1 லிட்டர் எரிபொருளில் 1099 கிலோமீட்டர் மைலேஜ் சாதனை படைப்பு

Written By:

நீங்கள் வைத்திருக்கும் கார்கள் அதிகப்படியாக ஒரு லிட்டர் எரிபொருளுக்கு எவ்வளவு மைலேஜ் தரும்?

கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஒரு கார் ஒன்று ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 1099 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

மாணவர்கள் உருவாக்கிய இந்த ஆச்சர்யமூட்டும் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

எப்படி இருக்கும்?

எப்படி இருக்கும்?

சென்னையில் இருந்து மும்பை வரையிலான 1332 கிலோமீட்டர் தூரத்திற்கான பெட்ரோலுக்கு வெரும் 73 ரூபாயையும், சென்னையில் இருந்து டெல்லி வரையிலான 2168 கிலோமீட்டர் தூரத்திற்கான பெட்ரோலுக்கு வெரும் 1119 ரூபாயையும் செலவு செய்து செல்ல முடிந்தால் எப்படி இருக்கும்?

இதை கற்பனையில் கேட்பதற்கு கூட விந்தையாக இருக்கலாம்.

ஆனால், ஒரு சில கல்லூரி மாணவர்களால் புதிய கார் ஒன்று வடிவமைக்கபட்டதன் மூலம் சாத்தியமாக்கபட்டுள்ளது.

சாதனை படைத்த மாணவர்கள்;

சாதனை படைத்த மாணவர்கள்;

கனடாவின் க்யூபெக் சிட்டி-யில் உள்ள யூனிவெர்சிதே லாவல் (Université Laval) என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த அலேரியான் சூப்பர் மைலேஜ் டீம் (Alérion Supermileage team) மாணவர்கள் தான் இந்த சாதனைக்கு சொந்தகாரர்கள் ஆவர்.

அலேரியான் சூப்பர் மைலேஜ் டீம் மாணவர்கள் சேர்ந்து சிடி 2.0 (CT 2.0) என்ற பெயரிலான ஒரு புரோடோடைப் காரை உருவாக்கியுள்ளனர். இந்த காரில் ஒரு லிட்டர் எரிபொருளை மட்டுமே நிரப்பி 1099 கிலோமீட்டர் மைலேஜ் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைக்கபட்ட இடம்;

சாதனை படைக்கபட்ட இடம்;

இந்த மைலேஜ் சாதனை, அமெரிக்காவின் மிச்சிகன் பிராந்தியத்தில் உள்ள டெட்ராய்ட்-டில் 10-வது ஷெல் ஈக்கோ-மாராத்தான் அமெரிக்காஸ் (10th Shell Eco-marathon Americas) போட்டி நடைபெற்றது.

இதில் பிரேசில், கனடா, ஈகுவேடார், கவுடெமாலா, மெக்சிகோ, பியூர்டோ ரிக்கோ மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 123 அணிகள் இந்த போட்டியில் பங்கு பெற்றனர்.

இதில் தான், இந்த அபார மைலேஜ் சாதனை படைக்கபட்டது.

போட்டி;

போட்டி;

10-வது ஷெல் ஈக்கோ-மாராத்தான், அனைத்ஹ்டு அணிகளும் மோட்டார் சிட்டியின் ஒரு 9.65 கிலோமீட்டர் சாலையில், மணிக்கு சுமார் 24 கிலோமீட்டர் வேகத்தில் 10 சுற்றுகள் மேற்கொண்டனர்.

யூனிவெர்சிதே லாவல் கார்;

யூனிவெர்சிதே லாவல் கார்;

யூனிவெர்சிதே லாவல் மாணவர்கள் உருவாக்கிய கார், ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 1099 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கியது.

சிடி 2.0 (CT 2.0) என்ற பெயரிலான ஒரு புரோடோடைப் கார் மிகுந்த எடை குறைந்ததாக இருப்பதாலும், அதன் ஏரோடைனமிக் கட்டமைப்பினாலும், 2 ஹெச்பி திறன் கொண்ட இஞ்ஜின் ஆகியவற்றினாலும், இந்த சாதனை படைக்க முடிந்தது.

சாதனை முறை;

சாதனை முறை;

யூனிவெர்சிதே லாவல் மாணவர்கள், இந்த சிடி 2.0 (CT 2.0) புரோடோடைப் காரை மணிக்கு 32 கிலோமீட்டர் வரை இயக்கி, பின்னர் இஞ்ஜினை நிறுத்தி விட்டனர்.

மீதம் இருந்த தூரத்தை, இஞ்ஜினை இயக்காமலேயே இலக்கு தூரத்தை அடைந்தனர்.

தவறிய சாதனை;

தவறிய சாதனை;

இதற்கு முன்னதாக, 2013-ஆம் டோராண்டோ பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள், 2013-ல் இந்த படத்தில் உள்ள கார் மூலம், ஒரு லிட்டருக்கு 1354 கிலோமீட்டர் என்ற மைலேஜ் சாதனை படைத்தனர்.

இந்த சிடி 2.0 (CT 2.0) புரோடோடைப் காரை படைத்த யூனிவெர்சிதே லாவல் மாணவர்கள், 2013-ல் படைக்கபட்ட சாதனை கடக்க முடியவில்லை. இந்த சாதனையை மணிக்கு 355 கிலோமீட்டர் வித்தியாசத்தில் தவற விட்டனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

காரில் அதிகபட்ச மைலேஜை பெறுவதற்கான வழிமுறைகள்!

லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தரும் ரெனோ கார்... டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

ஆஃப் பீட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
A Prototype car by name of CT 2.0. built by group of college students gives a Mileage of 1099km/l. These College Students are from Alérion Supermileage team from Université Laval, in Quebec City, Canada. This mileage figure was achieved at the 10th Shell Eco-marathon Americas in Detroit, Michigan, America. To know more about this special record, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more