செயல்விளக்கத்தின்போது பார்வையாளரை 'தூக்கிய' வால்வோ தானியங்கி கார்!

ஓட்டுனர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்களை கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் தானியங்கி கார்களின் மூலமாக வெகுவாக குறைக்க முடியும் என்று கார் நிறுவனங்கள் கூறி வருகின்றன.

பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய தானியங்கி கார்களின் கான்செப்ட் மற்றும் புரோட்டோடைப் மாடல்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றன. அதுபோன்று, வால்வோ கார் நிறுவனமும் ஓட்டுனர் உதவியில்லாமல் இயங்கும் தானியங்கி கார் ஒன்றை சமீபத்தில் டொமினிக்கன் குடியரசு நாட்டில் செயல்விளக்கம் செய்து காட்டியது.

அப்போது, செயல்விளக்கத்தை காண நின்று கொண்டிருந்த ஒருவரை அந்த வால்வோ கார் எதிர்பாராதவிதமாக மோதித் தள்ளியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலைகளில் பாதசாரிகள் அல்லது வாகனங்கள் குறுக்கே வந்தால், இந்த கார்கள் தானாகவே பிரேக் பிடித்து நின்றுவிடும். ஆனால், அந்த கார் தானியங்கி பிரேக் பிடிக்காமல் பார்வையாளர் மீது மோதியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, தானியங்கி முறையில் காரை இயக்கும் பொத்தானை அந்த காரில் இருந்த ஓட்டுனர் கவனக்குறைவாக இயக்க மறந்துவிட்டதாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் பார்வையாளர் மீது அந்த வால்வோ கார் திடீரென மோதும் காட்சியை காணலாம்.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Watch the video below as the car takes down a poor, unsuspecting spectator, who was standing in front of the car while the demonstration was going on. So what did the driver have to say about this? Well, the driver forgot to turn on the ‘City Safe' mode he says!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X