உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்!!

By Saravana

ஒரு நாட்டின் ராணுவ பலத்தை நிர்ணயிப்பதில், அந்த நாட்டின் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, ஏவுகணைகள், கவச வாகனங்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை உள்ளிட்டவற்றை வைத்து மதிப்பிடுவது பொதுவான விஷயம். அதேநேரத்தில், இவற்றில் பெரும்பாலான விஷயங்கள், உலகின் பெரும்பாலான நாடுகளில் கைவசம் உள்ளது. இல்லையெனில், அண்டை நாடு அல்லது ராணுவ பலம் வாய்ந்த வேறு ஒரு நாட்டுடனான ஒப்பந்த அடிப்படையில் தங்களது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் ஆயுதங்களை கொள்முதல் செய்து கொள்கின்றன.

ஆனால், இந்த விஷயத்தில் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் என்பது அனைத்து நாடுகளுக்கும் சாத்தியப்படாது ஒன்று. ஆம், ராணுவ பலத்தில் வல்லரசாக காட்டிக் கொள்ளும் நாடுகளில் கூட ஒரேயொரு விமானம் தாங்கி போர்க்கப்பல் இருப்பதே பெரிய விஷயம். அந்த அளவுக்கு அதன் தொழில்நுட்பம், அதனை கட்டுவதற்கான செலவீனம், பராமரிப்பு செலவு ஆகியவை மிக அதிகம். குறிப்பிட்டு கூற வேண்டுமெனில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் வல்லரசு நாடாக குறிப்பிடப்படும் சீனாவிடம் கூட ஒன்றேயொன்றுதான் உள்ளது. இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய டாப்-10 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் குறித்த விபரங்களை இப்போது ஸ்லைடரில் காணலாம்.

10. ஜூவான் கார்லோஸ்-I [ஸ்பெயின்]

10. ஜூவான் கார்லோஸ்-I [ஸ்பெயின்]

ஸ்பெயின் நாட்டு மன்னரின் பெயரில் இந்த கப்பல் அழைக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கடற்படையில் சேர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்று. இந்த கப்பலிலிருந்து போர் விமானங்களை செலுத்தி தாக்குதல் நடத்த முடியும் என்பதோடு, விசேஷமாக வடிவமைக்கப்பட்ட படகுகள் மூலமாக கடலிலிருந்து தரைக்கு பீரங்கிகளையும், ராணுவ வீரர்களையும் அனுப்பி, எதிரி நாட்டு கடலோர பகுதிகளில் எளிதில் தாக்குதல் நடத்த முடியும்.

Picture credit: Wiki Commons

கூடுதல் சிறப்புகள்

கூடுதல் சிறப்புகள்

இந்த கப்பல் 26,000 டன் எடையும், 757.3 அடி நீளமுடையது. 913 வீரர்கள் பணிபுரிகின்றனர். இந்த போர்க்கப்பல் மணிக்கு 39 கிமீ வேகத்தில் செல்லும். அதிகபட்சமாக 17,000 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கப்பலில் 20 ஏவி-8பி ஹாரியர்-2 மற்றும் எஃப்35பி போர் விமானங்கள் உள்ளன. சின்ஹூக் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும், 46 பீரங்கிகளும் இருக்கின்றன. 4 எல்சிஎம்-1இ படகுகள் மூலமாக பீரங்கிகளையும், வீரர்களையும் தரைப்பகுதிக்கு எடுத்து செல்லப்படும். இதுதவிர்த்து, ஏவுகணைகள், கண்காணிப்பு ரேடார்கள் என ஒரு மிதக்கும் கடற்படை தளமாக செயல்படக்கூடிய இந்த கப்பல் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது.

Picture credit: Pietje96/Wiki Commons

09. கவுர் 550 விமானம்தாங்கி போர்க்கப்பல்- இத்தாலி

09. கவுர் 550 விமானம்தாங்கி போர்க்கப்பல்- இத்தாலி

இத்தாலிய கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல். கடந்த 2009ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 800 அடி நீளமும், 27,100 டன் எடையும் கொண்டது. மணிக்கு 52 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த போர்க்கப்பல் இடைநில்லாமல் 13,000 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த கப்பலில் அதிநவீன ஏவுகணைகள், ரேடார் சாதனங்கள் உள்ளன.

Picture credit: Gaetano56/Wiki Commons

வல்லமை

வல்லமை

இந்த விமானத்தில் 20 முதல் 30 போர் விமானங்களை நிறுத்த முடியும். இந்த விமானத்தில் 8 ஏவி8பி ஹாரியர் 2 போர் விமானங்களும், 12 அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் இதர ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. விரைவில் பழைய விமானங்களுக்கு பதிலாக 15 அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை லாக்ஹீட் மார்ட்டின் எஃப்35பி லைட்னிங்-2 போர் போர் விமானங்களை இந்த போர்க்கப்பல் பெற இருக்கிறது.

Picture credit: Armando Mancini/Wiki Commons

08. சாவ் பாவ்லோ - பிரேசில்

08. சாவ் பாவ்லோ - பிரேசில்

சாவ் பாவ்லோ ஏ12 என்ற இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 1960ல் பிரான்ஸ் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2000ம் ஆண்டில் இந்த கப்பலை பிரான்ஸ் நாட்டிடமிருந்து பிரேசில் வாங்கி தனது கடற்படையில் சேர்த்தது. இந்த போர்க்கப்பல் 32,800 டன் எடையும், 869 அடி நீளமும் கொண்டது. இந்த கப்பலில் 1920 வீரர்கள் பணியாற்றுகின்றனர். மணிக்கு 59 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த கப்பல் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 13,900 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

Picture credit: Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த போர்க்கப்பலில் தற்காப்புக்காக அதிநவீன ரேடார் கருவிகள், ஏவுகணைகள், எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதுதவிர, 22 போர் விமானங்களையும், 17 ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

Picture credit: Eric Gaba/Wiki Commons

07. யுஎஸ்எஸ் எல்எச்ஏ-6- அமெரிக்கா

07. யுஎஸ்எஸ் எல்எச்ஏ-6- அமெரிக்கா

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. அதில், 10 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அணுசக்தியில் இயங்கக்கூடியவை. இந்த நிலையில், அமெரிக்காவின் பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட 4வது விமானம் தாங்கி போர்க்கப்பல் என்பதுடன், கடலில் இருந்து தரைத்தாக்குதல்களை நடத்தும் வசதி கொண்டதாக கட்டமைக்கப்பட்ட முதல் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் இது. கடந்த ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்த கப்பல் 844 அடி நீளமும், 44,971 டன் எடையும் கொண்டது. இந்த கப்பலில் 1687 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த கப்பலில் தற்போது 3 சீஹாக் ஹெலிகாப்டர்களும், 4 எம்வி 22 ஆஸ்பிரே விமானங்களும் உள்ளன. இதுதவிர,ஏவி-8பி ஹாரியர்-2 போர் விமானங்கள், எஃப்35 லைட்னிங்- 2 போர் விமானங்கள் உள்ளன. மணிக்கு 41 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

06. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா - இந்தியா

06. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா - இந்தியா

கடந்த 2013ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்று. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்த போர்க்கப்பலை மறுவடிவமைப்பு செய்து இந்தியா வாங்கியது. இந்த போர்க்கப்பலின் மதிப்பு 2.35 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 1,500 கடற்படை வீரர்கள் பணியாற்றும் இந்த கப்பல் அதிகபட்சமாக 45 நாட்கள் தொடர்ந்து கடலிலியே இருக்கக்கூடிய வசதிகள் கொண்டது. இந்த கப்பல் 930 அடி நீளமும், 45,400 டன் எடையும் கொண்டது.

விக்ரமாதித்யா சிறப்புகள்

விக்ரமாதித்யா சிறப்புகள்

இந்த கப்பலில் 20க்கும் அதிகமான மிக்-29 ரக விமானங்களையும், 10 ஹெலிகாப்டர்களையும் நிறுத்தி வைக்கவும், பயன்படுத்தவும் முடியும். மணிக்கு 59 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல் 13,000 கிமீ வரை பயணித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வல்லமை கொண்டது. அதிநவீன ரேடார் சாதனங்கள், ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்தியாவிடம் ஐஎன்எஸ் விராத் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் மிக பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விராத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 05. சார்லஸ் டி கல்லே

05. சார்லஸ் டி கல்லே

அமெரிக்காவிற்கு அடுத்து அதிக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் உலகின் இரண்டாவது பெரிய நாடு பிரான்ஸ். அந்த நாட்டின் சார்லஸ் டி கல்லே என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், அந்த நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்கு பரைசாற்றுவதில் முக்கிய இடம் வகிக்கிறது. சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இந்த போர்க்கப்பலை அந்நாட்டு அரசு உடனடியாக அனுப்பி வைத்தது நினைவிருக்கலாம்.

