தந்தையின் திருமண நாள் பரிசாக ரூ.45 லட்சம் விலையுள்ள பைக்கை பரிசாக அளித்த மகன்

Written By:

சண்டிகரைச் சேர்ந்தவர் குர்சிம்ரன், இவரின் பெற்றோருடைய 35வது திருமனநாளை முன்னிட்டு , ரூ.45 லட்சம் விலை கொண்ட இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிளை அவருடைய தந்தை கவால் ஜீத் சிங் வாலியாவுக்கு பரிசாக அளித்துள்ளார்.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

அதுமட்டுமல்ல அவருடைய தாயாருக்கு மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு கார் ஒன்றினையும் வாங்கித் பரிசளித்துள்ளார் குர்சிம்ரன். இது மட்டுமல்லாமல் இரண்டு வாகனங்களின்பேன்ஸி பதிவெண் வாங்குவதற்ககாக மட்டும் ஒரு பெரும் தொகையை செலவிட்டுள்ளார் இவர்.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

தந்தைக்கு பரிசளித்த 45 லட்ச ரூபாய் விலையிலான இந்தியன் ரோட்மாஸ்டர் பைக்கின் பதிவு எண் "சிஹச் 01 பிஎல் 0001", இதற்காக இவர் செலவிட்ட தொகை ரூ.6.70 லட்சம்.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

ஒரு பேன்ஸி எண்ணுக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவழித்துள்ளாரே என ஆதங்கம் ஏற்படுகிறதா?, இக்குடும்பத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னரே இதை விட பெரிய தொகையை செலுத்தி பேன்ஸி பதிவு எண் பெற்றுள்ளனர். அது அப்போது செய்திகளாகவும் வெளியானது.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

கடந்த 2011 ஆம் ஆண்டு, இதே போல பெற்றோர்களின் திருமண நாள் கொண்டாட்டத்தினை 15 வெவ்வேறு நகரங்களில் விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்தார், இவர்களது மகன் குர்சிம்ரன்.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

மகனுக்கு சற்றும் சளைக்காதவர்கள் தான் பெற்றோர்களும். குர்சிம்ரனின் 4வது திருமண நாளிற்கு 20 லட்ச ரூபாய் விலையுள்ள டிரையம்ப் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காரினையும் பரிசளித்துள்ளனர் இவரின் பெற்றோர்கள்.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

20 லட்ச ரூபாய் விலையிலான டிரையம்ப் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் வாங்க இவர்கள் செலவிட்டது ரூ.8.02 லட்சம் என்பது வியப்பின் உச்சமாக உள்ளது.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

இக்குடும்பத்தினரின் வீட்டில் தற்போது 3 மெட்சிடஸ் பென்ஸ் கார்கள், டிரையம்ப் மோட்டார் சைக்கிள் மற்றும் புதிய வரவான இந்தியன் ரோட்மாஸ்டர் ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன.

தந்தைக்கு ரோட்மாஸ்டர் பைக், தாயாருக்கு பென்ஸ் பரிசளித்த மகன்

வாகனங்களுக்காகவும், அதன் பதிவு எண்களுக்காகவுமே இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்துள்ள இந்த குடும்பத்தினர் உணவு ஏற்பாடு செய்து தரும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியன் ஸ்பிரிங் ஃபீல்டு மாடல் பைக்கின் படங்கள்: 

English summary
Gursimran has gifted his dad, Kawal Jeet Singh Walia, an Indian Roadmaster and a Mercedes-Benz to his mother on their wedding anniversary.
Story first published: Wednesday, February 22, 2017, 15:29 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark