ஜேம்ஸ்பாண்ட் காருடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

Written By:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்திற்காக, அவர் அஸ்டன் மார்ட்டின் டிபி5 கார் முன்னால் நிற்பது போன்ற போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகியது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போஸ்டர் குறித்தும், இந்த போஸ்டரின் சுவாரஸ்யமான உண்மைகள் குறித்தும் கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

புதிய போஸ்டர்;

புதிய போஸ்டர்;

சில தினங்களுக்கு, இந்த ரஜினிகாந்த் படம் இணையதளங்களில் வெளியாகியது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஸ்டன் மார்ட்டின் கார் முன்னால் நிற்பது போல் உள்ளது. இது பெரும் பரபரப்பை உருவாக்கியது.

எதற்கு போஸ்டர்?

எதற்கு போஸ்டர்?

அஸ்டன் மார்ட்டின் கார் முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் இந்த போஸ்டர், அவர் நடிக்கும் கபாலி படத்திற்காக வெளியிடப்பட்டது.

வழக்கமாக பல்வேறு படங்களுக்கு இவ்வாறு போஸ்டர்கள் வெளியாவது சகஜம் தான். ஆனால், ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றால் கேட்கவா வேண்டும்.

ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றால், சிறு சிறு தகவல்கள் பெரிய செய்தியாகிவிடும். இவ்வாறு தான், இத்தகைய போஸ்டர்களும் பரபரப்பை கிளப்பின.

அம்பலம்

அம்பலம்

அஸ்டன் மார்ட்டின் கார் முன்னால் ரஜினிகாந்த் சாம்பல் நிற கோட்-சூட்டில் இருக்கும் இந்த போஸ்டர், முதலில் படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ போஸ்டராக கருதப்பட்டது.

ஆனால், பின்னர்தான் அது ரசிகர் ஒருவரின் ஆர்வ மிகுதியில் இவ்வாறு போஸ்டர் வடிவமைத்து வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இது அதிகாரப்பூர்வமான போஸ்டர் இல்லை என்பது உறுதியானது.

தத்ரூபம்...

தத்ரூபம்...

இந்த போஸ்டரின் சிறப்பு என்னவென்றால், ஒரு அதிகாரப்பூர்வ விளம்பர போஸ்டர் எப்படி இருக்குமோ அதே போல், இந்த போஸ்டர் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கபட்டிருந்தது.

அதில் இடம்பெற்றிருந்த அனைத்து அம்சங்களும் அவ்வளவு தத்ரூபமாக இருந்ததால், பலரும் அதிகாரப்பூர்வ போஸ்டர் என நம்பிவிட்டனர்.

அதிகாரப்பூர்வ போஸ்டர்கள்;

அதிகாரப்பூர்வ போஸ்டர்கள்;

அனைத்து படங்களுக்கும் வெளியிடபடுவது போல், இந்த கபாலி படத்திற்கும் அலுவல் ரீதியான போஸ்டர்கள் வெளியிடபட்டது.

இவ்வாறாக 2 போஸ்டர் மட்டுமே தயாரிப்பு நிறுவனம் சார்பாக முறைப்படி வெளியிடப்பட்டது.

போஸ்டர் விவரங்கள்;

போஸ்டர் விவரங்கள்;

மலேஷியாவில் உள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் பின்புலத்தில் இருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாம்பல் நிற கோட்-சூட் ஆடையில் அமர்ந்து இருக்கும் ஒரு போஸ்டரும், ரஜினிகாந்த் இடது கையில் சங்கிலி பிடித்திருப்பது போன்ற இரு போஸ்டர்கள் தான் முறைப்படி வெளியிடப்பட்ட போஸ்டர்கள் ஆகும்.

ஹாலிவுட் படத்தின் டிசைன்?

ஹாலிவுட் படத்தின் டிசைன்?

அஸ்டன் மார்ட்டின் கார் முன்னால் சாம்பல் நிற கோட்-சூட் ஆடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் இந்த போஸ்டர், ஸ்கைஃபால் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக வெளியிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கைஃபால் பற்றி...

ஸ்கைஃபால் பற்றி...

