வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

Posted By:

ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை மூலமாக உலகத்தையை கிடுகிடுக்க வைத்துள்ள வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் அதிரடி குறித்து சொல்லத் தேவையில்லை. தனது அதிரடி நடவடிக்கைகளால் வெளிநாடுகளை மட்டுமல்ல, உள்நாட்டு மக்களையும் மிரட்டி உருட்டி ஆட்சி செய்து வருகிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

உலகிலேயே மிக கொடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் வடகொரியாவில் சாலை விதிகளிலும் பல விசித்திரங்களை காண முடிகிறது. அந்த வகையில், வடகொரியாவில் பின்பற்றப்படும் வித்தியாசமான சாலை விதிகளை இந்த செய்தியில் காணலாம்.

Picture credit: newfocusintl

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

நம்மூர் போன்று எல்லோரும் நினைத்த மாத்திரத்தில் கார் வாங்க முடியாது. அரசியல் பொறுப்பில் இருப்பவர்களும், அரசு அதிகாரிகள் மட்டுமே அங்கு வாகனங்களை சொந்தமாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி செல்வ செழிப்பு மிக்கவராக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால் மட்டுமே சொந்த கார் என்பதை நினைத்து பார்க்க முடியும்.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

அதேபோன்று, சாலைகளை பயன்படுத்துவதிலும் பாரபட்சமான விதிகள் உண்டு. நெடுஞ்சாலை மற்றும் நகரச் சாலைகளில் சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என பிரத்யேக தடம் உண்டு. அதில், அவர்கள் நினைத்த வேகத்தில் செல்ல முடியும்.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

அடுத்து சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கும், பொது போக்குவரத்துக்கு தனித்தனி தடங்கள் உண்டு. சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கான தடத்தில் அதிக வேகத்தில் செல்வதற்கான வேக வரம்பும், பின்தங்கியவர்களுக்கான தடத்தில் குறைவான வேகத்தில் செல்லும் வகையில் வேக வரம்பும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

மேலும், சமூகத்தில் பின்தங்கியவர்கள் தடம் மாறி செல்வதற்கு அனுமதி கிடையாது. காலியாக இருக்கிறதே என்று மாறிச் சென்றால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். சொந்த வாகனங்களை எல்லோரும் வாங்க முடியாது என்பதால், வாகன போக்குவரத்து மிக குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு தடத்திற்கும் ஒவ்வொரு ஸ்பீடு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

வேக வரம்பை மீறுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் உண்டு. எனவே, அந்நாட்டு ஓட்டுனர்கள் மறந்தும் கூட வேக வரம்பை மீறி செல்ல முடியாது. அந்நாட்டில் குற்றம் புரிபவர்களுக்கு மூன்று தலைமுறை தண்டனை வழங்கப்படுகிறது.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

அதாவது, குற்றம் செய்தவர் ஆயுள் தண்டனை அனுபவித்து இறந்து போனால், அவருடைய அடுத்த இரண்டு தலைமுறையும் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு கடுமையான தண்டனை இருக்கும்போது நிச்சயம் குற்றம் புரிய மனது வராது.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

சில மாதங்களுக்கு முன் ஒரு புதிய சாலை விதிமுறையை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். அதாவது, தலைநகர் பியாங்யாங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் தனது தந்தை கிம் ஜாங் 2 மற்றும் அவரது தாத்தா கிம் 2 ஆகியோரின் பிரம்மாண்ட சிலை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சாலைகளை கடக்கும்போது வாகனங்கள் மூன்று மைல் வேகத்தில் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

நாட்டை ஆட்சி செய்து வரும் தனது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும்விதமாக அந்த சிலைகள் அமைந்துள்ள பகுதியில் ஓட்டுனர்கள் மிக மிக குறைவான வேகத்தில் இயக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்காகவே, அங்கு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். மீறி சென்றால் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க முடியாது.

இருப்பினும், அந்நாட்டில் இரண்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் உண்டு. வடகொரிய ஆட்டோமொபைல் அமைப்புடன் இணைந்து பியாங்வா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் கார்களை தயாரித்து வருகிறது ஒரு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் எஸ்யூவியின் டிசைனை ஒத்திருக்கிறது. சீனாவின் கூட்டாளி என்பதால், காப்பியடிப்பதற்கு வடகொரியாவுக்கும் எந்த தயக்கமும் இல்லைபோலும்.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

அடுத்து ஒரு கார் மாடல் இருக்கிறது. அந்த செடான் கார் மாடல் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை காப்பியடித்து தயாரிக்கப்பட்டது போன்று இருக்கிறது. இந்த கார்கள்தான் தற்போது அந்நாட்டில் விற்பனையாகும் முன்னணி மாடல்கள்.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

இத்தனைக்கும் இந்த கார்கள் வடகொரியாவின் ஜென்ம எதிரியான தென்கொரியாவை சேர்ந்த பியாங்வா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடகொரிய ஆட்டோமொபைல் துறை கூட்டமைப்பு உருவாக்கி வருகிறது.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

ஆண்டுக்கு 10,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கார் ஆலைகளை பெற்றிருந்தும், ஆண்டுக்கு 300 முதல் 400 கார்கள் மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கார் வாங்குவதற்கான விதிமுறைகள் மிக கடுமையானது என்பதே இதற்கு காரணம்.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

சாலைவிதிகளில் மட்டும் விசித்திரம் இல்லை. தலைநகரில் குடியேற அரசு அனுமதி பெற வேண்டும், அரசு தொலைக்காட்சியை மட்டுமே பார்க்க வேண்டும், பைபிள் வைத்திருப்பது சட்ட விரோதம், அரசின் ஹேர் ஸ்டைல் விதிமுறைகளின்படியே முடி வெட்டி வேண்டும், ஆபாச படம் பார்த்தால் மரண தண்டனை என இந்த பட்டியல் நீள்கிறது.

 வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்!

மொத்தத்தில் வடகொரியாவில் பிறக்காமல் இருப்பதே பெரும் புண்ணியம் என்று நினைக்கும் அளவுக்கு அங்கு சாலை விதிகளும் இதர விதிகளும் உள்ளன.

Photo Credit:newfocusintl and Wiki Commons

English summary
Strange Driving Rules In North Korea.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark