வரலாற்றில் பதிவான உலகின் மிகமோசமான போக்குவரத்து நெரிசல் சம்பவங்கள்

சில நிமிடங்கள் சிக்னலில் நிற்பதற்கும், சில மணிநேரம் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்வதற்கும் எவ்வளவு அவஸ்தையாக இருக்கிறது.

ஆனால், இந்த போக்குவரத்து ஸ்தம்பித்த சம்பவங்களை எடுத்து படிக்கும்போது, மூளையை ஸ்தம்பிக்க வைக்கிறது. உலகை திகைப்பில் ஆழ்த்திய உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் சம்பவங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

05. சாவ் பாவ்லோ, பிரேசில் [2013]

05. சாவ் பாவ்லோ, பிரேசில் [2013]

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் என்ற பெயரை ஏற்கனவே பலமுறை பெற்றிருக்கிறது பிரேசில் உள்ள சாவ் பாவ்லோ நகரம். கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இதுவரை அந்த நகரம் கண்டிராத ஒன்று. ஆம், 308 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 சாவ் பாவ்லோ தொடர்ச்சி...

சாவ் பாவ்லோ தொடர்ச்சி...

விடுமுறையை கழிக்க வெளியூர் கிளம்பிய வாகன ஓட்டிகளால் திமிலோக பட்டதால் 308 கிமீ தூரத்துக்கு நெடுஞ்சாலையில் வாகனங்கள் குவிந்தன. பிரேசிலின் மிகப்பெரிய நகரான சாவ் பாவ்லோ நகரில் இருக்கும் பணக்காரர்கள் பலர் போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து ஹெலிகாப்டர்களை வாங்கி பயன்படுத்துகின்றனராம்.

04. சிகாகோ, அமெரிக்கா [2011]

04. சிகாகோ, அமெரிக்கா [2011]

கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக கார் மற்றும் வாகனங்களில் வந்தோர் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியேறியதால் சாலைகள் முடங்கின.

சிகாகோ தொடர்ச்சி...

சிகாகோ தொடர்ச்சி...

அமெரிக்காவில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு காரணமாக இதுபோன்று வாகன போக்குவரத்து முடங்குவது வழக்கம்தான். ஆனால், 2011ம் ஆண்டு ஏற்பட்ட பனிப்பொழிவு 20 இஞ்ச் அளவுக்கும் மேலாக இருந்தததால், வாகன ஓட்டிகள் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட வாகனங்களை நடுவழியில் விட்டுவிட்டு வெளியேறினர். அவசர சேவைகள் கூட முடங்கும் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

03. பீஜிங், சீனா [2010]

03. பீஜிங், சீனா [2010]

2010ம் ஆண்டு சீனாவின் பீஜிங் - திபெத் விரைவுசாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 11 நாட்களுக்கு நீடித்தது. 99 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பலர் தங்களது வாகனங்களிலேயே தங்கி நாட்களை கழித்தனர். நாள் ஒன்றுக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே வாகனங்கள் முன்னேறி செல்ல முடிந்தது.

பீஜிங் தொடர்ச்சி...

பீஜிங் தொடர்ச்சி...

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பீஜிங் - திபெத் 110 விரைவுசாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஓட்டுனர்கள், பயணிகளுக்கு அப்பகுதிகளை சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் உணவுப் பண்டங்களை மூன்று மடங்கு கூடுதல் விலை வைத்து விற்றதாக ஓட்டுனர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.

02. ஜெர்மனி [1990]

02. ஜெர்மனி [1990]

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் சம்பவத்திற்கு இதுதான் உதாரணமாக குறிப்பிடப்படுகிறது. 1990ல் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இணைந்ததால், இருபகுதிகளிலிருந்தும் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களை காண கார்களில் புறப்பட்டனர். இருபகுதிகளுக்கும் இடையிலான எல்லைகளில் வாகனங்கள் குவிந்தன. சுமார் 18 மில்லியன் கார்கள் குவிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்றின் முக்கியமான பக்கம்...

வரலாற்றின் முக்கியமான பக்கம்...

இதுவே உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல். ஆனால், அன்னியர்களால் பிரிக்கப்பட்ட ஒரு நாட்டு மக்கள் தங்கள் சொந்தங்களை காண்பதற்கு இவ்வாறு புறப்பட்டுச் சென்றது வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக குறிப்பிடப்படுகிறது.

01. பாரிஸ், பிரான்ஸ் [1980]

01. பாரிஸ், பிரான்ஸ் [1980]

1980ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் விடுமுறை கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் பாரிஸ் நகருக்கு திரும்பியதையடுத்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், 175 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பாரிஸ் தொடர்ச்சி...

பாரிஸ் தொடர்ச்சி...

விடுமுறை கொண்டாட்டங்கள் ஒருபுறம் என்றாலும், அப்போது இருந்த மிக மோசமான வானிலையும் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது.

போக்குவரத்து நெரிசலால் திமிலோகப்படும் நகரங்கள்

போக்குவரத்து நெரிசலால் திமிலோகப்படும் நகரங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
we've collected some of the worst traffic jams in history. Have a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X