உலகின் காஸ்ட்லியான டாப் -10 ராணுவ பீரங்கிகள்: சிறப்புத் தொகுப்பு

By Saravana

ஒரு நாட்டின் தரைப் பாதுகாப்பிற்கும், ராணுவ பலத்தை எடுத்துக்காட்டுவதற்கும் பீரங்கிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு சாலை நிலைகள் மற்றும் காலநிலைகளிலும் சிறப்பாகவும், விரைவாகவும் சென்று தாக்குதல் நடத்துவதுதற்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் பீரங்கிகள் வடிவமைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு வசதிகள், விரைவாக செல்லும் திறன், வெடிகுண்டுகளை ஏவும் திறன் போன்றவற்றை வைத்து பீரங்களின் வல்லமை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த மூன்று விஷயத்திலும் சிறப்பானதும், பயன்பாட்டில் இருக்கும் விலை அடிப்படையில் உலகின் டாப் 10 பீரங்கிகளையும், இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பீரங்கிகள் பற்றிய தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 10. இசட்டிஎக்ஸ்- 99 - சீனா

10. இசட்டிஎக்ஸ்- 99 - சீனா

கடந்த 2001ம் ஆண்டு சீன ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பீரங்கி மாடல். சோவியத் டி72 பீரங்கியின் சிறப்பம்சங்களை மனதில் வைத்து இந்த பீரங்கியை சீனா வடிவமைத்தது. இந்த பீரங்கியில் 125மிமீ விட்டம் கொண்ட குண்டு வீச்சு குழல் பொருத்தப்பட்டுள்ளது. 1500 எச்பி சக்தியை அளிக்கும் டீசல் எஞ்சின் உள்ளது. எதிராளிகளின் தாக்குதல்களை கண்டறியும் லேசர் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளது. 58 டன் எடை கொண்ட இந்த பீரங்கியில் மூன்று வீரர்கள் இருக்க முடியும்.

விலை: 2.6 மில்லியன் டாலர்

09. டி-90 - ரஷ்யா

09. டி-90 - ரஷ்யா

பனிப்போர் நடந்த காலக்கட்டத்தில், ஏற்றுமதிக்காக டி62 மற்றும் டி72 ஆகிய குறைவான விலை கொண்ட பீரங்கிகளையும், டி64 மற்றும் டி80 ஆகிய விலையுயர்ந்த பீரங்கி மாடல்களையும் சோவியத் யூனியன் தயாரித்தது. பின்னர், உற்பத்தி செலவீனத்தை கருத்தில்கொண்டு ஒரு மாடலாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெளிவந்த மாடல்தான் டி90. இதன் குறைவான விலை டி-90எஸ் மாடல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. டி90எம் மாடல் ரஷ்ய ராணுவத்தில் பயன்பாட்டுக்கு தயாரிக்கப்படுகிறது. டி-90 எஸ் மாடலைவிட டி90எம் மாடல் இருமடங்கு கூடுதல் விலை கொண்டது. இந்த பீரங்கியில் 1230 எச்பி சக்தி கொண்ட டீசல் எஞ்சின் உள்ளது. இதன் பீரங்கியில் தானியங்கி முறையில் குண்டுகள் நிரப்பும் வசதி கொண்டது. அதிநவீன தற்காப்பு மற்றும் தாக்குதல் தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த பீரங்கியிலும் மூன்று வீரர்கள் செல்ல முடியும்.

விலை: 4.25 மில்லியன் டாலர்

08. மெர்கவா- IV இஸ்ரேல்

08. மெர்கவா- IV இஸ்ரேல்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நவீன பீரங்கி மாடலை வடிவமைக்க இஸ்ரேல் முனைப்பு காட்டியது. அதன் விளைவில் உருவான மாடல்தான் மெர்கவா IV. இந்த வாகனத்தில் 120மிமீ விட்டம் கொண்ட குண்டு வீச்சு குழல் பொருத்தப்பட்டுள்ளது. கலப்பு ஸ்டீல் மற்றும் செராமிக் கலவை மூலம் வடிவமைக்கப்பட்ட மாடல். இதன் பிரத்யேக டிசைன் மூலம் பழுதடைந்த பாகங்களை எளிதாக மாற்றிவிட முடியும். எஞ்சின் முன்புறத்தில் இருப்பதால், உள்ளே இருக்கும் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். லெபனான் போரின்போது 2 மெர்கவாIV பீரங்கிகளை மட்டுமே இஸ்ரேல் இழந்ததாம். அந்தளவுக்கு நவீன வசதிகள் கொண்டது. தற்போது இந்த பீரங்கிகளில் நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.

