உலகின் சிறந்த 10 பயணிகள் விமான மாடல்கள் பற்றிய தகவல்கள்!

Posted By:

விரைவான, சொகுசான போக்குவரத்து வசதியை அளிக்கும் ஒரே சாதனம் விமானங்கள்தான். சொகுசு, வேகம் தவிர்த்து, தொழில்நுட்ப வசதிகளிலும், பாதுகாப்பிலும் பயணிகளிடத்திலும், விமான சேவை நிறுவனங்களிடத்திலும் நம்பகத்தன்மையை பெறும் விமானங்களை மிகச் சிறப்பானதாக கருதுகிறோம்.

அந்த வகையில், பயணிகளுக்கு சிறப்பான அம்சங்களை கொண்ட 10 சிறந்த வர்த்தக பயன்பாட்டு விமான மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. மெக்டொனெல் டக்ளஸ்- டிசி10

10. மெக்டொனெல் டக்ளஸ்- டிசி10

வைடு பாடி எனப்படும் இரண்டு வரிசை அல்லது மூன்று வரிசை இருக்கை அமைப்பதற்கான அகலமான உடற்கூடு அமைப்பு மற்றும் சிறப்பான உட்புற இடவசதி கொண்ட மாடல். அதிகபட்சமாக 380 பயணிகளுக்கான இருக்கை வசதியை அளிக்கும். 1968ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 1970ல் முதல்முறையாக பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தாழ்வான இறக்கை அமைப்பு மூலமாக, தரையிறங்கும்போது சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.

Photo credit: Arpingstone/Wiki Commons

சிறப்புகள்

சிறப்புகள்

இதன் சிறப்பான இறக்கை அமைப்பு காரணமாக, அதிக நிலைத்தன்மையுடன் தரையிறங்குவதால், பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, அதிக அளவில் சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சிறப்பான இடவசதியையும் அளிக்கிறது. 2009ல் பறக்கும் கண் மருத்துவமனை வசதியுடன் ஒரு விமானம் மருத்துவ சேவையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. அதுதவிர, பெட்ரோல் மற்றும் தண்ணீர் எடுத்துச் செல்லும் டேங்கராகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பயணிகள் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டது.

Photo credit: Big dickhk/Wiki Commons

09. ஏர்பஸ் ஏ320

09. ஏர்பஸ் ஏ320

இதுவும் வைடு பாடி எனப்படும் பெரிய உடற்கூடு அமைப்பு கொண்ட இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானம். 220 பயணிகள் வரை செல்ல முடியும். 12,000 கிமீ தூரம் வரை அதிகபட்சமாக பறக்கும். 1987ல் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம், 1988ல் ஏர் பிரான்ஸ் நிறுவனம் மூலமாக பயணிகள் சேவைக்கு வந்தது. டிஜிட்டல் ப்ளை பை ஒயட் ப்ளைட் கன்ட்ரோல் என்ற நவீன விமான கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்திற்கு முன்னோடியான மாடல்.

Photo credit: Julian Herzog/Wiki Commons

சிறப்புகள்

சிறப்புகள்

தற்போது பல்வேறு மாற்றங்களுடன் இந்த மேம்படுத்தப்பட்டிருக்கிறது. விமானத்தின் எடை, விமானி அறைகளின் டிசைன் ஆகியவற்றில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்ரன. பல விமான சேவை நிறுவனங்கள் தங்களது எக்கானமி கிளாஸ் பயன்பாட்டுக்கு இந்த விமானத்தை பரவலாக பயன்படுத்துகின்றன.

Photo credit: David Lytle/Wiki Commons

08. ஏர்பஸ் ஏ330

08. ஏர்பஸ் ஏ330

இதுவும் இரட்டை எஞ்சின் கொண்ட வைடு பாடி வகையை சேர்ந்த விமானம். அதிகபட்சமாக 335 பயணிகள் செல்ல முடியும். அதிகபட்சமாக 14,000 கிமீ தூரம் வரை பறக்கும். நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகிறது. 1992ல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்னர், அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்பட்டது.

