விம்பிள்டன் ஜுரம்... பிரபல டென்னிஸ் வீரர்களின் 'ஹாட்' கார்கள்!!

127வது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு வீரர், வீராங்கனைகள் ஆடி வருகின்றனர்.

களத்தில் அசுர வேகத்தில் பந்தை திருப்பியடிக்கும் வீரர்களின் இரும்பு மனம் படைத்த கைகளுக்கு, வெளியிலும் தீணி போடுவது அவர்கள் வைத்திருக்கும் சூப்பர் கார்கள்தான். அந்த வகையில், பிரபல டென்னிஸ் வீரர்கள் வைத்திருக்கும் கார் விபரங்களை காணலாம்.

போர்ஷே கரீரா 4எஸ் கன்வெர்ட்டிபிள்

போர்ஷே கரீரா 4எஸ் கன்வெர்ட்டிபிள்

400 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் 3.6 லி எஞ்சின்

வெறும் 4.5 வினாடிகளில் 0-96 கிமீ வேகத்தை எட்டும் திறன்

மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்

சொகுசும், தரமும் இழைந்தோடும் இன்டிரியர்

இதுதான் போர்ஷே 911 கரீரா 4எஸ் கன்வெர்ட்டிபிள். இந்த காரை வைத்திருப்பது ஒரு பிரபல வீராங்கனை? அவர் யாரென்று தெரிகிறதா...

மரியா ஷரபோவோ

மரியா ஷரபோவோ

ஆக்ரோஷத்திலும் அழகு ததும்பும் ஆறடி தங்கச்சிலை மரியா ஷரபோவாதான் அது. இவர் போர்ஷே விளம்பர தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அஸ்டன் மார்ட்டின் வி8 வேண்டேஜ் கூபே

அஸ்டன் மார்ட்டின் வி8 வேண்டேஜ் கூபே

420 பிஎச்பி சக்தியுடன் பிளிரும் எஞ்சின்

100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் தொட்டு விடும் திறன்

மணிக்கு 290 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்

சத்தமில்லாமல் முத்தமிட தூண்டும் டிசைன்

இதுதான் அஸ்டன் மார்ட்டின் வி8 வேண்டேஜ் கூபே. அதுசரி.. இந்த காரை வைத்திருக்கும் டென்னிஸ் பிரபலம் யாரென்று தெரிய அடுத்த ஸ்லைடுக்கு வந்துவிடுங்கள்.

ஆன்டி முரே

ஆன்டி முரே

நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரேதான் அவர். இங்கிலாந்தை சேர்ந்த இவர் சமீபத்தில் பிபிசிக்கு பேட்டியளித்தபோது தன்னிடம் ஃபெராரி எஃப்430, அஸ்டன் மார்ட்டின் வி8 வேண்டேஜ், ஜாகுவார் எக்ஸ்கேஆர் ஆகிய கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி

567 பிஎச்பி சக்தியை அளிக்கும் 6.0 லிட்டர் எஞ்சின்

மணிக்கு அதிகபட்சமாக 318 கிமீ செல்லும் ஆற்றல்

0-100 கிமீ வேகத்தை 4.5 நொடிகளில் எட்டும் திறன்

ரோல்ஸ்ராய்ஸ்க்கு போட்டி போடும் டிசைன், தரம், சொகுசு

இதுதான் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார். எல்லாம் சரி இந்த சிவப்பு காருக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

 செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ்

வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காரைத்தான் முந்தைய ஸ்லைடில் பார்த்தீர்கள். சிவப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு என்கிறார் அவர்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி

563 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 6.2 லிட்டர் எஞ்சின்

0-97 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் தொட்டுவிடும் திறன்

மணிக்கு 340 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும் ஆற்றல்

உலகம் முழுவதும் பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளின் விருப்ப கார்

இதுதான் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் சுருக்கமான பார்வை. அதுசரி, பெர்ஃபார்மென்சுக்கு பெயர் போன இந்த காரை வைத்திருக்கும் பிரபலம் அடுத்த ஸ்லைடில்...

ரோஜர் ஃபெடரெர்

ரோஜர் ஃபெடரெர்

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரரிடம் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி மற்றும் எஸ்எல்ஆர் மாடல்கள் இருக்கின்றன. பென்ஸ் ஏஎம்ஜியின் விளம்பர தூதராகவும் இருக்கும் இவர் கார் மாடல்களை பிரபலப்படுத்துவதற்காக சில ஸ்டன்ட் நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ எம்3

பிஎம்டபிள்யூ எம்3

414 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.0 லி வி8 எஞ்சின்

0-97 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் தொடும் திறன்

மணிக்கு 250 கிமீ வரை செல்லும் ஆற்றல்

சொக்க வைக்கும் கூபே டிசைன்

இதுதான் பிஎம்டபிள்யூவின் பெர்ஃபார்மென்ஸ் கார் வரிசையில் இடம் பெற்றிருக்கும் எம்3. 18 வயது பூர்த்தியான உடனே இந்த காரை ஓடிச் சென்று வாங்கிய அந்த இளம் வீரர் யார்?... அடுத்த பக்கத்தை சொடுக்குங்கள்.

பெர்னார்டு டோமிக்

பெர்னார்டு டோமிக்

வளர்ந்து வரும் டென்னிஸ் வீரரான பெர்னார்டு டோமிக்தான் அவர். தனது பிறந்தநாளான 21ந் தேதியை தனது காருக்கான பதிவு எண்ணாக கேட்டு வாங்கியுள்ளார். ஆனால், இந்த காரை ஓட்டுவதற்கு புரொவிஷனல் லைசென்ஸ் மட்டுமே வைத்துள்ளார். இதன்படி, டென்னிஸ் பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். ஆனால், விதியை மீறியதாக இந்த காரை போலீசார் பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டுவிட்டனராம்.

 ஆடி ஆர்8 எல்எம்ஸ் ஜிடி

ஆடி ஆர்8 எல்எம்ஸ் ஜிடி

493 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி10 எஞ்சின்

0-97 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டும் திறன்

மணிக்கு 317 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்

ஸ்போர்ட்ஸ் காருக்குரிய சாமுத்ரிகா லட்சணம்

ஆகிய அம்சங்களை கொண்ட ஆடியின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்தான் இது. இந்த ஆற்றல் மிக்க காரை கட்டிக் கையாள்வது யார் தெரியுமா?...

நோவாக் ஜோகோவிக்

நோவாக் ஜோகோவிக்

செர்பியா வீரரான ஜோகோவிக்தான் அந்த காரை கட்டி ஆளும் டென்னிஸ் பிரபலம். இதில், வேடிக்கையான விஷயம், ஆடி கார் வைத்திருக்கும் அவர்தான் செர்பிய நாட்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதர். பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டு கார்களை ரொம்ப பிடிக்கும் என்றும் இவர் கூறியிருக்கிறார்.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ்

அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ்

510 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வி12 எஞ்சின்

0-100 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டும் திறன்

மணிக்கு 305 கிமீ டாப் ஸ்பீடு

கார் இப்படித்தான் இருக்கணும் என்று கூற வைக்கும் அம்சங்கள்

ரஃபேல் நடால்

ரஃபேல் நடால்

அந்த காரை வைத்திருக்கும் டென்னிஸ் பிரபலம் ரஃபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவருக்கு அஸ்டன் மார்ட்டின் மீது அலாதி பிரியமாம். முன்னாள் நம்பர்-1 ஆன இவர் தற்போது தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ளார்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X