விலை: 6 மில்லியன் டாலர்

07. அர்ஜுன் எம்கே- II - இந்தியா

07. அர்ஜுன் எம்கே- II - இந்தியா

2004ம் ஆண்டு அர்ஜுன் பீரங்கிகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுன் எம்கேII மாடல் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர சோதனைகள் செய்யப்பட்டு தற்போது ராணுவ பயன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நவீன பீரங்கியில் பல்வேறு நவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன. சுருள் முறையில் தொடர்ந்து குண்டு வீசும் குழல் அமைப்பு கொண்டது. லேசர் எச்சரிக்கை கருவிகள், அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜாமர்கள், எதிரி தாக்குதல்களை கண்டறிந்து முறியடிக்கும் தாகுத்தல் தொழில்நுட்பம் போன்றவை உள்ளன. இதுதவிர, சிறப்பான நேவிகேஷன் சாதனங்கள் மூலம் இலகுவாக இலக்குகளை நோக்கி முன்னேற முடியும். இந்த பீரங்கியை 4 பேர் இயக்குவர்.

விலை: 6 மில்லியன் டாலர்

 06. லியோபார்டு 2A6 - ஜெர்மனி

06. லியோபார்டு 2A6 - ஜெர்மனி

இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மிகவும் பழமையான பீரங்கி மாடல். 1979ம் ஆண்டு லியோபார்டு 2 பீரங்கி மாடல் ராணுவ பயன்பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட மாடலான 2ஏ6 மாடல் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பீரங்கியில் 120மிமீ விட்டம் கொண்ட குண்டு வீச்சு குழல் பொருத்தப்பட்டுள்ளது. 1,500 எச்பி டீசல் எஞ்சின் கொண்ட பீரங்கி மணிக்கு 72 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. வெடிபொருட்களை தனியாக வைத்துக் கொள்ளும் வசதி கொண்டது. தற்போது ஜெர்மனி, கனடா, பின்லாந்து, கிரீஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த பீரங்கி 6.79 மில்லியன் டாலர் விலை கொண்டது. இதன் தொடர்ச்சியாக 2ஏ7+ என்ற மாடலை ஜெர்மனி அறிமுகம் செய்ய இருக்கிறது. அது 12 மில்லியன் டாலர் விலை கொண்டது.

05. எம்1 ஏ2 - அமெரிக்கா

05. எம்1 ஏ2 - அமெரிக்கா

1991ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை ஈராக் போரில் எம்1 ஆப்ராம்ஸ் பீரங்கி அமெரிக்கப் படைகளால் அதிகம் பயன்படுத்தப்பட்ட மாடல். இதன் தொடர்ச்சியாக வெளிவந்த மாடல்தான் எம்1ஏ2 எஸ்இபி. 69 டன் எடை கொண்ட இந்த பீரங்கி மாடலில் பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதில்,120மிமீ விட்டம் கொண்ட குண்டு வீச்சு குழல் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இலக்கை குறிவைத்து அடிப்பதில் கில்லாடியாக குறிப்பிடப்படுகிறது.

விலை: 8.5 மில்லியன் டாலர்

04. சேலஞ்சர்- 2 இங்கிலாந்து

04. சேலஞ்சர்- 2 இங்கிலாந்து

1998ம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது. போஸ்னியா, ஈராக் போர்களில் அமெரிக்காவின் எம்1 ஆப்ராம்ஸ் பீரங்கியுடன் இணைந்து செயலாற்றியது. 69 டன் எடை கொண்ட இந்த பீரங்கியை 1500 எச்பி டீசல் எஞ்சின் இயக்குகிறது. மிக இலகுவாக செலுத்தக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தை தவிர்த்து ஓமன் ராணுவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

