பி.எம்.டபுள்யூ தொழிற்சாலையில் போதையில் மயங்கி விழுந்த பணியாளர்கள்

பணியாளர்கள் போதை உட்கொண்டு மயங்கி விழுந்ததால், பி.எம்.டபுள்யூ நிறுவனம் 65 கோடி ரூபாய் வருமானத்தை இழந்துள்ளது.

By Azhagar

ஆடம்பர கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலையில், இரண்டு ஊழியர்கள் பணியின்போது போதை மருந்து உட்கொண்டு மயங்கி விழுந்ததால், 1 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.6.5 கோடி.

 போதை பணியாளர்களால் ரூ.6.5 கோடியை இழந்த பி.எம்.டபுள்யூ

ஜெர்மனியின் மூனிச் நகரத்தில் பி.எம்.டபுள்யூவிற்கான கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் புதிதாக தயாரிக்கும் கார்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் புகைப்போக்கி குழாய் பொருத்தும் இடத்தில், இரண்டு ஊழியர்கள் பணியின் போதே போதை மருந்தை உட்கொண்டுள்ளனர்.

 போதை பணியாளர்களால் ரூ.6.5 கோடியை இழந்த பி.எம்.டபுள்யூ

போதை தலைக்கு ஏறியதால், பணியாளர்கள் அந்த இடத்திலே மயங்கி விழ, உடனடியாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பி.எம்.டபுள்யூ தொழிற்சாலையில் 40 நிமிடங்கள் பணிகள் பாதிக்கப்பட்டன. போதையால் மயங்கி விழுந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 போதை பணியாளர்களால் ரூ.6.5 கோடியை இழந்த பி.எம்.டபுள்யூ

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட அந்த இரண்டு ஊழியர்களும், அதிக போதை தரும் வஸ்துகளை உட்கொண்டுள்ளதாகவும், மேலும் மதுபானங்களை குடித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 போதை பணியாளர்களால் ரூ.6.5 கோடியை இழந்த பி.எம்.டபுள்யூ

ஊழியர்களின் நடத்தயால் மிகுந்த கோபம் கொண்ட பி.எம்.டபுள்யூ நிறுவனம், இருவரில் ஒருவரை வேலை விட்டு டிஸ்மிஸ் செய்துள்ளது. மற்றொருவரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.

 போதை பணியாளர்களால் ரூ.6.5 கோடியை இழந்த பி.எம்.டபுள்யூ

பி.எம்.டபுள்யூ வரலாற்றிலேயே முதன்முதலாக நடந்துள்ள இதுபோன்ற சம்பவத்தால், அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் ஊழியர்களில் அலட்சியப்போக்கால், பி.எம்.டபுள்யூ 3 சிரீஸ், வேகன்ஸ் மற்றும் எம்.4 கார்களின் உற்பத்தியும் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

 போதை பணியாளர்களால் ரூ.6.5 கோடியை இழந்த பி.எம்.டபுள்யூ

ஆர்டர்கள் குவிந்து கிடக்கும் தருணத்தில், குறிபிட்ட நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய முடியாமல் போனால், பி.எம்.டபுள்யூ மேலும் பல மில்லியனை இழக்க நேரிடும்.

அதனால் ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பத்தை குறித்து பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் பெரிய தலைகள் அதீத ஆலோசனை செய்து வருகின்றனர்.

 போதை பணியாளர்களால் ரூ.6.5 கோடியை இழந்த பி.எம்.டபுள்யூ

பி.எம்.டபுள்யூ நிறுவனத்திற்கு ஏற்பட்ட இந்த வருமான இழப்பை அறிந்த நெட்டிசன்கள், போதை பணியாளர்களை கலாய்த்தும், பி.எம்.டபுள்யூ மேல் பாவம் கொண்டு மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

Most Read Articles
English summary
BMW had to shut down the assembly line for 40 minutes costing the company $1 million after two drugged out workers got high and collapsed while working.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X