பிம்மர் என்கிற பிஎம்டபிள்யூ... தெரிந்த பிராண்டு, தெரியாத உண்மைகள்!!

மோட்டார்சைக்கிள்களில் புல்லட் எப்படியோ, அதபோன்று சொகுசு கார்களில் பிஎம்டபிள்யூ.,வும் பலருக்கு கனவு. அது சச்சினாக இருந்தாலும், சாமானியனாக இருந்தாலும் சரி, பிஎம்டபிள்யூ.,வை இலக்காக வைத்து முன்னேறியவர்கள், முன்னேறத் துடிப்பவர்கள் ஏராளம்.

இன்று உலக அளவில் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர் பின்புலத்துடன் பலரையும் வசீகரித்து வரும் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் நீண்ட பாரம்பரியம் கொண்ட கார் நிறுவனங்களில் ஒன்று. பிம்மர் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்தின் பின்னால் மறைந்து நிற்கும் சுவாரஸ்யங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

01. ஸ்தாபிதம்

01. ஸ்தாபிதம்

பவேரியன் மோட்டார் ஒர்க்ஸ் என்பதன் சுருக்கம்தான் பிஎம்டபிள்யூ. 1916- ல் விமான எஞ்சின் தயாரிப்புடன் ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்தது. அதைத்தொடர்ந்து, உலகப் போர் தாக்கங்கள் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படுத்திய மாற்றங்களால், மோட்டார்சைக்கிள் மற்றும் கார் தயாரிப்பு பக்கம் கவனத்தை திருப்பியது. ஜெர்மனியின் மூனிச் நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆஸ்டின் 7 கார் அடிப்படையில் முதல் கார் மாடலான டிக்ஸியை உருவாக்கியது. அதுமுதல் தனது கார் தயாரிப்பு பயணத்தை துவங்கியது.

02. கிட்னி க்ரில்

02. கிட்னி க்ரில்

பிஎம்டபிள்யூ என்றவுடன் அதன் லோகோவும், அதன் கார்களில் இடம்பெற்றிருக்கும் தனித்துவமான இரட்டை சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பும்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். முதல்முறையாக இந்த சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு பிஎம்டபிள்யூ 303 காரில்தான் பயன்படுத்தப்பட்டது. மேலும், இந்த கார்தான் பிஎம்டபிள்யூவின் 6 சிலிண்டர்கள் எஞ்சின் கொண்ட முதல் கார் மாடல். இதைத்தொடர்ந்து, இந்த க்ரில் அமைப்பு கால மாற்றத்துக்கும், வாடிக்கையாளரின் எண்ண ஓட்டத்திற்கும் தக்கவாறும் பல்வேறு மாறுதல்களை பெற்று வருகிறது.

03.பிஎம்டபிள்யூ தலைமையகம்

03.பிஎம்டபிள்யூ தலைமையகம்

பிஎம்டபிள்யூவின் தலைமையக கட்டடம் நாணயங்களை அடுக்கியது போன்ற நான்கு கோபுரங்கள் கட்டட அமைப்பை கொண்டது. இது கார் எஞ்சினின் சிலிண்டரை நினைவூட்டும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனம் 4 சிலிண்டர் எஞ்சின்கள் மீது அதீத ஆர்வம் கொண்டது. அதனை பரைசாற்றும் விதத்திலும் இந்த கட்டட அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

04. பிஎம்டபிள்யூ லோகோ

04. பிஎம்டபிள்யூ லோகோ

பவேரியன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வண்ணங்களாக நீலம் மற்றும் வெள்ளை பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, சக்கரங்களின் உள்ளிருக்கும் விசிறி போன்ற அமைப்பு விமான எஞ்சினை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

05. பெர்ஃபார்மென்ஸ் பிராண்டு

05. பெர்ஃபார்மென்ஸ் பிராண்டு

பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் அடிப்படையிலான அதிக சக்திவாய்ந்த மாடல்கள் M என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. 1960களில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பந்தய பிரிவுக்காக இந்த எம் பிராண்டு துவக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தனது கார் மாடல்களின் உயர் சக்தி கொண்ட மாடல்களை இந்த எம் பிராண்டில் விற்பனை செய்ய பயன்படுத்தியது. மேலும், பிஎம்டபிள்யூவின் எம் பெர்ஃபார்மென்ஸ் பிரிவு பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் உயர்வகை மோட்டார்சைக்கிள் உருவாக்கத்திலும் ஈடுபட்டு வருகிறது.

06. பிஎம்டபிள்யூ மோட்டாராட் டூ வீலர்ஸ்

06. பிஎம்டபிள்யூ மோட்டாராட் டூ வீலர்ஸ்

சொகுசு கார் தயாரிப்பு மட்டுமின்றி, உயர்வகை மோட்டார்சைக்கிள் தயாரிப்பிலும் புகழ்பெற்று விளங்குகிறது. 1923ம் ஆண்டு முதல் மோட்டார்சைக்கிள் தயாரிப்பிலும் பிஎம்டபிள்யூ ஈடுபட்டு வருகிறது. 1930களில் இந்த நிறுவனத்தின் அதிவேக மோட்டார்சைக்கிள்கள் உலக புகழ்பெற்றவை. தற்போது உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் பைக் பந்தயத்தில் தனது பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மோட்டார்சைக்கிளுடன் பங்கெடுத்து வருகிறது.

07. சக்கை போடு போட்ட மைக்ரோ கார்

07. சக்கை போடு போட்ட மைக்ரோ கார்

1950களில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பரீட்சார்த்தமாக ஒரு மைக்ரோ கார் ஒன்றை உருவாக்கியது. பபுள் கார் என்று அழைக்கப்பட்ட இந்த கார் இசெட்டா நிறுவனத்திடம் லைசென்ஸ் பெற்று தயாரிக்கப்பட்டது. முன்பக்கம் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கார் 3 லிட்டர் பெட்ரோலுக்கு 100 கிமீ மைலேஜ் தரும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும், அதிகம் விற்பனையான ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்ட கார் மாடலும் இதுவே. மொத்தம் 1,61,728 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

08. டெய்ம்லர் திட்டம் முறியடிப்பு

08. டெய்ம்லர் திட்டம் முறியடிப்பு

1959ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பிஎம்டபிள்யூவை கையகப்படுத்த டெய்ம்லர் முயற்சித்தது. ஆனால், அதனை தவிர்ப்பதற்காக வேறு முதலீட்டாளரின் உதவியை பிஎம்டபிள்யூ நாடியது. அப்போது கைகொடுத்த அந்த குடும்பத்தினரிடம்தான் பிஎம்டபிள்யூவின் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன.

09. பிஎம்டபிள்யூ கீழ் ரோல்ஸ்ராய்ஸ்...

09. பிஎம்டபிள்யூ கீழ் ரோல்ஸ்ராய்ஸ்...

நிதி நெருக்கடிகளையும், போட்டியாளர்களையும் செம்மையாக வென்று வந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் தற்போது மினி கார் பிராண்டும், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

10. டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி

10. டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் கூட்டணி அமைத்து நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள்கள் மூலமாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும், பிஎம்டபிள்யூவிற்கும் எதிர்கால வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்களையும், வளர்ச்சியையும் எதிர்பார்க்கலாம். இப்படி காலத்திற்கு தகுந்தவாறு மாற்றங்களை ஏற்படுத்தி தன்னை சந்தையில் பலப்படுத்திக் கொண்டு வருகிறது பிஎம்டபிள்யூ.

தொடர்புடைய சுவாரஸ்யங்கள்

தொடர்புடைய சுவாரஸ்யங்கள்

Most Read Articles
English summary
So what makes BMW tick? Why is it such an iconic automobile and motorcycle brand? Here are ten cool things to know about BMW.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X