குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் புல்லட்டுகளுக்கு பதிலாக அப்பாச்சி பைக்!

குடியரசு தின விழாவில் பைக் சாகச நிகழ்ச்சியில் பங்குபெறும் குழுவினர் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பயன்படுத்த உள்ளனர்.

By Saravana Rajan

டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் புல்லட் மோட்டார்சைக்கிளுக்கு பதிலாக டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் புல்லட்டுகளுக்கு பதிலாக அப்பாச்சி பைக்!

உலகின் மிகப்பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று இந்தியாவின் குடியரசு தின விழா. ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து நடத்தும் இந்த விழாவில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சியில் நடைபெறுவது வழக்கம்.

 குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் புல்லட்டுகளுக்கு பதிலாக அப்பாச்சி பைக்!

இந்த நிகழ்ச்சிகளில் ராணுவ வீரர்கள் பல மோட்டார்சைக்கிள்களை இணைத்து பிரமிட் போல வருவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி. இந்த சாகச நிகழ்வுக்கு புல்லட் மோட்டார்சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

 குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் புல்லட்டுகளுக்கு பதிலாக அப்பாச்சி பைக்!

இந்த நிலையில், முதல்முறையாக இந்த சாகச நிகழ்வுக்காக டிவிஎஸ் அப்பாச்சி 180 ஆர்டிஆர் பைக்குகள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்கில் சாகசம் செய்ய இருக்கும் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினருக்கு டிவிஎஸ் நிறுவனமும், டீம் பேலன்ஸ் பாயிண்ட் என்ற பைக் ஸ்டன்ட் குழுவும் இணைந்து பயிற்சி அளித்துள்ளனர்.

 குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் புல்லட்டுகளுக்கு பதிலாக அப்பாச்சி பைக்!

தீ வளையத்திற்குள் பாய்ந்து செல்வது, ஒற்றை சக்கரத்தில் சாகசம் நிகழ்த்துவது, ஒரு மோட்டார்சைக்கிளில் பல வீரர்கள் இணைந்து சாகசம் செய்வது போன்ற பல சாகச நிகழ்ச்சிகள் டிவிஎஸ் அப்பாச்சி 180 ஆர்டிஆர் பைக் மூலமாக ராணுவ குழுவினர் செய்ய இருக்கின்றனர்.

 குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் புல்லட்டுகளுக்கு பதிலாக அப்பாச்சி பைக்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது மிகச் சிறப்பாக சாகசம் செய்த இந்த ராணுவ குழுவினர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கின்றனர். எனவே, நாளை இந்த குழுவினர் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் செய்ய இருக்கும் சாகசங்களை தவறாமல் கண்டு ரசியுங்கள்.

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிரத்யேக படங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Most Read Articles
English summary
The military team is trained by TVS and Team Balance Point (professional stunt team) to use the Apache motorcycle.
Story first published: Wednesday, January 25, 2017, 19:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X