Picture credit: USN/Wiki Commons

வல்லமை

வல்லமை

இது அணுசக்தியில் இயங்கும் போர்க்கப்பல். 2000ம் ஆண்டில் பிரான்ஸ் கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்த போர்க்கப்பலில் ஒரே நேரத்தில் 40 போர் விமானங்களை நிறுத்த முடியும். இந்த போர்க்கப்பல் குறித்த விரிவானத் தகவல்களை கீழே உள்ள இணைப்பில் சென்று முழுமையாக படிக்கலாம்.

சார்லஸ் டி கல்லே விரிவானத் தகவல்கள்

Picture credit: Wiki Commons

04. அட்மிரல் கஸ்னெட்சோவ்- ரஷ்யா

04. அட்மிரல் கஸ்னெட்சோவ்- ரஷ்யா

ரஷ்ய கடற்படையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரே விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுதான். இதன் அதிகபட்ச எடை 55,200 டன் என்று தெரிவிக்கப்படுகிறது. சக்திவாய்ந்த ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் விமானங்களை கூட எளிதில் கையாளும் திறன் கொண்டது. 1,001 அடி நீளம் கொண்ட இந்த போர்க்கப்பலில் 1,690 வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

Picture credit: Gaz Armes/Wiki Commons

 வல்லமை

வல்லமை

இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலில் அதிகபட்சமாக 52 விமானங்களை நிறுத்த முடியும். தற்போது 14 எஸ்யூ- 33 போர் விமானங்களும், 20 மிக் -29 ரக போர் விமானங்களும், 4 சுகோய் எஸ்யூ-25 யுடிஜி போர் விமானங்களும் உள்ளன. தவிர்த்து, 4 கமோவ் கேஏ27எல்டி32 ஹெலிகாப்டர்களும், 11 கமோவ் கேஏ27பிஎல் ரக ஹெலிகாப்டர்களும், 2 கமோவ் கேஏ27 பிஎஸ் ரக ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. பணியாளர்களுக்காக 3,857 அறைகள் உள்ளன. இந்த போர்க்கப்பல் மணிக்கு 54 கிமீ வேகத்தில் செல்லும். அதிகபட்சமாக 45 நாட்கள் அல்லது 15,700 கிமீ தூரம் வரை பயணித்து கண்காணிப்பில் ஈடுபட முடியும். இதனுடன் மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் கட்டப்பட துவங்கியது. வர்யாக் என்ற பெயரில் கட்டப்பட்ட அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனாவிடம் விற்பனை செய்துவிட்டனர். அதுவே தற்போது லயோனிங் என்ற பெயரில் சீன கடற்படையில் பயன்பாட்டில் உள்ளது.

Picture credit: Wiki Commons

03. லயோனிங்- சீனா

03. லயோனிங்- சீனா

ரஷ்யாவிடமிருந்து ஹல் எனப்படும் அடிச்சட்டத்தை மட்டும் வாங்கி பின்னர் சொந்த முயற்சியில் சீனா கட்டமைத்த விமானம் தாங்கி போர்க்கப்பல் இது. இந்தியாவிடம் தற்போது இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், சீனாவிடம் இருக்கும் ஒரேயொரு விமானம் தாங்கி போர்க்கப்பல் இது. 2012ம் ஆண்டு சீன கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த போர்க்கப்பல் 59,100 டன் எடையும், 999 அடி நீளமும் கொண்டது. 45 நாட்கள் வரை தொடர்ந்து கடலிலேயே பயணித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வல்லமை கொண்டது. இந்த போர்க்கப்பலில் 1960 வீரர்கள் பணியாற்றுகின்றனர். 3,857 அறைகள் உள்ளன.

