எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்... விசித்திரமான கட்டுப்பாட்டை மக்களுக்கு விதித்த சுவிட்சர்லாந்து!!

உலகமே எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்ல போனால், சீனா உள்பட சில பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் உள்ள இளம் தலைமுறையினர் எரிபொருள் என்ஜின் கார்களையே மறந்திருப்பர். அந்த அளவிற்கு மின்மயமான போக்குவரத்தை நோக்கி ஒவ்வொரு நாடும் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒரு நாடு மட்டும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எந்த நாடு அது? எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்ற கேள்வியெல்லாம் இந்நேரம் உங்கள் மண்டைக்குள் ஓடி கொண்டிருக்கும். அது வேறு எந்த நாடு இல்லை, குளிர்பிரதேச இடங்களுக்கும், இயற்கையான & பசுமையான சூழலுக்கும் பெயர் போன சுவிட்சர்லாந்து ஆகும். சுவிட்சர்லாந்தில் சமீப மாதங்களாக மின்சார பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் நிகழும் பனி காலம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் - சுவிட்சர்லாந்து!!

எந்த அளவிற்கு பற்றாக்குறை என்றால், விரைவில் சுவிட்சர்லாந்தின் ஒரு சில பகுதிகளில் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்கையில் மின்சாரத்தை வீணாக பயன்படுத்த கூடாது என்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. சுவிட்சர்லாந்து ஆனது ஹைட்ரோ பவர் எனப்படும் நீரின் மூலமாக கிடைக்கக்கூடிய மின்சாரத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நாடு ஆகும்.

எந்த அளவிற்கு என்றால், அந்த நாட்டின் கிட்டத்தட்ட 60 சதவீத மின்சார தேவையை ஹைட்ரோ பவர் தான் தீர்த்து வைக்கிறது. ஆனால் பனி காலத்தில் ஹைட்ரோ பவர் கிடைப்பதில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டிற்கு மட்டுமல்ல, பல பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கும் பனி காலத்தில் ஹைட்ரோ பவரை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பனி காலத்தில் நீர்நிலைகள் உறைந்துவிடுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த விஷயத்தில் சுவிட்சர்லாந்து இன்னும் ஒரு படி பின் தங்கியே உள்ளது. அதாவது, சுவிட்சர்லாந்தில் கோடை காலத்தில் கூட போதுமான அளவு மின்சாரத்தை பெற முடியாததால், வெளிநாட்டில் இருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை அந்த நாட்டு அரசாங்கம் வாங்குகிறது. இந்த 2022ஆம் வருடத்தில் அந்த நாட்டில் நிலைமை ஏன் மேலும் மோசமாகியுள்ளது என்றால்... இதற்கு சமீபத்தில் நடந்த உக்ரைன் - ரஷ்யா போரை தான் காரணமாக கூற வேண்டும்.

அதிரடியாக உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஆனது ஐரோப்பா முழுவதுமே மின்சாரம் இறக்குமதியை பாதித்துள்ளது. இதில் பெரியதாக அடி வாங்கியிருப்பது என்னவோ சுவிட்சர்லாந்து தான். ஏற்பட்டிருக்கும் மின்சார பற்றாக்குறையை பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மூலமாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் சமாளித்து வருகிறது. அதாவது ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரமாகவும், ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் மிக மிக தீவிரமாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

நம் நாட்டில் ஏசி-யின் தேவை எந்த அளவிற்கு உள்ளதோ அதனை காட்டிலும் பல மடங்கு ஹீட்டரின் தேவை சுவிட்சர்லாந்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், பனி காலத்தில் ஹீட்டரை பயன்படுத்தாமல் அந்த நாட்டில் உயிர் வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். இல்லையென்றால், பழங்காலத்தில் பயன்படுத்தியதை போன்று வீட்டிற்குள் நெருப்பை தான் மூட்ட வேண்டியிருக்கும். இருப்பினும் மின்சார பற்றாக்குறையின் காரணமாக ஹீட்டரின் வெப்பநிலையை 20 டிகிரி செல்ஸியஸிற்கு மேல் கூட்ட வேண்டாம் என பொதுமக்களை சுவிட்சர்லாந்து அரசு கேட்டு கொண்டுள்ளது.

அதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களை மிக மிக அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்துமாறும், முடிந்த அளவிற்கு எரிபொருள் என்ஜின் வாகனங்களை பயன்படுத்துமாறும் அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கிடைத்துவரும் பெட்ரோல் & டீசலின் அளவு வருடந்தோறும் வெகுவாக குறைந்து வருவதினால் மனிதன் தனது போக்குவரத்திற்கு எலக்ட்ரிக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தான். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதிலும் தற்போது இடையூறுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இதை நான் சுவிட்சர்லாந்தை வைத்து மட்டும் சொல்லவில்லை, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை தேவையில்லாமல் சார்ஜ் செய்யாதீர்கள் என மாகாண அரசு கேட்டு கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
Switzerland gearing up ban electric vehicles in country here is why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X