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் வந்த சமீபத்திய படம்தான் ஸ்கைஃபால். சாம் மெண்டெஸ் இயக்கிய இந்த படத்தை, மைக்கேல் ஜி.வில்ஸன் மற்றும் பார்பாரா ப்ரொக்கொல்லி தயாரித்துள்ளனர்.

ஸ்கைஃபால் படத்தில் டேனியல் கிரெய்க் கதாநாயகனாகவும், ஜாவியர் பார்டெம், நவோமி ஹார்ரிஸ், பெரினிஸ் லிம் மர்லோஹெ, ஆல்பர்ட் ஃபின்னெ, ஜூடி டெஞ்ச், ரால்ஃப் ஃபியன்னெஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களும் கார்களும்...

ஜேம்ஸ் பாண்ட் படங்களும் கார்களும்...

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியான முதல் படம் முதல் ஸ்கைஃபால், ஸ்பெக்டர் வரை அனைத்து படங்களிலும் கார்கள் அதிக அளவில் பயன்படுத்தபடுவது உண்டு.

அதிலும், குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அஸ்டன் மார்ட்டின் கார்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும், சில படங்களுக்கு என பிரத்யேகமான கார்கள் கூட தயாரிக்கபடுவது உண்டு.

Image Source : http://actorrajini.tumblr.com/

ரஜினிகாந்த் கார்கள்;

ரஜினிகாந்த் கார்கள்;

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் விலையுயர்ந்த கார்களை தொடர்ந்து படங்களில் பயன்படுத்துவதுடன், இன்று பொருளாதார நிலையிலும்

மிக உயரமான இடத்தில் இருக்கிறார். ஆனால், அவர் சொந்த வாழ்வில் மிகவும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Image source :http://www.selliyal.com/

கபாலி பற்றி...

கபாலி பற்றி...

கபாலி திரைப்படம், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்குகிறார். சந்தோஷ் நாராயனன் இசை அமைக்கும் இந்த படம் வி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கபடுகிறது.

கபாலி திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், கிஷோர், தினேஷ் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

கபாலி, அடிப்படையில் தாதா ஒருவரின் கதையை பின்புலமாக கொண்டதாக படமாக்கப்பட்டு வருகிறது.

Image Source :http://www.bollywoodlife.com

துவக்கம்;

துவக்கம்;

கபாலி திரைப்படத்தின் ஃபோட்டோகிராஃபி பணிகள் 21 ஆகஸ்ட் 2015 துவங்கப்பட்டது.

Image Source :http://www.telugupopular.com/

ஷூட்டிங்?

ஷூட்டிங்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி திரைப்படத்தின் ஷூட்டிங், மலேஷியாவில் துவங்கியது. இதையடுத்து ஷூட்டிங் பணிகள் பாங்காக் மற்றும் ஹாங்காங்கில் நடைபெறுகிறது.

Image Source : http://www.telugupopular.com/

தெலுங்கில் கபாலி?

தெலுங்கில் கபாலி?

கபாலி திரைப்படம், தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தெலுங்கிலும் இதே கபாலி என்ற பெயரில் தான் வெளியிடப்பட உள்ளது.

Image Source : http://www.telugupopular.com/

எப்போது ரிலீஸ்?

எப்போது ரிலீஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி திரைப்படம், தமிழ் புத்தாண்டான 14 ஏப்ரல் 2016 வெளியிட திட்டமிட்டு அதற்கென அனைத்து பணிகளும்

முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்குள், இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான போஸ்டர்களை நெட்டிசன்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

Image Source : http://www.telugupopular.com/

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிக்கபட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார் ஏலம்

இமாலய விலைக்கு ஏலம் போன ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக தயாரிக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் கார்!

Image Source : http://www.telugupopular.com/

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
A poster of Superstar Rajinikanth posing with Aston Martin DB5 for Tamil film Kabaali was released. This Poster with Rajinikanth in Grey Coat-Pant costume created huge kiosk between Rajinikanth fans. This poster was looking exactly to the stills released for the James Bond movie Skyfall. Complete details of this poster and its authenticity are presented to you.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more