Picture credit: VaryagWorld

 வல்லமை

வல்லமை

மணிக்கு 59 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல் 7,130 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும் திறன் கொண்டது. இந்த போர்க்கப்பலில் 24 சென்யாங் ஜே15 போர் விமானங்கள், 6 சாங்கே இசட்18 ரக ஹெலிகாப்டர்கள் என தன்னகத்தே கொண்டிருக்கிறது. மொத்தமாக 36 விமானங்களை நிறுத்த முடியும்.

Picture credit: VaryagWorld

 02. எச்எம்எஸ் குயின் எலிசபெத்- இங்கிலாந்து

02. எச்எம்எஸ் குயின் எலிசபெத்- இங்கிலாந்து

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை கவுரவிக்கும் வகையில், பெயர் சூட்டப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 2017ம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் நேவி கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்த போர்க்கப்பல் 70,600 டன் எடை கொண்டது. 920 அடி நீளம் கொண்ட இந்த போர்க்கப்பலில் 1,600 வீரர்கள் பணியாற்றுவார்கள். மணிக்கு 46 வேகத்தில் செல்லும் வல்லமை கொண்ட இந்த போர்க்கப்பல் 19,000 கிமீ தூரத்துக்கு கரைக்கு வராமலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.

வல்லமை

வல்லமை

இந்த போர்க்கப்பலில் அதிகபட்சமாக 40 போர் விமானங்களை நிறுத்த முடியும். எஃப்-35 லைட்னிங்-2 போர் விமானங்கள், மெர்லின், வைல்டு கேட், சின்ஹூக், அப்பாச்சி ஆகிய ஹெலிகாப்டர்கள் நிறுத்த முடியும். விமானங்களை ஓடுபாதையில் கொண்டு வருவதற்கு இரண்டு லிஃப்ட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிநவீன ரேடார்கள், ஏவுகணைகள் என இங்கிலாந்தின் படைபலத்தை பன்மடங்கு கூட்ட தயாராகி வருகிறது.

01. நிமிட்ஸ் க்ளாஸ்- அமெரிக்கா

01. நிமிட்ஸ் க்ளாஸ்- அமெரிக்கா

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுதான். நிமிட்ஸ் க்ளாஸ் வரிசையில் முதல் போர்க்கப்பல் 1975ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த வரிசையில் கடைசி போர்க்கப்பல் 2009ல் அமெரிக்க கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு நிமிட்ஸ் க்ளாஸ் போர்க்கப்பலும் 50 ஆண்டுகள் பயன்பாட்டில் வைத்திருக்கும் நோக்குடன் கட்டப்பட்டது. 1,040 அடி நீளம் கொண்ட இந்த போர்க்கப்பலில் விமானம் நிறுத்தி வைப்பதற்கான பகுதி மட்டும் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒரு லட்சம் டன் எடை கொண்டது. இது அணுசக்தியில் இயங்கும் போர்க்கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Picture credit: Wiki Commons

வல்லமை

வல்லமை

இந்த கப்பலில் ஒரேநேரத்தில் 60 போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மணிக்கு 56 கிமீ வேகம் வரை செல்லத்தக்க இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு 20 முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை அணு எரிபொருள் நிரப்பினால் போதுமானது. எனவே, எரிபொருளுக்காக கரைக்கு வரவேண்டிய அவசியமில்லை. இந்த போர்க்கப்பலில் 5,000க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். நவீன ரேடார்கள், ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மொத்தமாக 85 முதல் 90 போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் கொண்ட மிதக்கும் கடற்படை தளமாக கூறலாம். இதுபோன்று இந்த ரகத்தில் 10 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அமெரிக்காவிடம் உள்ளன. அத்துடன் மொத்தமாக 20 விமானம் தாங்கி போர்க்கப்பல்களுடன் யாருடனும் ஒப்பிட முடியாத உயரத்தில் உள்ளது அமெரிக்கா.

Picture credit: USN/Wiki Commons

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

01. இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்...

02. ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்க பிரான்ஸ் அனுப்பிய விமானம் தாங்கி போர்க்கப்பலின் சிறப்புகள்

03. இந்தியாவின் புதிய ஐஎனஎஸ் விக்ரமாதித்யா கப்பலின் சிறப்புகள்

எங்களின் சமூக வலைதள பக்கங்கள்

எங்களின் சமூக வலைதள பக்கங்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் சமூக வலைதள பக்கங்கள்

ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் படிக்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Ten Largest Aircraft Carriers in The World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X