ஃபார்முலா-1 வீரர்களுக்கு கோடி கோடியாய் கொட்டி கொடுப்பதற்கான காரணம் இதுதான்... !!

Written By:

உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டாக ஃபார்முலா-1 கார் பந்தயம் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, இந்த பந்தயத்தில் கார்களை தயாரிக்கும் நுட்பம், அணியின் கூட்டு முயற்சி இவற்றை தாண்டி, காரை ஓட்டும் வீரருக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் வேகமும், விவேகத்துடன் சீறிப்பாயும் ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் பற்றி இதுவரை தெரியாத சில ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

உலகிலேயே விளையாட்டு வீரர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுக்கும் விளையாட்டாக ஃபார்முலா-1 பார்க்கப்படுகிறது. பிற விளையாட்டுகளைவிட மிக மிக கடுமையான பந்தயங்களில் ஒன்றாகவும் ஃபார்முலா-1 போட்டிகளை கூறலாம்.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

ஃபார்முலா-1 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பிற விளையாட்டுகளை விட உடல் தகுதியிலும், மன வலிமையிலும் மிக சிறந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். காரின் அதீத வேகத்தில் ஏற்படும் ஜி- ஃபோர்ஸ் மற்றும் அதீத வெப்பம் போன்றவற்றை இரண்டரை மணி நேரம் வரை தாங்கிக் கொள்ளும் உடல் வலிமை முக்கியம்.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

சென்னையில் வெயில் 40 டிகிரியை தாண்டிவிட்டாலே, தாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், ஃபார்முலா-1 கார்கள் தொடர்ந்து இயங்கும்போது, வீரர் அமர்ந்து ஓட்டும் காக்பிட் பகுதியின் வெப்ப நிலையானது, 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதனை தாங்கிக் கொள்ளும் உடல் வலிமை தேவைப்படுகிறது.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

மேலும், ஒவ்வொரு போட்டியின்போதும் அதீத வெப்பத்தால் வியர்வை வெளியேறி நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால், வீரர்களின் எடை 3 முதல் 4 கிலோ வரை குறைந்துபோகும். இந்த வெப்பத்தை தாக்குப்பிடிப்பதற்காக பந்தயம் துவங்குவதற்கு முன்னரும், காரிலிருந்து இறங்கும்போதும் அதிக அளவு தண்ணீர் பருகுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

மேலும், நீண்ட நேரம் அதிவேகத்தில் கார் ஓட்ட வேண்டியிருப்பதால், ஃபார்முலா-1 கார்களில் குடிதண்ணீர் தொட்டியும் உண்டு. இந்த தண்ணீர் தொட்டி ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். இந்த தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் மூலமாக வீரர் நீரை வேண்டும்போது உறிஞ்சி குடிக்க முடியும். அதிகபட்சமாக 8 லிட்டர் வரை நீர் அருந்த முடியும்.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

இந்த தண்ணீரில் தாது உப்புகளும் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால், வீரர்கள் உடனடியாக சோர்வடைவதை தவிர்க்க முடியும். எனினும், 50 டிகிரி முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலான சூழலில் அமர்ந்து அவர்கள் ஓட்டுவதற்கு மிக திடமான உடல்நிலையும், மன நிலையும் தேவைப்படுகிறது.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

ஃபார்முலா-1 கார்கள் மிகவும் அடக்கமான வடிவமைப்பை பெற்றிருக்கின்றன. இதனால், வீரர்கள் ஸ்டீயரிங் வீலை கழற்றிய பின்னரே வெளியேற முடியும். இதற்காக, விசேஷ ஸ்டீயரிங் வீல் லாக் சிஸ்டம் ஃபார்முலா-1 கார்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

ஃபார்முலா-1 வீரர்களுக்கு வழங்கப்படும் எண்களிலும் சிறப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. முந்தைய சீசனில் வெற்றி வாகை சூடிய வீரருக்கு ஒன்றாம் எண் அளிக்கப்படும். அவரது சக அணி வீரருக்கு 2ம் எண் அளிக்கப்படும். மேலும், அணிகளின் தர வரிசை பட்டியலை பொறுத்தும் வழங்கப்படுகிறது.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

பெரும்பாலான ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் கோ- கார்ட் பந்தயம் மூலமாகவே இந்த துறையில் அடியெடுத்து வைக்கின்றனர். அதன்பிறகு, பல்வேறு பந்தயங்களில் பங்கேற்ற பின்னர், அவர்களின் திறன் கண்டுணரப்பட்டு, முதல் தர போட்டியான ஃபார்முலா-1 போட்டிக்கு அணிகளின் சார்பில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

உடல் திடம் மட்டுமின்றி, போட்டியின்போது மில்லி செகண்டில் முடிவெடுத்து காரை செலுத்துவதும் அவசியம். இதற்கு, புத்திகூர்மையும், மனோதிடம் மற்றும் விவேகமான செயல்பாடு என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வீரர்களின் தகுதி நிர்ணயமாகிறது.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

மிக கடுமையான பயிற்சி முறைகள் மூலமாகவே ஃபார்முலா-1 போட்டிக்கான கார் பந்தய வீரர்கள் இறுதி கட்டத்தை எட்டுகின்றனர். இதில், நுழைவது அவ்வளவு எளிதானது இல்லை என்பதும், தக்க வைப்பதும் பெரிய காரியமாகவும் பார்க்கப்படுகிறது.

ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்கள் குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

இதற்கு மிக சிறப்பான கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிக செலவும் தேவைப்படுகிறது. அந்த வகையில், நரேன் கார்த்திகேயன் மற்றும் கருண் சந்தோக் ஆகிய ஃபார்முலா-1 வீரர்களை நாட்டிற்கு தந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு என்றால் மிகையில்லை.

English summary
Some Things You Never Know About Formula 1 Drivers.
Story first published: Wednesday, September 20, 2017, 15:43 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark