காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!

Written By:

துபாய் நகரில் உள்ள பொது சாலைகளில் கார் ஸ்டன்ட் எனப்படும் சாகச விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபடுவது வாடிக்கையான விஷயமாக உள்ளது. அங்கு கடுமையான போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்களை தடுக்க முடியாத நிலை இருக்கிறது.

காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!

அதேபோன்று ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்தது. போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள பகுதியில், இளைஞர்கள் சிலர் காரில் சாகச விளையாட்டில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மழை பெய்த அந்த தருணத்தில் 'டவ்நட்' எனப்படும் காரை சுழல வைத்து செய்யும் சறுக்கிச் செல்லும் சாகச விளையாட்டில் அந்த இளைஞர்கள் ஈடுபட்டனர்.

காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!

குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட பலர் நடமாடிக்கொண்டிருந்த பொது இடத்தில், மிக ஆபத்தான வகையில் காரில் சாகசம் செய்து பார்ப்போரை மிரள வைத்தார் காரை ஓட்டிய இளைஞர். இந்த நிலையில், அந்த கார் சாகச விளையாட்டை அங்கு வேடிக்கை பார்த்த ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது வைரலாக பரவியது.

காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!

இதையடுத்து, பொது இடத்தில் ஆபத்தான வகையில் காரில் ஸ்டன்ட் செய்த அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவருடன் அந்த காரில் இருந்த மேலும் மூன்று இளைஞர்களும் போலீசாரிடம் சிக்கினர்.

காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!

அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், காரை ஓட்டிய இளைஞர் 17 வயது நிரம்பியவர். அந்த இளைஞரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் காரை எடுத்து வந்து பொது சாலையில் வித்தை காட்டியுள்ளார்.

காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து துபாய் மன்னர் ஷேக் முகம்மது பின் ரஷீது அல் மக்டூம் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டது. சாகசத்தில் ஈடுபட்டவர்கள் சிறார் குற்றப்பிரிவில் வருவதால், அவர்களுக்கு நூதன தண்டனையை மன்னர் வழங்கியுள்ளார்.

காரில் சாகசம் புரிந்த இளைஞர்கள் தெருவை கூட்ட உத்தரவிட்ட துபாய் மன்னர்!!

அதாவது, பொது இடத்தில் ஆபத்தான வகையில் காரில் சாகசம் புரிந்ததற்காகவும், பொது சொத்துக்கு பங்கம் ஏற்படுத்தியதற்காகவும், சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு தெருக்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். தினமும் 4 மணிநேரம் வீதம் 30 நாட்களுக்கு அவர்கள் சாலைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நூதன தண்டனை அவர்களுக்கு படிப்பினையை தரும் என்பதுடன், பிறருக்கும் அது பாடமாக அமையும் என்று கருதப்படுகிறது. அவர்கள் சாகசம் புரிந்த வீடியோவையும் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Stunt drivers, who were caught performing stunts in a public area were made to clean the streets of Dubai as punishment.
Story first published: Friday, February 24, 2017, 11:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark