மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் கலெக்ஷன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் கலெக்ஷன்!

இந்திய அரசியலில் துணிவும், தெளிவும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த தலைவராக விளங்கிய முதல்வர் ஜெயலலிதா மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அரசியல் முகம் ஒரு பக்கம் இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்வில் கார்களை மிகவும் விரும்பியவர். அவர் விரும்பி பயன்படுத்தி வாகனங்களை இன்று வரை பாதுகாத்து வந்தததே அவருக்கு வாகனங்கள் மீது இருக்கும் பிரியத்தை உணர முடியும்.

ஜெயலலிதாவிடம் இருக்கும் வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.42.25 லட்சம். அன்று முதல் இன்று வரைஅவர் விரும்பி பயன்படுத்திய கார்கள் மற்றும் இதர வாகனங்களின் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

 01. அம்பாசடர்

01. அம்பாசடர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் 1980 மாடல் அம்பாசடர் கார் ஒன்று இருக்கிறது. இதன் மதிப்பு 10,000 ரூபாயாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்போதைய சொகுசு காராக இருந்த அம்பாசடர் காரை இன்று வரை பொக்கிஷமாக அவர் வைத்திருக்கிறார்.

02. ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி

02. ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி

1988ம் ஆண்டு மாடல் ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி மினி பஸ் ஒன்றும் இருப்பதாக வேட்பு மனுவில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். இந்த மினி பஸ்ஸின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10,000 என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

03. டெம்போ ட்ராக்ஸ்

03. டெம்போ ட்ராக்ஸ்

1989ம் ஆண்டு மாடல் டெம்போ ட்ராக்ஸ் எஸ்யூவி ஒன்றும் அவரது பெயரில் இருக்கிறது. இந்த எஸ்யூவியின் தற்போதைய மதிப்பு ரூ.30,000 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

04. கான்டெஸ்ஸா கார்

04. கான்டெஸ்ஸா கார்

1990ம் ஆண்டு கான்டெஸ்ஸா கார் ஒன்றும் தன்னிடம் இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். அந்த கால சொகுசு கார் மாடலாக வர்ணிக்கப்படும் கான்டெஸ்ஸா காரின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.5,000 என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 05. மஹிந்திரா பொலிரோ

05. மஹிந்திரா பொலிரோ

இந்தியாவின் நம்பர்- 1 எஸ்யூவி மாடலாக விளங்கி வரும் மஹிந்திரா பொலிரோவும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருக்கிறது. 2000ம் ஆண்டு மாடலான இந்த எஸ்யூவியின் தற்போதைய மதிப்பு ரூ.80,000 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

06. டெம்போ டிராவலர்

06. டெம்போ டிராவலர்

அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு ஆஸ்தான வாகனமாக விளங்கும் டெம்போ டிராவலர் ஒன்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருக்கிறது. 2000ம் ஆண்டு மாடலான இந்த டெம்போ டிராவலரின் இப்போதைய மதிப்பு ரூ.80,000 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

07. மஹிந்திரா ஜீப்

07. மஹிந்திரா ஜீப்

இந்தியர்களின் பிரியமான ஆஃப்ரோடு வாகனமான மஹிந்திரா ஜீப் ஒன்றும் உள்ளது. 2001ம் ஆண்டு மாடலான இந்த மஹிந்திரா ஜீப்பின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10,000 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

08. டொயோட்டா பிராடா

08. டொயோட்டா பிராடா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இரண்டு டொயோட்டா பிராடோ சொகுசு எஸ்யூவிகள் உள்ளன. 2010ம் ஆண்டு மாடலாக இவை இரண்டும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், ஒவ்வொன்றின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் என்று வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா இப்போது பயன்படுத்தும் ஆஸ்தான வாகனம் எது தெரியுமா? அடுத்த ஸ்லைடிற்கு வாருங்கள்.

 இப்போது...

இப்போது...

தற்போது 4 டொயோட்டா எல்சி200 எஸ்யூவிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உள்ளது. அதில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு எல்சி200 கார்களை துரதிருஷ்டம் என கருதி, சமீபத்தில் 2 புதிய டொயோட்டா எல்சி200 கார்களை வாங்கியிருக்கின்றனர். ஆனால், அவை இப்போது முதல்வர் ஜெயலலிதா பெயரில் இல்லை. சமீபத்தில் வாங்கப்பட்ட இரண்டு டொயோட்டா எல்சி200 கார்களின் ஒவ்வொன்றின் மதிப்பும் தலா ரூ.1.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வரும் டொயோட்டா எல்சி200 கார்கள் குண்டு துளைக்காத வசதி கொண்டவை. மேலும், மோதல்களின்போது பயணிகளை காப்பதற்காக 10 உயிர் காக்கும் காற்றுப்பைகளை கொண்டிருக்கின்றன. இருக்கையின் அமைப்பை துல்லியமாக அறிந்துகொண்டு விரிவடையும் வசதி கொண்டவை இந்த காற்றுப் பைகள். அதுதவிர, 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி உள்ளது.

சக்திவாய்ந்த எஸ்யூவி

சக்திவாய்ந்த எஸ்யூவி

இந்த டொயோட்டா எல்சி200 கார்களில் 262 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வழங்கும். சக்திவாய்ந்த 4.5 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் இருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு சராசரியாக 5 கிமீ மைலேஜ் தரும். அதற்காகவே, இந்த எஸ்யூவியில் 93 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உண்டு.

Via: Vikatan

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tamilnadu CM Jayalalitha Car Collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X