பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிக் கொண்ட தேஜஸ் போர் விமானம்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணையை இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தேஜஸ் போர் விமானத்தின் வலிமை மேலும் கூடி இருக்கிறது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

தேஜஸ் போர் விமானத்தில் டெர்பி வகை ஏவுகணை ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் டெர்பி ஏவுகணை பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கியது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

இந்த நிலையில், தேஜஸ் போர் விமானத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக மற்றுமொரு ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான 5வது தலைமுறை பைத்தான்-5 ஏவுகணை இப்போது தேஜஸ் போர் விமானத்தில் இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

தேஜஸ் போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணையை பொருத்தி சோதனைகள் நடத்தப்பட்டன. கடினமான சூழல்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் திருப்திகரமாகவும், 100 சதவீதம் துல்லியமாகவும் அமைந்ததையடுத்து, தேஜஸ் போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணையை இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

பைத்தான்-5 ஏவுகணையானது வானில் இருந்து வான் இலக்கை அழிக்கும் திறன் கொண்டது. சோதனைகளின்போது, திட்டமிட்டபடி, தேஜஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட பைத்தான்-5 ஏவுகணை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

விமான தொழில்நுட்ப மேம்பாட்டு முகமை(ADA), மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிஸ் லிமிடேட் (HAL) மற்றும் இந்திய விமானப்படை (IAF) விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் கூட்டு முயற்சியில் இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, தேஜஸ் போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணை சேர்க்கப்பட்டுள்ளது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

பைத்தான்-5 ஏவுகணையை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபெனஅஸ் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஏவுகணை 3.1 மீட்டர் நீளமும், 6.3 அங்குல விட்டமும் கொண்டது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

இந்த ஏவுகணை 20 கிமீ தொலைவில் இருக்கும் வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனை பெற்றிருக்கிறது. இந்த ஏவுகணை பயன்படும். மேக்-4 என்ற வேகத்தில் இலக்கை நோக்கி பாய்ந்து செல்லும் திறன் படைத்தது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

இந்த ஏவுகணையின் முகப்பில் 11 கிலோ எடையுடைய வெடிபொருள் பொருத்தப்பட்டு இருக்கும். உலகின் சிறந்த வானில் இருந்து வான் இலக்கை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு லெபனான் போரின்போது எஃப்-16 போர் விமானத்தில் வைத்து இந்த பைத்தான் ஏவுகணை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.

 பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிய தேஜஸ் போர் விமானம்!

தேஜஸ் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் மற்றொரு ஏவுகணையான டெர்பி கூட பைத்தான்-4 ஏவுகணையின் அடிப்படையில் அதிக தூரம் பாய்ந்து செல்லும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டது. ஆனால், இது தனி வகையில் வேறு பெயரில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, பார்வை தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது.

Most Read Articles

மேலும்... #ராணுவம் #military
English summary
Tejas Fighter Jet has added Python 5 air to air missile to its weapons capability after successful trials in Goa.
Story first published: Friday, April 30, 2021, 15:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X