்டலுக்காக அசத்தலான புதிய பைக்கை பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ளது.

 நிபுணர்

நிபுணர்

கஸ்டம் பைக் வடிவமைப்பில் கைதேர்ந்தவரான வால்ஸ் ஹார்ட்கோர் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மார்கஸ் வால்ஸ்தான் செபாஸ்டியன் வெட்டலுக்கு பைக்கை கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளார். வலது ஓரத்தில் நிற்பவர்தான் மார்கஸ் வால்ஸ்.

 அடிப்படை

அடிப்படை

அவலன்ச் என்ற கஸ்டம் பைக் அடிப்படையில் செபாஸ்டியன் வெட்டலுக்கான பைக்கை மார்கஸ் வால்ஸ் வடிவமைத்துள்ளார்.

 சின்னம்

சின்னம்

பைக்கின் பெட்ரோல் டேங்கில் செபாஸ்டியன் வெட்டலின் ரெட்புல் அணியின் சின்னமும், பக்கவாட்டில் செபாஸ்டியன் வெட்டல் பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், வெட்டல் பயன்படுத்தும் ஃபார்முலா - 1 காரின் முக்கிய வண்ணமான நீல வண்ணத்தில் இந்த பைக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட டயர்

பிரம்மாண்ட டயர்

பின்புறத்தில் பிரம்மாண்ட வடிவம் கொண்ட 280 மிமீ எம்இ880 எக்ஸ்எக்ஸ்எல் டயர் பொருத்தப்பட்டுள்ளது. ஹார்ட்கோர் வால்ஸ் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து கஸ்டம் பைக்குகளிலும் இந்த டயர்தான் பொருத்தப்பட்டிருக்கும்.

தாழ்வான இருக்கை

தாழ்வான இருக்கை

இந்த பைக்கில் மிக தாழ்வான இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. தரையிலிருந்து வெறும் 470 மிமீ உயரத்தில் இந்த இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. பைக்கின் மிக முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று.

இன்னொரு பிரபலம்

இன்னொரு பிரபலம்

செபாஸ்டியன் வெட்டல் மட்டுமின்றி மற்றுமொரு ஃபார்முலா - 1 உலக சாம்பியன் வீரரான கிமி ரெய்க்கோனனுக்கும் மார்கஸ் வால்ஸ் ஒரு பைக்கை கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளார்.

Most Read Articles

English summary
After another year of hard work though Vettel must be craving for a break and there is one thing that we know he loves besides fast Cars that helps him relax. Motorcycles. And the F1 World Champion owns one of the best looking custom choppers from the best custom motorcycle builder from Germany - Walz Hardcore Cycles.
Story first published: Monday, November 25, 2013, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X