விலை: 8.6 மில்லியன் டாலர்

 03. கே2 பிளாக் பாந்தர்- தென்கொரியா

03. கே2 பிளாக் பாந்தர்- தென்கொரியா

உலகின் மிகவும் நவீனமான பீரங்கி மாடல். மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்ய பீரங்கி மாடல்களின் சிறப்பம்சங்களை இந்த பீரங்கி கொண்டுள்ளது. 1,500 எச்பி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 120மிமீ விட்டம் கொண்ட குண்டு வீச்சு குழல் கொண்டது. எதிரி ஏவுகணைகளை வழியிலேயே தாக்கி அழிக்கும் தொழில்நுட்பமும், ஜாமர் வசதியும் உள்ளன. மூன்று வீரர்கள் இயக்கும் வசதி கொண்ட இந்த பீரங்கி தற்போது வடிவமைபப்பு மற்றும் சோதனை நிலையில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

விலை: 8.8 மில்லியன் டாலர்

 02. டைப் 10 - ஜப்பான்

02. டைப் 10 - ஜப்பான்

ஜப்பானின் டைப் 10 பீரங்கி மாடல் 2012ம் ஆண்டு அந்நாட்டின் ராணுவ பயன்பாட்டிற்கு வந்தது. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி எளிதாக செலுத்தக்கூடியது என்பதுடன், மணிக்கு 70 கிமீ வேகம் வரை சீறிச்செல்லும். 120 மிமீ விட்டம் கொண்ட குண்டு வீச்சு குழல் கொண்டது. இந்த பீரங்கியில் மூன்று வீரர்கள் செல்ல முடியும். குறிபார்த்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது.

விலை: 9.4 மில்லியன் டாலர்

01. ஏஎம்எக்ஸ்- 56 லெக்லெர்க் - பிரான்ஸ்

01. ஏஎம்எக்ஸ்- 56 லெக்லெர்க் - பிரான்ஸ்

உலகின் மிக விலையுயர்ந்த பீரங்கி இதுதான். 1992ல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்த பீரங்கி மாடலை 15 ஆண்டுகள் எடுத்து வடிவமைத்தனர். இதன் பாகங்களை எளிதாக மாற்ற முடியும். 1500 எச்பி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பீரங்கியில் 120மிமீ விட்டம் கொண்ட குண்டு வீச்சு குழல் உள்ளது. மூன்று வீரர்களால் இயக்கக்கூடியது. இதன் விலை 12.6 மில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்பட்டாலும், இது 23 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பீரங்கி மாடல்களின் விபரத்தை காணலாம்.

 01. அர்ஜுன்

01. அர்ஜுன்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் வடிவமைக்கப்பட்ட மாடல். இந்திய ராணுவத்தில் 119 எம்கே1 வகை அர்ஜுன் பீரங்கிகளும், 118 எம்கே2 மாடல் அர்ஜுன் பீரங்கிகளும் உள்ளன. எம்கே1 மாடல் 58.5 டன் எடையும், எம்கே2 மாடல் 68 டன் எடையும் உடையது. இந்த பீரங்கியை இயக்க கமாண்டர், ஓட்டுனர், துப்பாக்கி இயக்கும் வீரர், குண்டுகளை துப்பாக்கியில் ஏற்றும் வீரர் என 4 பேர் தேவைப்படுவர். பல நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது.

 02.டி90- இந்தியா

02.டி90- இந்தியா

ரஷ்யாவின் மூன்றாம் தலைமுறை டி90 பீரங்கிகளை 2001ம் ஆண்டு இந்தியா வாங்கியது. 310 டி90 பீரங்கிகளை இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. அர்ஜுன் பீரங்கியின் வடிவமைப்புப் பணிகள் தாமதமடைந்ததையடுத்து, இந்த டி90 பீரங்கிகளை இந்தியா ஆர்டர் செய்து வாங்கியது. மூன்று தவணைகளில் மொத்தம் 1050 டி90 பீரங்கிகளை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. 2020ம் ஆண்டிற்குள் மேலும் 1,000 டி90 பீரங்கிகளை ராணுவத்தில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

03. டி72

03. டி72

இதுவும் ரஷ்ய தயாரிப்புதான். தற்போது இந்திய ராணுவத்தில் 2,414 டி72 பீரங்கிகள் உள்ளன. இந்தியாவின் சொந்த தயாரிப்பான அர்ஜுன் பீரங்கி தயாரிப்பு திட்டத்தையடுத்து, இந்த பீரங்கிகளை ஓரங்கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அர்ஜுன் திட்டப்பணிகள் தாமதமடைந்ததையடுத்து, 1500 டி72 பீரங்கிகளை மேம்படுத்தப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Here is the list takes a look at 10 of the top-of-the-line tanks in use today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X