மாருதி எஸ் க்ராஸ் காரை அசத்தலாக மாற்றிய ஹைதராபாத் இளைஞர்!

By Saravana Rajan

ஹூண்டாய் க்ரெட்டா அளவுக்கு ஸ்டைலாக இல்லை என்பதுடன், விலை அதிகம் என்பதாலேயே மாருதி எஸ் க்ராஸ் காருக்கான மார்க்கெட் போனது. அதிரடியாக விலை குறைக்கப்பட்டாலும், ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான மகிமையை எஸ் க்ராஸ் தரவில்லை என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

இந்த நிலையில், பல கார்களை அலசி ஆராய்ந்து எஸ் க்ராஸ் காரை வாங்கியதுடன், அதனை வெகு நேர்த்தியாக பார்ப்போரை கிறங்கச் செய்யும் விதத்தில் மாற்றி அசத்தியிருக்கிறது ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த காரின் படங்களை பார்த்துவிட்டு, அந்த உரிமையாளருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

 உரிமையாளர்

உரிமையாளர்

ஹைதராபாத்தில் வசித்து வரும் ஜோஸ்பீட்டர் என்வர்தான் தனது எஸ் க்ராஸ் காரை இவ்வாறு மாற்றியிருக்கிறார். கார் பிரியரான அவர் ஏற்கனவே டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களை பயன்படுத்தி வநதுள்ளார். மேலும், எஸ் க்ராஸ் காரை தேர்வு செய்தது, தேர்வுக்கு எடுத்துக் கொண்ட கார்கள் குறித்து டீம் பிஎச்பி தளத்தில் அவர் கூறியிருக்கும் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கார் தேர்வு

கார் தேர்வு

"ரூ.15 லட்சத்தில் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற, சிறந்த கையாளுமையும் கொண்ட காரை தேர்வு செய்ய முடிவு செய்தேன். கரடுமுரடான சாலைகளை எதிர்கொள்ளும் அம்சங்களையும், குறைவான எரிபொருள் செலவு கொண்டதாகவும் இருக்க வேண்டும். செடான் கார்களை பயன்படுத்தியிருந்தாலும், கிரவுண்ட் கிளிரயன்ஸ் பிரச்னையால் அதனை தவிர்க்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

தேர்வான கார்

தேர்வான கார்

தனக்கு எஸ்யூவி அல்லது க்ராஸ்ஓவர் ரக மாடல்தான் பொருத்தமாக எண்ணிய அவர் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியையும் பரிசீலனை செய்திருக்கிறார். ஆனால், 1.6 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாருதி எஸ் க்ராஸ் மாடல்தான் தனக்கு பொருத்தமாக கருதி, அதனை வாங்க முடிவு செய்துவிட்டார்.

காரணங்கள்

காரணங்கள்

சிறந்த டீசல் எஞ்சின், பிரிமியம் இன்டீரியர், சிறப்பான பாடி கன்ட்ரோல், கையாளுமை, சொகுசான இருக்கை, ஆல்ஃபா வேரியண்ட்டில் கிடைக்கும் பல நவீன வசதிகள் ஆகியவை மாருதி எஸ் க்ராஸ் காரை தேர்வு செய்ய தூண்டியதாக தெரிவித்துள்ளார் ஜோஸ்பீட்டர்.

 சின்ன மாற்றங்கள்

சின்ன மாற்றங்கள்

பல விதங்களில் மாருதி எஸ் க்ராஸ் தன்னை கவர்ந்துவிட்டாலும், அதன் தோற்றத்தை இன்னும் மெருகு கூட்டினால் தன் எண்ணத்திற்கு தகுந்தாற்போல் மாறிவிடும் என்று கருதிய அவர், கொச்சியில் உள்ள தனது நண்பர்கள் உதவியுடன் காரில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கருப்பு வண்ண பெயிண்ட் பூசப்பட்ட ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் சைடு ஸ்கர்ட்டுகள் என முடிந்தவரை கருப்பு வண்ணத்திற்கு மாற்றியிருக்கிறார். இந்த காருக்கு "StealthCross" என்று குறிப்பிட்டு அழைக்கிறார்.

பாராட்டு

பாராட்டு

தனது காரின் படங்களை டீம் பிஎச்பி தளத்தில் ஜோஸ்பீட்டர் பதிவு செய்திருக்கிறார். அதற்கு டீம் பிஎச்பி தள உறுப்பினர்கள், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த எஸ் க்ராஸ் கார் இப்போது எல்லோருக்கும் பிடித்த மாடலாக ஆட்டோமொபைல் பிரியர்களையும் வசீகரித்து வருகிறது.

செலவு

செலவு

எவ்வளவு செலவு பிடித்தது என்று பலர் வினவியிருந்தபோதும், அது குறித்த தகவலை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. அவர் பகிர்ந்து கொண்டால், நிச்சயம் இங்கே பதிவு செய்கிறோம்.

Source

Most Read Articles
English summary
Tastefully Modified Maruti S-Cross In Hyderabad.
Story first published: Thursday, July 21, 2016, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X