Photo credit: Adrian Pingstone/Wiki Commons

Recommended Video - Watch Now!
Lakshadweep Airport Gets A Sea-Bridge Runway - DriveSpark
சிறப்புகள்

சிறப்புகள்

ஏர் சைனா மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. மிகச்சிறப்பான எரிபொருள் சிக்கனம், பராமரிப்பு செலவு, சொகுசான பயணத்தையும் வழங்குவதால், இதன் டிக்கெட் விலை மிகவும் சரியாக நிர்ணயிக்கப்படுவதாக பயணிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.

Photo credit: FRED/Wiki Commons

07. கான்கார்டு

07. கான்கார்டு

சூப்பர்சானிக் வகையை சேர்ந்த அதிவேக விமான மாடல். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விமான தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது. 1976ல் பயன்பாட்டுக்கு வந்த இந்த விமானம் 2003ல் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதிக இயக்குதல் செலவீனமே இதற்கு காரணமாகியது.

Photo credit: Eduard Marmet/Wiki Commons

சிறப்புகள்

சிறப்புகள்

இந்த விமானத்தில் 100 முதல் 120 பேர் வரை பயணிக்க முடியும். பயன்பாட்டில் இருந்தபோது, இந்த விமானத்தில் பறப்பதை ஒரு பெருமையாகவும், லட்சியமாகவும் கோடீஸ்வரர்கள் கருதினர். மணிக்கு 2,140 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது.

Photo credit: Dschwen/Wiki Commons

06. எம்டி- 11

06. எம்டி- 11

முதலில் மெக்டொனெல் டக்ளஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் பின்னர், போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதிநவீன மூன்று எஞ்சின்கள் பொருத்தப்பட்ட புதிய வடிவமைப்பு தாத்பரியம் கொண்ட விமானம். மேலும், இந்த எஞ்சின்கள் மிகவும் அடக்கமாக இருந்ததால், அதிக இடவசதியை அளித்தது. 1990ல் பயன்பாட்டுக்கு வந்தது.

Photo credit: Antti Havukainen/Wiki Commons

சிறப்புகள்

சிறப்புகள்

1988 முதல் 2000 வரை 200 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. எக்கானமி க்ளாஸ் வகை சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. முற்றிலும் டிஜிட்டல் காக்பிட், மூன்று எஞ்சின்கள் கொண்ட இந்த விமானத்திற்கு ப்ளைட் எஞ்சினியர் இல்லாமல் இரண்டு விமானிகளை மட்டுமே வைத்து இயக்க முடியும். 12,000 கிமீ தூரம் வரை பறக்கும்.

Photo credit: AirwaysNews

05. போயிங் 787

05. போயிங் 787

ட்ரீம்லைனர் என்றால் சட்டென நினைவுக்கு வரும். இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட ஜெட் ரக விமானம். 330 பயணிகள் செல்ல முடியும். 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் 2011ல் முதலாவதாக ஆல் நிப்பான் ஏர்வேஸ் மூலமாக பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Photo credit: Adrian Pingstone/Wiki Commons

சிறப்புகள்

சிறப்புகள்

இந்த இருக்கை அமைப்பு மிகச்சிறப்பான சொகுசையும், எல்இடி விளக்குகள் ஓர் புதிய பயண அனுபவத்தையும் வழங்கும். ஏர் இந்தியா, ஜப்பான் ஏர்லைன்ஸ் போன்ற பல நாடுகளின் விமான சேவைகளில் உள்ளது. அதிகபட்சமாக 15,190 கிமீ தூரம் வரை செல்லும். மணிக்கு 913 கிமீ வேகத்தில் பறக்கும்.

Photo credit: Altair78/Wiki Commons

04. போயிங் 737

04. போயிங் 737

இதுவும் ஜெட் ரகத்தை சேர்ந்தது. அதிகபட்மாக 215 பயணிகள் செல்ல முடியும். 1968ல் லூஃப்தான்ஸா நிறுவனத்தின் மூலமாக சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மேம்படுத்தப்பட்ட மாடல்களில் விற்பனையில் உள்ளது. இது பல மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. பயணிகளுக்கு சிறப்பான சொகுசு வசதிகளையும், அதேநேரத்தில் சரியான விலையிலான கட்டணத்துடன் பயண அனுபவத்தை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது.

