இந்தியாவின் விலையுயர்ந்த டாப் 10 கார்கள்- விபரம்!

Written By:

பட்ஜெட் கார்களுக்கான மார்க்கெட் என்ற முத்திரையிலிருந்து இந்திய கார் மார்க்கெட் மெல்ல விடுபட்டு வருகிறது. தற்போது விலையுயர்ந்த கார்களுக்கான வரவேற்பை கண்டு பல முன்னணி வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து வருகின்றன.

அந்த வகையில், போர்ஷே, புகாட்டி என உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில், விலையின் அடிப்படையில் டாப் 10 இடங்களில் இருக்கும் கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

போர்ஷே 911 டர்போ எஸ்

போர்ஷே 911 டர்போ எஸ்

விலை: ரூ.2.8 கோடி

போர்ஷே நிறுவனத்தின் கூபே பாடி ஸ்டைல் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். ரூ.2.8 கோடி விலையில் கிடைக்கிறது. இந்த காரில் 3.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 560 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 318 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

09. பென்ட்லீ கான்டினென்டல் ப்ளையிங் ஸ்பர்

09. பென்ட்லீ கான்டினென்டல் ப்ளையிங் ஸ்பர்

விலை: ரூ.3.22 கோடி

இந்த கார் வி8 மற்றும் டபிள்யூ12 ஆகிய இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் இந்தியாவில் கிடைக்கிறது. வி8 எஞ்சின் மாடல் அதிகபட்சமாக 500 பிஎச்பி பவரையும், 660என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. மற்றொரு டபிள்யூ12 எஞ்சின் மாடல் அதிகபட்சமாக 616 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வி8 மாடல் 0- 100 கிமீ வேகத்தை 5.2 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சமாக மணிக்கு 295 கிமீ வேகம் வரையிலும் செல்லும். டபிள்யூ12 மாடல் 0- 100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளிலேயே எட்டிவிடும். மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

08. ஃபெராரி கலிஃபோர்னியா

08. ஃபெராரி கலிஃபோர்னியா

விலை: ரூ.3.30 கோடி

கடந்த சில நாட்களுக்கு முன் ஃபெராரி நிறுவனம் நேரடி வர்த்தகத்தை இந்தியாவில் துவங்கியது. முதல் மாடலாக ஃபெராரி கலிஃபோர்னியா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த காரில் 3,855சிசி வி8 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 550 பிஎச்பி பவரையும், 755 என்எம் டார்க்கையும் வழங்கும். 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும். ஃபெராரி நிறுவனத்தின் விலை குறைவான மாடலும் இதுதான். எனவே, ஃபெராரி புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும்போது இந்த பட்டியலில் மாற்றம் ஏற்படும். லாஃபெராரி காரை தவிர்த்து, அனைத்து மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஃபெராரி தெரிவித்திருக்கிறது. .

07. லம்போர்கினி ஹூராகென்

07. லம்போர்கினி ஹூராகென்

விலை: ரூ.3.43 கோடி

லம்போர்கினியின் வெற்றிகரமான மாடலாக வலம் வந்த லம்போ கல்லார்டோ காருக்கு மாற்றாக வந்த புதிய மாடல்தான் ஹூராகென் கார். கல்லார்டோவில் பயன்படுத்தப்பட்ட அதே 5.2 லிட்டர் வி10 எஞ்சின்தான் இந்த காரிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 610 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்ட இந்த கார் மணிக்கு 325 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

06. அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ்

06. அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ்

விலை: ரூ.3.80 கோடி

மிக ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்று. இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 565 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. இந்த கார் 0- 100 கிமீ வேகததை 4.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 295 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

05. ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்

05. ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்

விலை: ரூ.4.60 கோடி

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் அசத்தலான டிசைன் கொண்ட மாடல். இந்த காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 624 பிஎச்பி பவரையும் 800 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்ட எஞ்சின் உள்ளது. 0 - 100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 250 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது

04. லம்போர்கினி அவென்டேடார்

04. லம்போர்கினி அவென்டேடார்

விலை: ரூ.5.20 கோடி

லம்போர்கினியின் மதிப்புக்கு மதிப்பு சேர்த்து வரும் மாடல். இந்த காரில் வி12 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 690 எச்பி பவரையு்ம், 690 என்எம் டார்க்கையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.0 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 350 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

03. பென்ட்லீ மூசான்

03. பென்ட்லீ மூசான்

விலை: ரூ.5.50 கோடி

ரோல்ஸ்ராய்ஸ்க்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வரும் மாடல். இந்த காரில் 6.75 லிட்டர் வி8 டர்போ எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 505 பிஎச்பி பவரையும், 1020 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் வல்லமை கொண்ட எஞ்சின் இது. மேலும், 0 - 100 கிமீ வேகத்தை 5.3 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சமாக மணிக்கு 296 கிமீ வேகம் வரை செல்லும்.

02. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ்- II

02. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ்- II

விலை: ரூ.8 கோடி

இந்தியாவில் ஸ்டான்டர்டு மற்றும் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் என இரண்டுவிதமான மாடல்களில் வருகிறது. ஸ்டான்டர்டு மாடல் ரூ.8 கோடியிலும், நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட மாடல் ரூ.9 கோடி விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர் செய்து 4 முதல் 6 மாதங்களில் டெலிவிரி கொடுக்கப்படுகிறது. இந்த இரு மாடல்களிலும் 6.7 லிட்டர் வி12 எஞ்சினஅ உள்ளது. அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் வழங்கும். 0 -100 கிமீ வேகத்தை 5.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும்.

 01. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு

01. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு

விலை: ரூ.8.9 கோடி

சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் பயணிப்பவர்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பையும், சொகுசு அம்சங்களையும் ஒருங்கே வழங்கும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் பாதுகாப்பான கார் மாடலாகவும் வர்ணிக்கப்படுகிறது. இந்த காரில் வி12 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 530 பிஎச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 புகாட்டி வேரான்

புகாட்டி வேரான்

விலை: ரூ.38 கோடி

அனைத்து புகாட்டி வேரான் கார்களும் விற்பனை செய்யப்பட்டுவிட்டாலும், இந்தியாவில் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்பட்ட என்ற புதிய கார் எனும் பெருமைக்குரியதால் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. ஆர்டர் செய்து 6 முதல் 8 மாதங்களில் கைக்கு கிடைக்கும். இந்த காரில் 987 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 8.7 லிட்டர் எஞ்சின் உள்ளது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சம் மணிக்கு 407 கிமீ வேகம் வரை செல்லும். நகரச்சாலைகளில் லிட்டருக்கு 3.3 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 5.3 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 
English summary
Here is the list of the 10 most expensive cars are available in India.
Story first published: Monday, August 31, 2015, 14:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark