பாதுகாப்பு வசதிகளுடன் வாகனங்களுக்கான டிஜிட்டல் நம்பர் பிளேட்

By Saravana

Digital Number Plate
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் முதல்முறையாக வாகனங்களுக்கு டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளை கட்டாயமாக்குவது குறித்து அம்மாகாண போக்குவரத்து துறை பரிசீலித்து வருகிறது.

கொலம்பியாவை சேர்ந்த டேவிட் ஃபின்லே என்பவர்தான் இந்த டிஜிட்டல் நம்பர் பிளேட் ஐடியாவுக்கு வித்திட்டவர். இவர் உருவாக்கியிருக்கும் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுக்கு அனுமதி வழங்குமாறு தெற்கு கரோலினா போக்குவரத்து துறையிடம் திட்ட வரையறை ஒன்றை விரைவில் வழங்க உள்ளார்.

இதற்கு அனுமதி கிடைத்தால், தெற்கு கரோலினா மாகாணத்தில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் டிஜிட்டல் நம்பர் பிளேட் கட்டாயமாக்கப்படும். இந்த டிஜிட்டல் நம்பர் பிளேட் பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகளை கொண்டது. காலாவதியான லைசென்ஸ் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் கொண்ட வாகனங்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கண்காணிக்க முடியும். இது போன்று பல்வேறு பாதுகாப்பு வசதிகளை இந்த டிஜிட்டல் நம்பர் பிளேட்  சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்.

இதுதவிர, காரின் அதிர்வுகளிலிருந்தும், பின்னால் வரும் வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்திலிருந்தும் மின்சக்தியை தானே உற்பத்தி செய்து கொள்ளும் என்பது விசேஷம். விலை கொஞ்சம் அதிகம் இருந்தாலும், இது மிகவும் பாதுகாப்பு வசதிகள் நிறைந்தது என டேவிட் ஃபின்லே கூறியிருக்கிறார்.

Most Read Articles

English summary
The US state of South Carolina could become the first in the country to mandate electronic license plates for automobiles, if a proposal filed by a company is approved.
Story first published: Friday, June 14, 2013, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X