இந்தியாவின் விலை உயர்ந்த டாப் - 10 பைக் மாடல்கள்!

Written By:

இந்தியாவில் 100சிசி பைக் மார்க்கெட் மிக வலுவானதாக இருந்தாலும், தற்போது விலையுயர்ந்த பைக்குகள் மீதான நாட்டமும், பயன்பாடும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு சாலைகளிலும், சினிமாவிலும் பார்த்து வியந்த விலையுயர்ந்த பைக்குகளை தற்போது இந்திய சாலைகளில் சர்வ சாதாரணமாக காணும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  

பாதுகாப்பு அம்சங்கள், செயல்திறனில் மட்டுமல்ல, விலையிலும் சில சொகுசு கார்களையே விஞ்சுகின்றன இந்த பட்டியலில் இருக்கும் பைக் மாடல்கள். வாருங்கள், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டாப் - 10 காஸ்ட்லி பைக் மாடல்களை காணலாம்.

10. அப்ரிலியா ஆர்எஎஸ்வி4

10. அப்ரிலியா ஆர்எஎஸ்வி4

பியாஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் அப்ரிலியா பிராண்டின் சூப்பர் பைக் மாடல். தோற்றத்திலும், செயல்திறனிலும் சிறப்பான மாடல்களில் ஒன்று. அப்ரிலியா பிராண்டின் பந்தய பைக்குகளின் அடிப்படையில், உருவாக்கப்பட்ட ஸ்ட்ரீட் பைக் மாடல். ரூ.29.87 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் இந்தியாவின் மிக சிறப்பான சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 999.6சிசி எஞ்சின் 180 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்ட இந்த பைக் 179 கிலோ எடையுடையது. லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் தருமாம்.

09. பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

09. பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் பிரபலமான சூப்பர் பைக் மாடல். டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின் போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. நடிகர் அஜீத் வசம் இருக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் விலை என்ன தெரியுமா?

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பைக் ரூ.33.14 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் இந்த பைக் அதிகபட்சமாக 193 பிஎச்பி பவரை அளிக்கும். 204 எடை கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

08. கவாஸாகி நின்ஜா எச்2

08. கவாஸாகி நின்ஜா எச்2

கவாஸாகி நிறுவனத்தின் லேட்டஸ்ட் சூப்பர் பைக் மாடல். கவாஸாகி எச்2ஆர் என்ற பந்தய களத்தில் ஓட்டுவதற்கான மாடலை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாடர்ன் டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் வசீகரிக்கும் இந்த பைக் தல டோணியிடம் உள்ளது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பைக் ரூ.35.04 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் இந்த பைக் 238 கிலோ எடை கொண்டது.

07. யமஹா ஆர்1 எம்

07. யமஹா ஆர்1 எம்

லிட்டர் க்ளாஸ் பைக் எனப்படும் 1 லிட்டர் மற்றும் அதற்கு மேலான எஞ்சின் ரகத்தில் மிக பிரபலமான மாடல். ஆனால், இது பந்தய களத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அம்சங்களை கொண்டிருக்கிறது. கார்பன் ஃபைபர் பாகங்களுடன் சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லை.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்தியாவில் ரூ.35.38 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் இருக்கும் 998சிசி எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரை வழங்கும். இந்த பைக் 200 கிலோ எடை கொண்டது.

06. ஹோண்டா கோல்டுவிங்

06. ஹோண்டா கோல்டுவிங்

இந்தியாவில் ஹோண்டா இருசக்கர வாகனப்பிரிவு விற்பனை செய்யும் மிகவும் விலையுயர்ந்த மாடல். இது நீண்ட தூர பயணங்களுக்கான பிரத்யேக அம்சங்களை கொண்ட டூரர் ரகத்தை சேர்ந்தது. இந்த பைக்கில் ஏர்பேக் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இருவர் பயணிக்க வசதியான இருக்கை அமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பொருட்களை வைப்பதற்கான இடவசதி என அசத்தலான அம்சங்களை கொண்டது. இந்த பைக்கில் இருக்கும் 1832சிசி எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 167 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக் 363 கிலோ எடை கொண்டது.

05. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் க்ளைடு

05. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் க்ளைடு

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த இரண்டாவது மாடல். க்ரூஸர் வகையை இந்த மோட்டார்சைக்கிளிலும் ஆற்றல் வாய்ந்த எஞ்சின் மற்றும் வசதியான இருக்கையுடன் கவர்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரூ.37.28 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்ப்பட்டிருப்பதுடன், பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 1,690சிசி எஞ்சின் அதிகபட்சமாக 138 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 372 கிலோ எடை கொண்டது.

04. பிஎம்டபிள்யூ கே1600

04. பிஎம்டபிள்யூ கே1600

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்படுகிறு. இது க்ரூஸர் பைக்குகளைவிட சிறப்பான கிராண்ட் டூரர் ரகத்தை சேர்ந்த மோட்டார்சைக்கிள்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரூ.40.08 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் இருக்கும் 1,649சிசி எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த பைக் 321 கிலோ எடை கொண்டது. பாதுகாப்பு, செயல்திறன் என அனைத்திலும் சிறப்பான மாடல்.

 03. இந்தியன் ரோட்மாஸ்டர்

03. இந்தியன் ரோட்மாஸ்டர்

அமெரிக்காவின் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் காஸ்ட்லியான பைக் மாடல். பிரம்மாண்டமான இந்த பைக்கில் சிறப்பம்சங்களை பெரிய பட்டியலே போட முடியும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரூ.45.98 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் இருக்கும் 1811சிசி எஞ்சின் 139 என்எம் டார்க்கை வழங்கும். லெதர் இருக்கை, பொழுதபோக்கு மற்றும் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, பாதுகாப்பு என அனைத்திலும் சிறப்பான மோட்டார்சைக்கிள்.

 02. டுகாட்டி பனிகேல் ஆர்

02. டுகாட்டி பனிகேல் ஆர்

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த சூப்பர் பைக் மாடல். இந்த பைக்கில் அதிக அளவில் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால்,வெறும் 184 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பைக் ரூ.55.49 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் இருக்கும் 1,198சிசி எஞ்சின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரை அளிக்கும்.

01. ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட்

01. ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட்

இந்தியாவின் விலையுயர்ந்த பைக் மாடல் என்ற பெருமையை ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட் பெறுகிறது. இதுவும் டூரர் வகை மோட்டார்சைக்கிள். நீண்ட தூர பயணங்களை இலகுவாக்கும் பல அம்சங்களை பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் இருக்கும் 1,801சிசி எஞ்சின் அதிகபட்சமாக 156 என்எம் டார்க்கை அளிக்கும். இந்த பைக் 433 கிலோ எடை கொண்டது. எனவே, ரிவர்ஸ் கியரும் உண்டு. ரூ.61.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
மேலும்... #டாப் 10 #top 10
English summary
Ten Most Expensive Bikes In India 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark