அதென்னெய்யா பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ்... தெரிஞ்சிக்கலாம் வாங்க!

By Saravana

கார் முன்பதிவு செய்யும்போது சில டீலர்களில் இருவிதமான இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை புரோஷரில் கொடுத்திருப்பார்கள். ஒன்று Comprehensive insurance என்றும் மற்றொன்று " Zero Depreciation policy அல்லது பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு எதை வாங்குவது என்ற குழப்பம் ஏற்படுவது இயற்கை. மேலும், Zero Depreciation திட்டத்தை எடுத்துக் கொள்ளுமாறும், அதில் அனைத்தும் கவர் ஆகிவிடும் என்று விற்பனை பிரதிநிதி கூறுவார். தற்போது பெரும்பான்மையானோர் தேர்வு செய்வதும் இந்த திட்டத்தையே.

இந்த நிலையில், Zero Deperciation கார் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தின் சில சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.

 அடிப்படை விஷயங்கள்

அடிப்படை விஷயங்கள்

ஒருங்கிணைந்த பலன்களை தரும் Comprehensive இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தின் கூடுதல் கவரேஜ் கொண்ட திட்டம்தான் Zero Depreciation இன்ஸ்யூரன்ஸ் திட்டம். ஒருங்கிணைந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில், வாகனத்தை ஓட்டுபவர், உடன் பயணிப்போர், வாகனத்திற்கான சேதாரச் செலவு மற்றும் வாகனம் மோதி பாதிப்படைவர்களுக்கு என அனைத்திற்கும் இழப்பீடு செய்து கொள்ளும் பேக்கேஜ் திட்டமே Comprehensive கார் இன்ஸ்யூரன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இதற்கும் Zero Depreciation இன்ஸ்யூரன்ஸ் திட்டத்திற்கும் வேறுபாடுகளை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஒருங்கிணைந்த திட்டம்

ஒருங்கிணைந்த திட்டம்

காம்பரிஹென்சிவ் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் ரப்பர், நைலான், பிளாஸ்டிக் பாகங்கள், பேட்டரி மற்றும் ஏர்பேக் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை மட்டுமே இழப்பீடு கோர முடியும். வாகனத்தின் ஆயுள் மற்றும் பாகங்களின் தேய்மானத்தை கணக்கிட்டு, இழப்பீடு வழங்கப்படும். மேலும், ஃபைபர் கிளாஸ் பாகங்களுக்கு 30 சதவீதம் வரை தேய்மான மதிப்பு கழித்துக் கொண்டு இழப்பீடு தருவர். மரத்தாலான பாகங்களுக்கு முதல் ஆண்டில் 5 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 10 சதவீதம் வரையிலும், மூன்றாம் ஆண்டில் 30 சதவீதம் வரையிலும் தேய்மானம் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்குவர்.

 பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ்

பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ்

ஆனால், Zero Depreciation எனப்படும் பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில், தேய்மான செலவு கணக்கில்கொள்ளாமல், சேதமடைந்த பாகத்தில் 100 சதவீதம் வரை இழப்பீடு பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் புதிய பாகங்களின் விலை அதிகரித்திருப்பதை கருதி, 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இழப்பீடு தொகையை குறைத்து வழங்குவது வாடிக்கை. காம்பரிஹென்சிவ் திட்டத்தில் இருப்பது போன்ற அனைத்து ரப்பர், நைலான், பிளாஸ்டிக் பாகங்களுக்கு இழப்பீடு கோர முடியும். ஆனால், இந்த திட்டத்தில் பேட்டரி மற்றும் டயர்களுக்கு இழப்பீடு கோர முடியாது.

 என்கிட்ட பம்பர் டூ பம்பர் இருக்கே

என்கிட்ட பம்பர் டூ பம்பர் இருக்கே

என்கிட்டே பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ் இருக்கிறது. எனவே, எல்லா பாகங்களுக்கும் இந்த இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகும் என்பது நினைப்பது தவறானது. டயர், பேட்டரிக்கும், எஞ்சின் பாகங்களுக்கும் இந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் இழப்பீடு கோர முடியாது. கிளட்ச் பிளேட், பிரிக்ஷன் டிஸ்க், ஆக்சிஜன் சென்சார், எஞ்சின் மவுண்ட், பேரிங்குகள் போன்றவையும் எந்தவொரு இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தின் மூலமாக இழப்பீடு கோர முடியாது என்பதை நினைவில் வைக்க வேண்டியது அவசியம்.

 ஹைட்ரோலாக் ஆனால்...

ஹைட்ரோலாக் ஆனால்...

கார் எஞ்சினில் தண்ணீர் புகுந்து ஹைட்ரோலாக் ஆவதற்கும், எஞ்சின் செயலிழந்து போகும்போதும் இன்ஸ்யூரன்ஸ் மூலமாக இழப்பீடு கோர முடியாது.

 இதையும் மனதில் வையுங்கள்

இதையும் மனதில் வையுங்கள்

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது, சுயநல நோக்கோடு ஏற்படுத்தப்படும் விபத்துக்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டும்போது விபத்தில் சிக்குவது போன்ற சமயங்களில் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோர முடியாது. ஒவ்வொரு முறையும் இழப்பீடு கோரும்போது ரூ.1,000 பிடித்தம் செய்துகொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் திட்டங்கள்

கூடுதல் திட்டங்கள்

காம்பரிஹென்சிவ் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் கூடுதலாக எஞ்சின் புரொடெக்டர் திட்டம், விபத்தில் சிக்கும்போது ஏற்படும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட கூடுதல் திட்டங்களையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Know about Bumper to Bumper Car Insurance. Pros Benefits and Hidden Clauses in Zero Depreciation Plan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X