இது மாதிரி எதிர்பார்ப்புகள் உடையவர்களுக்கு மாருதி ஸ்விஃப்ட் கார் ஒத்துவராது!!

Posted By:

இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் கார் மாடல் மாருதி ஸ்விஃப்ட்.  டிசைன், எஞ்சின், மைலேஜ், விலை, கையாளுமை, குறைவான பராமரிப்பு செலவீனம், சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்கள் டக், டக் என டிக்கடித்து விட முடிகிறது. இதனால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய வாடிக்கையாளர்களை பெற்று பீடு நடைபோட்டு வருகிறது.

மேலும், மாருதியின் விற்பனையில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனாலும், எல்லோருடைய டேஸ்ட்டும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா. சிலருடைய எதிர்பார்ப்புகளுக்கு இந்த கார் ஒத்துவராதாக மாடலாக கூறலாம். அதற்கான காரணங்களை பார்க்கலாம்.

01. டிசைன்

01. டிசைன்

ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட மாடல் மாருதி ஸ்விஃப்ட். இதன் டிசைனுக்கு லட்சக்கணக்கானோர் மயங்கியிருக்கின்றனர். ஆனால், பிறரிடரிம் இருந்து தனித்துவமாக தெரியும் வகையிலான மாடல் வேண்டும் என்பவர்களுக்கும் ஸ்விஃப்ட் ஒத்துவராது. ஏனெனில், சாலையில் எக்கச்சக்க ஸ்விஃப்ட் பெருகிவிட்டதால், பத்தோடு பதினொன்றாகவே இருக்கும்.

02. சிறப்பான இடவசதி

02. சிறப்பான இடவசதி

முன் இருக்கை சிறப்பானதாக இருந்தாலும், பின் இருக்கையில் மிக நெருக்கடியான உணர்வை தரும். மேலும், உயரமான ஓட்டுனர் என்றால், அவருக்கு பின்னால் அமர்ந்து வருபவரின் நிலை சற்று பரிதாபத்துக்குரியதாக இருக்கும்.

 03. கட்டுமான தரம்

03. கட்டுமான தரம்

இதைவிட சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட மாடல்கள் மார்க்கெட்டில் இருப்பதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். ஃபோக்ஸ்வேகன் போலோ, ஃபியட் புன்ட்டோ எவோ போன்ற கார்கள் மாருதி ஸ்விஃப்ட்டைவிட சிறப்பான கட்டுமானத் தரம் கொண்டதாக இருக்கின்றன.

04. செயல்திறன்

04. செயல்திறன்

அதிக மைலேஜ் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரின் எஞ்சின் செயல்திறன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். அதிக செயல்திறன் கொண்ட ஹேட்ச்பேக் கார் ரகத்தை விரும்புவோர் வேறு மாடல்களை பரிசீலிப்பது சிறந்தது.

05. பூட் ரூம்

05. பூட் ரூம்

பொருட்கள் வைப்பதற்கான இடவசதியும் குறைவு. இதைவிட சிறந்த பூட் ரூம் கொண்ட ஹேட்ச்பேக் கார்கள் மார்க்கெட்டில் உள்ளன.

06. பாதுகாப்பு

06. பாதுகாப்பு

மாருதி ஸ்விஃப்ட்டைவிட குறைவான அல்லது சமமான விலை கொண்ட கார்களின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படுகிறது. சில மாடல்களில் ஸ்விஃப்ட்டை விட குறைவான வேரியண்ட்டில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில்தான் இந்த வசதிகளை பெற முடியும்.

07. கிராஷ் டெஸ்ட்

07. கிராஷ் டெஸ்ட்

கடந்த ஆண்டு குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தர மதிப்பீட்டு சோதனையில், இந்தியாவில் விற்பனையாகும் மாருதி ஸ்விஃப்ட் கார் பூஜ்ய மதிப்பீட்டை பெற்றது நினைவிருக்கலாம். குழந்தைகளுக்கான பாதுகாப்பு தரத்தில், டட்சன் கோ கார் 2 புள்ளிகளை பெற்ற நிலையில், ஸ்விஃப்ட் ஒரு நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே பெற்றது.

 
English summary
Some Reasons To Avoid Maruti Swift Car.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark