இந்திய விமானப்படை பற்றிய 15 சுவாரஸ்ய விஷயங்கள்!!

Posted By:

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. எதிரிகளை விரைவாக எதிர்கொள்வதற்கு மட்டுமின்றி,  வான் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய விமானப்படையின் பங்கு மிக முக்கியமானது.

பாதுகாப்புப் பணிகள் மட்டுமின்றி, இயற்கை பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியதாக உள்ளது. அண்டை நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் இந்திய விமானப்படையின் பல சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஸ்தாபிதம்

ஸ்தாபிதம்

1932ம் ஆண்டு அக்டோபர் 8ந் தேதி வெறும் 25 வீரர்களுடன் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 8ந் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு, தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டும், நவீனமயமாக்கப்பட்டும் வந்ததன் காரணமாக இன்று உலகின் மிகப்பெரிய விமானப் படைகளுள் ஒன்றாக இருக்கிறது.

4வது பெரிய விமானப்படை

4வது பெரிய விமானப்படை

அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்து உலகிலேயே மிகப்பெரிய விமானப்படை எனும் அந்தஸ்தை இந்திய விமானப்படை பெற்றிருக்கிறது. உலகிலேயே 4வது பெரிய விமானப்படை நம்மிடம்தான் உள்ளது.

பலம்

பலம்

இந்திய விமானப்படையில் 1.70 லட்சம் வீரர்கள் உள்ளனர். 1,130 போர் விமானங்களும், வானிலேயே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் 7 டேங்கர் விமானங்களும், 133 சரக்கு விமானங்களும், 158 பயிற்சி விமானங்களும், 33 தாக்குதல் அம்சங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள், 156 சரக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் 200 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

மியூசியம்

மியூசியம்

டெல்லியில் இந்திய விமானப்படையின் மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் விமானப்படையின் வரலாற்றையும், சாதனைகளும் பிரதிபலிக்கும் காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

வெற்றி, வெற்றி, வெற்றி

வெற்றி, வெற்றி, வெற்றி

இந்திய விமானப்படையின் வரலாற்றில் 1948 முதல் கார்கில் போர் வரையிலான சரித்திரத்தில் அனைத்து போர்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது இந்திய விமானப்படை.

முதல் போர்

முதல் போர்

இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர் இந்தியாவுக்காக நடந்ததில்லை. இரண்டாம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்காக இங்கிலாந்து சார்பில் இந்திய விமானப்படை பங்கேற்றது.

 ராயல் பெயர்

ராயல் பெயர்

இங்கிலாந்து விமானப்படையின் இந்திய பிரிவாக இயங்கிய நம் நாட்டு விமானப்படை இரண்டாம் உலகப் போருக்காக 1945 முதல் 1950 வரை ராயல் இந்திய விமானப்படை என்று அழைக்கப்பட்டது. 1950ல் குடியரசு நாடாக மாறியபோது ராயல் நீக்கப்பட்டது.

 எமகாதக மிக்21 விமானம்

எமகாதக மிக்21 விமானம்

இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள மிக் 21 ரக விமானங்களின் விபத்துக்களால் இதுவரை 171 பைலட்டுகள், 39 பொதுமக்கள் மற்றும் 8 இதரத் துறைகளை சேர்ந்தவர்களின் உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.

விமானப்படை தளங்கள்

விமானப்படை தளங்கள்

நாடு முழுவதும் 60 விமானப் படை தளங்கள் இருக்கின்றன. இதில், 16 விமானப்படை தளங்களை கொண்டிருக்கும் மேற்கு பிராந்தியமே மிகப்பெரியது. நம் நாடு தவிர்த்து, வெளிநாட்டிலும் இந்திய விமானப்படைக்கு ஒரு தளம் உண்டு. அது தஜிகிஸ்தான் நாட்டில் பார்கோர் என்ற இடத்தில் உள்ளது.

மிக உயரமான விமானப்படை தளம்

மிக உயரமான விமானப்படை தளம்

இந்திய விமானப்படையின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தளம், சியாச்சின் பனிச்சிகரத்தில் உள்ளது.

உலக சாதனை

உலக சாதனை

லாக்ஹீட் மார்ட்டின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை லடாக்கிலுள்ள டவுலத் பெக் ஒல்டி விமான ஓடுபாதையில் தரையிறக்கி இந்திய விமானப்படை சாதனை படைத்தது. உலகிலேயே அதிக உயரத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டது உலக சாதனையாக கருதப்படுகிறது. அந்த விமானம் கடல் மட்டத்திலிருந்து 16,654 அடி உயரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டது.

 முதல் விமானம்

முதல் விமானம்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் போர் விமானம் எச்எஃப்24 மருத். ஜெர்மனியை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர் கர்ட் டேங்க் இந்த விமானத்தை வடிவமைத்து கொடுத்தார். 1961 முதல் 1985 வரை பயன்பாட்டில் இருந்தது. இதற்கடுத்து, இப்போது தேஜஸ் என்ற இலகு வகை போர் விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மூன்று பெரிய விமானங்கள்

மூன்று பெரிய விமானங்கள்

உலகிலேயே சி-17 குளோப்மாஸ்டர் 3, லாக்ஹீட் மார்ட்டின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் Il-76 ஆகிய மூன்று பெரிய வகை விமானங்களை பயன்படுத்தும் ஒரே விமானப்படை இந்திய விமானப்படைதான் எனஅபது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை

உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை

உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட விமானப்படை என்ற பெருமை இந்திய விமானப்படைக்கு உண்டு. 2013ம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, ஆபரேசன் ரஹத் என்ற பெயரில் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 19,600 பேர் மீட்கப்பட்டனர். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் 2,140 முறை பறந்து இந்த மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்தது. மேலும், 3,82,400 கிலோ எடையுடைய மீட்பு மற்றும் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கியது.

லோகோ மாற்றம்

லோகோ மாற்றம்

1933ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய விமானப்படை விமானங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வட்ட வடிவ சின்னம் 4 முறை மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது தேசியக் கொடி வண்ணத்தில் வட்ட வடிவ சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 
மேலும்... #ராணுவம் #military
English summary
Here are some facts about the IAF you may not have known.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark