டயர் வாங்கும்போது மனதில் வைக்க வேண்டிய 8 வழிமுறைகள்!

By Saravana

வாகனங்களின் செயல்திறன், மைலேஜ், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் அடிப்படை காரணமாக இருக்கின்றன டயர்கள். பலர் டயர்கள் மீது போதிய அக்கறை செலுத்தாதன் காரணமாக, பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

மேலும், தோசைக்கல் அளவுக்கு தேயும் வரை டயர்களை வைத்து ஓட்டுகின்றனர். அதுபோன்று, ஓட்டுவது உயிருக்கு உலை வைக்கும் விஷயமாக அமைந்துவிடும். சரியான காலத்தில் டயர்களை மாற்றிவிடுவது அவசியம். அவ்வாறு, புதிய டயர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

01. அங்கீகரிக்கப்பட்ட மையம்

01. அங்கீகரிக்கப்பட்ட மையம்

டயர் வாங்கும்போது சிறந்த பிராண்டுகளை தேர்வு செய்யவும். மேலும், அந்த பிராண்டின் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் மட்டுமே வாங்கவும்.

02. தயாரிப்பு குறைபாடுகள்

02. தயாரிப்பு குறைபாடுகள்

டயரை தேர்வு செய்யும்போது, அந்த டயரில் குறைபாடுகள் இருக்கிறதா என்பதை தீர ஆய்வு செய்ய வேண்டும். சில நேரங்களில் புதிய டயர்களின் சில இடங்களில் வீக்கம் போன்று அல்லது மெல்லிய கிழிசல்கள் இருப்பது போன்ற தயாரிப்பு குறைபாடுகள் இருக்கலாம்.

03. சஸ்பென்ஷன் பிரச்னை

03. சஸ்பென்ஷன் பிரச்னை

புதிய டயர் மாற்றும்போது சஸ்பென்ஷனையும் செக்கப் செய்வது அவசியம். சஸ்பென்ஷனில் பிரச்னை இருந்தால், புதிய டயர்களில் விரைவாக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, சஸ்பென்ஷனில் சிறிய பிரச்னை இருந்தாலும் சரிசெய்து விட்டு டயரை மாற்றவும்.

 04. டயர் சைஸ்

04. டயர் சைஸ்

வாடிக்கையாளர் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயர்களை மட்டுமே வாங்கி பொருத்த வேண்டும். சட்ட விதிகளுக்கு மட்டுமின்றி, சரியான அளவுடைய டயரை பொருத்தாவிட்டால், பாதுகாப்பு பிரச்னைகளையும், மைலேஜ், கையாளுமை, சஸ்பென்ஷன் மற்றும் எஞ்சினில் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

05. வீல்கள்

05. வீல்கள்

காருக்கான கஸ்டமைஸ் ஆப்ஷன்களில் முக்கியமானதாக, சக்கரங்களை குறிப்பிடலாம். பரிந்துரைக்கப்பட்ட சக்கரங்களுக்கு சரியான அளவுடைய டயர்களை தேர்வு செய்து பொருத்தவும். மேலும், சக்கரங்களில் பாதிப்புகள் இருந்தாலும் சரிசெய்துவிட்டோ அல்லது புதிய ரிம்களை பொருத்தி டயர்களை மாற்றவும்.

06. ஒரே நேரத்தில்...

06. ஒரே நேரத்தில்...

காரில் 4 டயர்களையும் ஒரே சமயத்தில் மாற்றுவது அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில், புதிய டயர்களை எப்போதுமே பின்புற சக்கரங்களில் பொருத்தவும். ஒரேயொரு டயரை மட்டும் மாற்றுவதை தவிர்ப்பது நலம்.

 07. எது பெஸ்ட்?

07. எது பெஸ்ட்?

உங்களது கார் நிறுவனத்தின் தயாரிப்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில்தான் டயர்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விடுங்கள். கார் பற்றி விபரம் அறிந்த நண்பர்கள், மெக்கானிக்குகளின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்துகொண்டு, உங்கள் காருக்கு பொருத்தமான சிறந்த பிராண்டு டயர்களை வாங்குவதும் நல்லது.

08. புதுசுதானே...

08. புதுசுதானே...

புதிய டயர்களை மாற்றியவுடன் பலர் அந்த டயரின் பராமரிப்பின் மீது அதிக கவனம் செலுத்த தவறிவிடுவர். புதுசுதானே என்ற எண்ணம் இருப்பதே காரணம். ஆனால், ஒவ்வொரு மாதமும் ஒரு பிஎஸ்ஐ அளவுக்கு காற்று அழுத்தம் குறையும். எனவே, புதிய டயராக இருந்தாலும் அவ்வப்போது காற்றழுத்தத்தை சோதிப்பது அவசியம்.

Most Read Articles
English summary
Some Important Things You Need To Know When Buying New Car Tyres.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X