ஃபேஸ்புக் மூலமாக பைக்கை விற்க முயன்ற கேடிஎம் உரிமையாளர் கொடூர கொலை!

By Saravana Rajan

கடந்த சில நாட்களுக்கு பெங்களூரை சேர்ந்த சோஹன் ஹல்தர் என்ற மென்பொருள் துறை பொறியாளர், அவரது அபார்ட்மென்ட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பணிக்கு வராததையடுத்து, அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரது மரணம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பல அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன. ஆம், ஃபேஸ்புக்கில் தனது பைக்கை விற்பனை செய்ய முயன்றதே, அவரது மரணத்துக்கு வழி வகுத்துவிட்டது என்ற உண்மை ஆன்லைனில் பொருட்களை விற்பவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

விசாரணை

விசாரணை

சோஹனின் மொபைல்போனுக்கு பேசியவர்கள் விபரத்தை எடுத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தியிருக்கின்றனர். அதில், கார்த்திக் என்பவரது மொபைல்போன் எண்ணிலிருந்து பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, சிசிடிவி கேமரா மற்றும் மொபைல்போன் உதவியுடன் குற்றவாளியான கார்த்திக்கை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்டிருக்கும் தகவல்கள் அனைவருக்கும் எச்சரிக்கையாக அமையும் என்ற நோக்கத்தில் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

ஃபேஸ்புக் பதிவு

ஃபேஸ்புக் பதிவு

கடந்த ஜூலை 27ந் தேதி சோஹன் ஹல்தர் தனது கேடிஎம் டியூக் 390 பைக்கை விற்பனை செய்வதற்காக, ஃபேஸ்புக் பக்கம் ஒன்றின் மூலமாக விளம்பர பதிவை போட்டிருக்கிறார். அதில், வண்டியின் கண்டிஷன், எவ்வளவு தூரம் ஓடியது என்பதுடன், எவ்வளவு விலை என்ற விபரத்தையும் தெரிவித்திருந்தார். இதைவிட உயர்வகை பைக்கை வாங்கும் எண்ணத்தில் இந்த பைக்கை விற்பனை செய்வதாகவும் காரணத்தை குறிப்பிட்டு, அவரது மொபைல்போன் எண்ணையும் போட்டிருந்தார்.

நெருங்கிய ஆபத்து

நெருங்கிய ஆபத்து

இந்த விளம்பரத்தை பார்த்த கார்த்திக் எம் டவுளத் சோஹனை தொடர்பு கொண்டிருக்கிறார். தன்னை பொறியியல் பட்டதாரி என்று அறிமுகம் செய்து கொண்ட கார்த்திக், பைக்கை வாங்க விருப்பம் தெரிவித்ததோடு, கடந்த 1ந் தேதி நேரில் பைக்கை பார்வையிட வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

[படத்தில் சோஹன் ஹல்தர்]

டீல் ஓகே

டீல் ஓகே

இதையடுத்து, கார்த்திக் சோஹன் பைக்கை நேரில் பார்த்து பிடித்து போய்விடவும், கடந்த 3ந் தேதி பைக்கை வாங்குவதற்கான இறுதி டீலில் இறங்கியிருக்கின்றனர். டீல் முடிந்தவுடன், இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது, சோஹனை கொலை செய்துவிட்டு பைக்கை திருடிச் செல்ல முடிவு செய்ததாக கார்த்திக் கூறியிருக்கிறார்.

கொலை

கொலை

அரை போதையில் இருந்த சோஹனுக்கு, சயனைடு விஷம் கலந்த மதுவை சோஹனுக்கு கட்டாயப்படுத்தி குடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக். இதில் மயக்கநிலைக்கு சென்ற சோஹனை முகத்தில் கவரை போட்டு இறுக்கி மூச்சுத் திணற வைத்து கொலை செய்துள்ளார்.

எஸ்கேப்

எஸ்கேப்

அதன்பிறகு, அவரது கேடிஎம் டியூக் 390 பைக், ஹெல்மெட் மற்றும் சோஹனின் பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு அந்த அபார்ட்மென்ட்டிலிருந்து தப்பிவிட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். அத்துடன், சோஹனின் வங்கி அட்டையை பயன்படுத்தி, ரூ.27,000 ரொக்கத்தையும் ஏடிஎம் மையத்திலிருந்து எடுத்துக் கொண்டு தப்பியதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சமூக விரோத செயல்கள்

சமூக விரோத செயல்கள்

குற்றவாளியான கார்த்திக் ராஜாஜி நகரை சேர்ந்தவர். ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. வங்கி ஒன்றில் திருட முயற்சித்தது, நகைக்கடையில் தங்க ஆபரணத்தை திருட முயன்றது, நண்பரின் பெற்றோரின் லேப்டாப்பை திருட முயன்றி மாட்டியது என பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், சோஹனிடமிருந்து திருடிச் சென்ற கேடிஎம் பைக்கையும் தனது ஏரியாவில் விற்பனை செய்ய முயன்றிருக்கிறார்.

[படத்தில் போலீஸ் பிடியில் இருக்கும் கொலை குற்றவாளியான கார்த்திக்]

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த சம்பவம் ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக வாகனங்களை விற்பனை செய்பவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், முன்பின் தெரியாதவர்களிடம் இதுபோன்று விற்பனை செய்யும்போது, அது உயிருக்கு உலை வைக்கும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. தற்போது ஆன்லைன் விற்பனை சந்தையிலும் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். கடந்த மாதம் இதேபோன்று ஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஸ்கார்ப்பியோ காரை திருடிச் சென்ற சம்பவம் குறித்து நாம் எழுதியிருந்தோம். எனவே , ஆன்லைனில் வாகனங்களை விற்பனை செய்ய முற்படுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு டிரைவ்ஸ்பார்க் தளம் கேட்டுக் கொள்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
KTM 390 Owner's FB Post Tragically Ends With His Brutal Death. Killer Identified And Arrested.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X