Photo credit: Eduard Marmet/Wiki Commons

சிறப்புகள்

சிறப்புகள்

மணிக்கு 938 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 6,080 கிமீ தூரம் பயணிக்கும். இது பயணிகள் விமானமாகவும் மட்டுமல்லாது, பெரும் செல்வந்தர்களின் தனி நபர் பயன்பாட்டு விமானமாகவும் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தப்படுகிறது. விமான துறையின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று.

Photo credit: Cweyer/Wiki Commons

 03. ஏர்பஸ் ஏ380

03. ஏர்பஸ் ஏ380

டபுள் டெக்கர் எனப்படும் இரண்டடுக்கு விமானம். விமான தயாரிப்புத் துறையின் அற்புதம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழியாக சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எக்கானமி க்ளாஸ் இருக்கைகள் மட்டுமே கொண்டதாக இருந்தால், அதிகபட்சமாக 830 பேர் வரை பயணிக்க முடியும்.

சிறப்புகள்

சிறப்புகள்

அதிகபட்சமாக 15,700 கிமீ தூரம் வரை பயணிக்கும். எனவே, மிக நீண்ட தூர வழித்தடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மணிக்கு 900 கிமீ என்ற சராசரி வேகத்தில் பறக்கும். இந்த விமானத்தை தரையிறக்குவதற்கு விசேஷ கட்டமைப்புகள் விமான நிலையங்களில் செய்யப்பட்டது. அத்துடன், இந்த விமானத்துக்கு எதிர்பார்த்த அளவு ஆர்டர்கள் இல்லாதது, ஏர்பஸ் நிறுவனத்திற்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Photo credit: Mathieu Marquer/Wiki Commons

02. போயிங் 777

02. போயிங் 777

போயிங் நிறுவனத்தின் மிக பிரம்மாண்டமான ஜெட் ரக விமானங்களில் ஒன்று. இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானத்தில் 450 பேர் வரை பயணிக்க முடியும். 1995ல் யுனைடைட் ஏர்லைன்ஸ் மூலமாக பயன்பாட்டுக்கு வந்தது.

சிறப்புகள்

சிறப்புகள்

அதிகபட்சமாக 17,500 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என்பதே இதன் மிகப்பெரிய ப்ளஸ். முழுவதும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானமாக அறிமுகம் செய்யபப்பட்டது. அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சொகுசான பயணத்தையும் வழங்கக்கூடியது. இதன் எக்கானமி வகுப்பு பயணம் கூட சிறப்பான அனுபவத்தை வழங்கும்.

01. போயிங் 747

01. போயிங் 747

அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானம் என்பதை வைத்தே இதற்கான மவுசை கண்டறிந்துவிடலாம். 1969ல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 1,500 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கினறன. இந்த விமானத்தை பன்முக பயன்பாட்டு விமானமாகவும் கூறுகின்றனர்.

சிறப்புகள்

சிறப்புகள்

அதிகபட்சமாக 9,800 கிமீ தூரம் முதல் 13,240 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் செல்லும். மணிக்கு 920 கிமீ வேகத்தில் இயக்க முடியும். எக்கானமி வகுப்பு இருக்கை அமைப்பு கொடுத்தால், அதிகபட்சமாக 660 பேர் வரை பயணிக்க முடியும். பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் மட்டுமின்றி, அதிக பாதுகாப்பான விமான மாடலாகவும் விளங்குகிறது.

பிற சுவாரஸ்யத் தொகுப்புகள்

பிற சுவாரஸ்யத் தொகுப்புகள்

01. உலகில் அதிகம் தயாரிக்கப்பட்ட விமானங்கள்

02. உலகின் அதிவேக பயணிகள் விமானங்கள்

03. உலகின் அதிவேக போர் விமானங்கள்

 

English summary
Listed above are our Top 10 Best passenger aircrafts in the World:

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more