இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் சின்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியா வரும் புல்லட் ரயிலின் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை மும்பை- ஆமதாபாத் இடையே ஜப்பானிய ஒத்துழைப்புடன், பெரும் பொருட்செலவில் அமைக்கப்படுகிறது. 508 கிமீ தூரத்துக்கான இந்த வழித்தடதத்தில், 450 கிமீ தூரத்துக்கான ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

கடலுக்கு அடியில் அமைக்கப்படும் புல்லட் ரயில் வழித்தடத்திற்கான தொழில்நுட்பம் இந்திய நிறுவனங்களிடம் இல்லை. எனவே, வெளிநாட்டு நிறுவனத்திடம் இந்த பணி ஒப்படைக்கப்பட உள்ளது. 58 கிமீ தூரத்திற்கான பணிகளை வெளிநாட்டு நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த நிலையில், இந்தியா வர இருக்கும் சின்கன்சென் புல்லட் ரயில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. ஜப்பானில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வரும் சின்கன்சென் புல்லட் ரயில்தான் இந்திாயவிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. சின்கன்சென் இ-5 சீரிஸ் மாடல்தான் இந்தியாவில் சேவைக்கு வருகிறது.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சின்கன்சென் இ-5 சீரிஸ் புல்லட் ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கு 10 பெட்டிகள் கொண்ட ரயில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலில் 731 பேர் பயணிக்கலாம். இதில், 698 இருக்கைகள் சாதாரண வகுப்பாகவும், 55 இருக்கைகள் பிசினஸ் க்ளாஸ் எனும் உயர் வகுப்பாகவும் இருக்கும்.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த ரயில் சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சமாக மணிக்கு 443 கிமீ வேகம் வரை சென்று அசர வைத்தது. அதேநேரத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்க அனுமதிக்கப்படும்.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சின்கன்சென் புல்லட் ரயலின் மூக்குப் பகுதி 15 மீட்டர் நீளம் கொண்டது. சுரங்கப்பாதைகளில் இருந்து அதிவேகத்தில் வெளியேறும்போது டனல் பூம் எனும் சமச்சீர் அற்ற காற்றழுத்தத்தால் ஏற்படும், அதிக சப்தத்தை தவிர்ப்பதற்காகவே இந்த வடிவமைப்பை பெற்றிருக்கிறது. மேலும், இதன் பெட்டிகள் மிகவும் சிறப்பான சப்த தடுப்பு வசதியுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த ரயிலின் விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பும் அதிர்வுகளை வெகுவாக குறைத்துவிடுகிறது. மேலும், பாடி டில்டிங் என்ற விசேஷ தொழில்நுட்பம் மூலமாக வளைவுகளில் கூட இந்த புல்லட் ரயில் அதிக நிலைத்தன்மையுடன் பயணிக்கும்.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஜப்பானில் இயக்கப்படும் மாடல்களில் லெதர் இருக்கைகள், அலங்கார மரத் தகடுகள் பதிக்கப்பட்ட இன்டீரியர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புஷ் பேக் இருக்கைகளும் இந்த ரயிலின் சிறப்பு. ஒவ்வொரு பயணிகக்கும் தனித்தனியாக புத்தகம் படிப்பதற்கான பிரத்யேக விளக்குகள், மடக்கி வைக்கும் வசதியுடன் டைனிங் டேபிள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சின்கன்சென் ரயில்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. எனவே, தண்டவாளத்துக்கு பக்கத்தில் அமைக்கப்படும் சிக்னல் சிஸ்டம் தேவையில்லை. எனவே, விபத்து குறித்த அச்சம் தேவையில்லை. குறுகிய இடைவேளையில் இந்த ரயில்களை இயக்க முடியும்.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

நம் நாட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதத்திற்கு பெயர் போனவை. ஆனால், சின்கன்சென் புல்லட் ரயில், அதிகபட்சமாக 54 வினாடிகள் மட்டுமே தாமதமாக வந்தததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அதுவும் இயற்கை சீற்றங்கள்தான் காரணமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஜப்பானில் சின்கன்சென் ரயல் பயன்பாட்டுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில், 2004 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இரண்டு முறை தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. ஆனால், இதுவரை ஒருவர் கூட இந்த ரயிலால் உயிரிழந்தது இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அந்தளவு மிகவும் பாதுகாப்பான ரயில் என்று கூற முடியும்.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சின்கன்சென் புல்லட் ரயில் இந்தியாவின் ரயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை- ஆகமதாபாத் இடையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 7 மணிநேரத்தில் கடக்கின்றன. ஆனால், புல்லட் ரயில் 2 மணி நேரத்தில் கடந்துவிடும்.

 இந்தியா வரும் சிங்கன்சென் புல்லட் ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

மும்பை- ஆமதாபாத் பணிகள் முடிவடைந்தவுடன், அங்கிருந்து டெல்லிக்கு இந்த ரயில் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கடுத்து, டெல்லி- கொல்கத்தா இடையிலான புல்லட் ரயில் திட்டமும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Most Read Articles
English summary
Interesting Details About Shinkansen Bullet Train.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X