அமெரிக்க மண்ணில் தடம் பதிக்க முடியாத கார்கள் - சிறப்புத் தொகுப்பு

Written By:

அமெரிக்காவிற்கும், ஆட்டோமொபைல் துறைக்குமான தொடர்பும், வரலாறும் நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. அந்நாட்டில் கடைபிடிக்கப்படும் கடுமையான போக்குவரத்து மற்றும் வாகன தயாரிப்பு சட்டதிட்டங்களால் உலக அளவில் பிரபலமான பல மாடல்கள் அமெரிக்க மண்ணில் தடம் பதிக்க முடியாத நிலை இருக்கிறது.

சட்டதிட்டம், பொருளாதார நிலை, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவில் விற்பனைக்கு அனுமதிக்கப்படாத அல்லது அனுமதி பெறுவதற்கு இயலாத கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. ஃபோக்ஸ்வேகன் அமரோக்

10. ஃபோக்ஸ்வேகன் அமரோக்

அமெரிக்க தனிநபர் வாகன மார்க்கெட்டில் பிக்கப் டிரக்குகளுக்கு அதிக வரவேற்பு பெற்றிருக்கின்றன. பெரும்பாலான பிக்கப் டிரக் வாகனங்கள் அமெரிக்க மார்க்கெட்டை குறிவைத்து தயாரிக்கப்படுவதும், அங்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முனைவதும் வாடிக்கை. ஆனால், படத்தில் காணும் ஃபோக்ஸ்வேகனின் இந்த பிரபல பிக்கப் டிரக் மாடல் அமெரிக்காவில் இதுவரை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. காரணம், வழக்கம்போல் அமெரிக்க விதிமுறைகளுக்கு ஏற்ற அம்சங்கள் இல்லாததே.

09. மார்கன் ஏரோ 8

09. மார்கன் ஏரோ 8

அமெரிக்க வாடிக்கையாளர்கள் மிக வித்தியாசன வடிவமைப்பு கொண்ட கார்களை அதிகம் விரும்புவர். அவர்களது எண்ண ஓட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் இந்த மார்கன் கார் இலகுவான ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இந்த காரில் பிஎம்டபிள்யூவிடமிருந்து பெறப்படும் 4.8 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த பிரிட்டிஷ் தயாரிப்பு அமெரிக்க விதிகளுக்கு உட்பட்டு செல்வதில் பல தடைகள் இருப்பதால், அமெரிக்கர்கள் இந்த காரை ஓட்டும் கனவை துரத்திவிட வேண்டியது அவசியம்.

 08. ஆடி ஆர்எஸ்3 ஸ்போர்ட்பேக்

08. ஆடி ஆர்எஸ்3 ஸ்போர்ட்பேக்

அடக்கமான இந்த ஆடி ஸ்போர்ட்ஸ் கார் பெர்ஃபார்மென்சில் பிளிரும். ஆனால், துரதிருஷ்டவசமாக அமெரிக்காவில் இந்த கார் இதுவரை விற்பனைக்கு செல்லவில்லை. இந்த காரில் இருக்கும் 5 சிலிண்டர் எஞ்சின் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. 0 - 100 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும். அடுத்த ஆண்டு இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒரு தகவல் உலவுகிறது.

07. ஃபோக்ஸ்வேகன் சிராகோ

07. ஃபோக்ஸ்வேகன் சிராகோ

ஃபோக்ஸ்வேகன் ஜிடிஐ காரின் அடிப்படையில் மிகவும் கவர்ச்சிகரமான பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்ட மாடல். இந்த காரும் அமெரிக்கர்களுக்கு கிடைக்காதது துரதிருஷ்டவசமே என்று புலம்புகின்றனர் அமெரிக்க ஆட்டோமொபைல் துறையினர்.

 06. ஹோல்டன் எச்எஸ்வி மலூ

06. ஹோல்டன் எச்எஸ்வி மலூ

ஒரு காருக்குண்டான லட்சணங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் பிக்கப் டிரக். இந்த பிக்கப் டிரக்கில் 442 எச்பி பவரை அளிக்கும் 6.3 லிட்டர் எல்எஸ்3 வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சக்திவாய்ந்த பிக்கப் டிரக்கை பார்த்து பல அமெரிக்கர்கள் பெருமூச்சு விட்டும் பலனில்லை.

05. பீஜோ ஆர்சிஇசட் ஆர்

05. பீஜோ ஆர்சிஇசட் ஆர்

சிறந்த கூபே மாடல், சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் என பல்வேறு விருதுகளை ஐரோப்பாவில் வாங்கிய இந்த பீஜோ கார் இதுவரை அமெரிக்க மண்ணில் அடியெடுத்து வைக்க முடியவில்லை. 270 பிஎச்பி பவரை அளிக்கும் ஆற்றல் வாய்ந்த 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ிருக்கிறது.

 04. டொயோட்டா ஹைலக்ஸ்

04. டொயோட்டா ஹைலக்ஸ்

உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் இந்த கட்டுறுதிமிக்க டொயோட்டா பிக்கப் டிரக் இதுவரை அமெரிக்க மார்க்கெட்டில் தடம் பதிக்க முடியவில்லை. நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் இந்த பிக்கப் டிரக் அமெரிக்காவில் இல்லை.

03. லேண்ட்ரோவர் டிஃபென்டர்

03. லேண்ட்ரோவர் டிஃபென்டர்

அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்ட புதிய ஏர்பேக் விதிமுறைகளால் லேண்ட்ரோவர் டிஃபென்டர் விற்பனையும், உற்பத்தியும் அங்கு நிறுத்தப்பட்டது. லேண்ட்ரோவரின் இந்த டிஃபென்டர் மாடல் இதுவரை அங்கு மீண்டும் விற்பனைக்கு வரவில்லை என்பது பல அமெரிக்கர்களுக்கு ஏமாற்றமான விஷயம்.

02. அஸ்டன் மார்ட்டின் லகோண்டா டரஃப்

02. அஸ்டன் மார்ட்டின் லகோண்டா டரஃப்

முதலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்ட இந்த பிரத்யேக ஆடம்பர செடான் கார் தற்போது ஐரோப்பிய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அஸ்டன் மார்ட்டின் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த கார் அமெரிக்காவிற்கு அறிவிக்கப்படாதது பல அமெரிக்கர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

01. ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர் - எஸ் ஸ்போர்ட்பிரேக்

01. ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர் - எஸ் ஸ்போர்ட்பிரேக்

ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்எஃப்ஆர் எஸ் என்ற ஸ்டேஷன் வேகன் மாடல் இதுவரை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படவில்லை. 550 எச்பி பவரை அளிக்கும் வி8 எஞ்சின் கொண்ட இந்த வித்தியாசமான ஜாகுவார் ஸ்டேஷன் வேகன் காரும் அமெரிக்காவிற்கு வராது அங்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
English summary
Some Awesome Cars Not Allowed To Be Sold In America.
Story first published: Monday, April 6, 2015, 14:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark