விமானங்கள் பற்றி நீங்கள் அறிந்திரா சுவாரஸ்யங்கள்!!

பல நூறு டன் எடையுடன் அந்தரத்தில் பறந்து செல்லும் விமானங்களும், அதன் தொழில்நுட்பமும் எப்போதுமே ஆச்சரியம் தருபவைதான். இந்த நிலையில், விமானங்களில் இருக்கும் சில சுவாரஸ்ய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம். அடிக்கடி பயணிப்பவர்களுக்கு கூட இந்த விஷயங்கள் ஆச்சரியமளிக்கலாம். ஸ்லைடருக்கு செல்லலாம்.

பாதுகாப்பான பகுதி

பாதுகாப்பான பகுதி

பஸ்சில் ஏறியவுடன் பலரும் நடுவில் உள்ள இருக்கைகளுக்கு போய் அமர்ந்து கொள்வதை காணலாம். விபத்து நிகழும்போது முன்புறத்திலும், பின்புறத்திலும் ஆபத்து அதிகம் என்பதே இதற்கு காரணம். ஆனால், விமானத்தில் நடுப்பகுதிதான் மிகவும் ஆபத்தானதாக புள்ளிவிபரங்கள் மூலமாக அறியப்படுகிறது. அதாவது, நடுப்பகுதியில் உயிரிழப்பு விகிதம் 39 சதவீதமாகவவும், முன்புறத்தில் 38 சதவீதமாகவும், பின்புறத்தில் 32 சதவீதமாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படுக்கை வசதி

படுக்கை வசதி

நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் பணியாளர்களுக்காக ரகசிய படுக்கை அறைகள் உண்டு. விமானத்தின் மேல்புறத்தில் இந்த அறை அமைக்கப்பட்டு இருக்கும். அதில், 6 முதல் 10 படுக்கைகள் வரை கொடுக்கப்பட்டு இருக்கும். போயிங் 777 மற்றும் 787 ட்ரீம்லைனர் விமானங்களில் இந்த படுக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், பயணிகளுக்கு இந்த படுக்கை அறை எங்கு இருக்கிறது என்பதை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இந்த படுக்கைகள் ரயில்களில் உள்ள மேல் படுக்கை போன்று மிகவும் குறைவான உயரம் கொண்டதாக இருக்கும்.

 டயர்கள்

டயர்கள்

விமானத்தின் டயர்கள் மிகவும் வலிமையானவை. விமானத்தின் டயர்கள் 38 டன் எடையை தாங்கும் வல்லமை கொண்டதாக இருக்கின்றன. சாதாரண கார் டயரை விட ஆறுமடங்கு கூடுதல் காற்றழுத்தம் கொடுக்கப்படுகின்றன. அதாவது, விமான டயரில் 200 பிஎஸ்ஐ காற்றழுத்தம் இருக்கின்றன. இந்த டயர்கள் விமானத்தின் எடையை சுமந்து கொண்டு மணிக்கு 273 கிமீ வேகத்தில் வந்து தரையிறங்குகின்றன. 500 முறை தரையிறங்கியதை கணக்கிட்டு, அந்த டயர்கள் ரீட்ரேட் செய்யப்படும். புதிய டயரை மாற்ற வேண்டுமெனில், கார் போன்றே ஜாக்கை கொடுத்து ஒரு சில நிமிடங்களில் புதிய டயரை மாற்றிவிட முடியும்.

ஆஷ் ட்ரே

ஆஷ் ட்ரே

விமானங்களில் சிகரெட் பிடிப்பதற்கு தடை இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ஒரு செய்தியில் நாம் தெரிவித்திருந்தோம். சிகரெட் பிடிப்பதற்கு தடை இருந்த போதிலும், விமானத்தின் கழிவறைகளில் இன்னமும் சிகரெட் தட்டுவதற்கான ஆஷ் ட்ரெ கொடுக்கப்பட்டு இருக்கிறது. கழிவறையில் சிகரெட் பிடித்தால் கூட, அதிக அபாரதத்தை பயணிகள் கட்ட வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். தப்பி, தவறி யாரேனும் சிகரெட்டை பற்ற வைத்துவிட்டால், அதனை பாதுகாப்பாக தட்டுவதற்காக முன்னெச்சரிக்கையாக இது இடம்பெறுகிறதாம்.

வெண்கோடுகள்

வெண்கோடுகள்

ஜெட் விமானங்கள் பறக்கும்போது வானில் அந்த விமானத்தின் பின்புறம் நீண்ட வெண்மை நிற கோடுகளை பார்த்திருக்கிறோம். அந்த கோடுகள் எவ்வாறு உண்டாகின்றன தெரியுமா? விமானங்களின் எஞ்சின் கழிவாக நீராவியை வெளியேற்றும். இந்த நீராவியானது, எஞ்சினிலிருந்து புகைப்போக்கி வழியாக வெளியேற்றப்படும்போது, வெளிப்புறத்தில் உள்ள குளிர்ந்த காற்றுடன் சேரும்போது வெண்மை நிற புகையாக மாறுகிறது. அதிக அழுத்தத்தில் வெளியேற்றப்படும் அந்த அடரத்தியான நீராவி புகை வெண்கோடுகளாக தெரிகின்றன.

 மின்னல் தாக்குதல்

மின்னல் தாக்குதல்

ஒவ்வொரு விமானமும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகின்றன. ஆனால், மின்னல் தாக்குதலுக்கு இலக்கானாலும் விமானத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசேஷ கட்டமைப்புடன் இப்போது தொழில்நுட்பம் மேம்பட்டு இருக்கிறது. 1963ம் ஆண்டுக்கு பின்னர் மின்னல் தாக்குதலால் விமானங்கள் விபத்தில் சிக்கியதாக தகவல் இல்லை. எனவே, மின்னல் தாக்குதலால் விமானங்கள் பாதிக்கப்படுவதில்லை என்பது விமான பொறியாளர்களின் பதிலாக உள்ளது.

 விமான எஞ்சின்கள்

விமான எஞ்சின்கள்

நடுத்தர மற்றும் பெரிய ரக வர்த்தக விமானங்களில் குறைந்தது இரண்டு எஞ்சின்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், விமானங்களை ஒரு எஞ்சினை வைத்து இயக்குகின்றனர். உதாரணத்திற்கு போயிங் ட்ரீம்லைனர் விமானத்தில் ஒரு எஞ்சின் அதிகபட்சமாக 330 நிமிடங்கள் அல்லது ஐந்தரை மணிநேரம் வரை இயக்க முடியும். நான் ஸ்டாப்பாக பறக்கும் விமானங்களில் இரண்டு எஞ்சின்கள் அவசியமாகிறது. மேலும், ஒரு எஞ்சின் பழுதானால் மற்றொரு எஞ்சினை வைத்து தரை இறக்க முடியும்.

எஞ்தின் இல்லாமல்...

எஞ்தின் இல்லாமல்...

இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், எஞ்சின் துணை இல்லாமலே விமானம் பறக்கும். ஆனால், முன்னோக்கு விசை கிடைக்காது என்பதால், படிப்படியாக விமானத்தின் பறக்கும் குறைந்து கொண்டே இருக்கும். இரண்டு எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட பாதுகாப்பாக தரை இறக்க முடியும்.

 
Most Read Articles

English summary
Read in Tamil: Some Things You Probably Didn’t Know About Airplanes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X